ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
அத ப்ருத்யாநநுஜ்ஞாப்ய க்ருத்வா சேத: ஸுபாஸ்ரயே|
ஸயநீயம் பரிஷ்க்ருத்ய ஸயானம் ஸம்ஸ்மராமி தம்||
பதவுரை: அத – முற்கூறியபடியே சிஷ்யர்களுக்கு தத்வார்தோபதேசம் செய்தல் முதலியவற்றால் இரிவில் இரண்டு யாமங்கள் கழிந்தபிறகு, ப்ருத்யாந் – முற்கூறிய சிஷ்யர்களை அநுஜ்ஞாப்ய – விடைகொடுத்து அனுப்பிவிட்டு, ஸுபாஸ்ரயே – கண்களையும் மனத்தையும் கவர்கின்ற எம்பெருமானுடைய திருமேனியில், சேத: க்ருத்வா – தமது திருவுள்ளத்தைச் செலுத்தி (அதை தியானம் செய்து) பிறகு, ஸயநீயம் – படுக்கையை, பரிஷ்க்ருத்ய – அலங்கரித்து, ஸயானம் – கண்வளர்கின்ற, தம் – அந்த மணவாளமாமுநிகளை ஸம்ஸ்மராமி – த்யானம் செய்கிறேன்.
கருத்துரை: ‘க்ருத்வா சேத: ஸுபாஸ்ரயே’ – என்றதனால் இரவில் செய்யவேண்டிய பகவத்த்யாநமாகிய யோகம் என்று கூறப்பட்டது. ‘தத: கநக பர்யங்கே’ (4) என்று முன்பு கூறப்பட்ட பகவத்த்யாநத்துக்கு உரிய ஆசனத்தை விட்டு எழுந்திருந்து, ஸ்தோத்ரம் செய்த சிஷ்யர்களை கடாக்ஷித்து அவர்களை விடைகொடுத்தனுப்பிவிட்டு, படுக்கைக்கு அலங்காரமாக பகவானை த்யானம் செய்துகொண்டே திருக்கண்வளருகிறார் மாமுனிகள். அத்தகைய மாமுனிகளைத் தாம் த்யானம் செய்கிறார் இவ்வெறும்பியப்பா. (மாமுனிகள் தாம் திருவனந்தாழ்வானுடைய திருவவதாரமாகையாலே அப்ராக்ருமான அவருடைய திருமேனியழகு திருக்கண் வளருங்காலத்தில் இரட்டிதிருக்குமாகையால் த்யானம் செய்துகொண்டேயிருக்கத் தடையில்லையிரே. மாமுனிகளுக்கு ஸுபாஸ்ரயம் எம்பெருமானுடைய திருமேனி, இவருக்கு ஸுபாஸ்ரயம் மாமுனிகளுடைய திருமேனி என்க. யதீந்த்ரப்ரவணாரான மாமுனிகள் எம்பெருமானை த்யாநிப்பது யதீந்த்ரரான எம்பெருமானாருடைய திருவுள்ள உகப்புக்காக என்றும் சௌம்யஜாமாத்ருயோகீந்த்ரரை (மாமுனிகளை) த்யானம் செய்வது, தம்மை மணவாளமாமுனிகளின் நிர்பந்தமாக நியமித்தருளிய இவர்தம் திருவாரதனப்பெருமாளாகிய சக்ரவர்த்தித்திருமகனாரின் திருவுள்ளவுகப்புக்காக என்றும் கொள்ளலாம். சக்ரவர்த்தித்திருமகனாரின் நியமனம் யதீந்த்ரப்ரவணப்ரபாவத்திலும் இவரருளிய வரவரமுநி சதகத்திலும் காணத்தக்கது.
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org