உத்தர​ திநசர்யை – 12

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ வரவரமுநி திநசர்யை

<< உத்தர திநசர்யை – 11

இதிஸ்துதிநிபந்தேந நஸூசிதஸ்வமநீஷிதாந்|
ப்ருத்யாந் ப்ரேமார்த்ரயா த்ருஷ்ட்யா ஸிஞ்சந்தம் சிந்தயாமி தம்||

பதவுரை: இதி – முற்கூறிய இந்த ஆறு ஸ்லோகங்களின்படியே, ஸ்துதி நிபந்தேந – ஸ்தோத்ரமாகிய பிரபந்தத்தினால், ஸூசித ஸ்வமநீஷிதாந் – குறிப்பிடப்பட்ட தாம்தாம் விரும்பிய புருஷார்த்தங்களை (பயன்களை) உடைய, ப்ருத்யாந் – விற்கவும் வாங்கவும் உரிய கோயிலண்ணன் முதலிய சிஷ்யர்களை, ப்ரேம ஆர்த்ரயா – ப்ரீதியினால் குளிர்ந்திருக்கிற, த்ருஷ்ட்யா – திருக்கண்ணோக்கத்திலே, ஸிஞ்சந்தம் – குளிரச்செய்துகொண்டிருக்கிற, தம் – அந்த மணவாளமாமுனிகளை, சிந்தயாமி – எப்போதும் த்யாநம் செய்கிறேன்.

கருத்துரை: இதுவரையில் ஆசார்யரான மணவாளமாமுனிகளைப் பற்றி திநசர்யை என்னும் ஸ்தோத்ரக்ரந்தம் இயற்றி அனுபவிக்கப்பட்டது, இனி ஸ்தோத்ரத்தினால் உண்டான ப்ரீதியையுடைய மணவாளமாமுனிகளை அனுபவிக்கிறார் எறும்பியப்பா. இதி என்பது இவ்வாறாக என்றபடி, முற்கூறிய ஆறு ஸ்லோகங்களிலுள்ள பொருளின்படியே என்று கருத்து. அவற்றில் ‘தவம் மே பந்து:’ (7) என்று தொடங்கி ‘யாயா வ்ருத்தி’ (10) என்பதீறாக உள்ள நான்கு ஸ்லோகங்கள் இவர் அருளிய வரவரமுநி சதகத்திலும் படிக்கப்பட்டுள்ளன. ‘உந்மீலபத்ம’ (6) என்ற இவற்றின் முன் ஸ்லோகமும், ‘அபகதமதமாநை’ என்ற பின் ஸ்லோகமும் இவற்றோடு படிக்கப்பட்டு வருவதானாலும், இவ்விரண்டினை வேறொருவர் இயற்றியதாக யாரும் இருகாறும் கூறாமையாலும், இவ்விரண்டும் அன்நாங்கினோடு ஒப்ப எறும்பியப்பாவே அருளிசெய்தாரென்று கொள்ளுதல் பொருந்தும். இவ்வாறு ஸ்லோகங்களுக்குள்ளே ‘திவ்யம் தத்பாதயுக்மம் திஸது’ (6), ‘தவபதயுகம்தேஹி’ (9), ‘அங்க்ரித்வயம் பஸ்யந் பஸ்யந்’ (8) என்று மூன்று ஸ்லோகங்களில் மாமுனிகள் தம் திருவடிகளைத் தலைமேலே வைத்தருளவேணுமென்றும் அவற்றை இப்போதும் சேவிக்கவெண்டுமென்றும் பிரார்த்தனை உள்ளடிங்கியிருப்பது பொருந்துமென்று கொண்டு இந்த ஆறு ஸ்லோகங்களும் அஷ்டதிக்கஜாசார்யர்களில் கோயிலண்ணன், வானமாமலை ஜீயர் இவர்களைவிட்டு இவ்வெறும்பியாப்பா, திருவேங்கட ஜீயர், பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர், பிரதிவாதி பயங்கரம் அண்ணா, அப்பிள்ளை, அப்புள்ளாராகிய இவ்வறுவரால் (ஒவ்வுருவர் ஒன்றாக) அநுஸந்திக்கப்பட்டனவென்று கொள்ளுதல் தகும். கோயில்கந்தாடைஅண்ணன் ஸதா மாமுநிகளைத் தாங்கும் பாதுகையாகவும், வானமாமலை திருவடிகளை விடாத ரேகையாகவும் பிரஸித்தர்களாகையால் எப்போதும் திருவடிகளைப் பிரியாத இவ்விருவரும் மாமுனிகளின் திருவடிகளைத் தலையில் தரிக்கவேண்டுமேன்றும் அவற்றை எப்போதும் ஸேவிக்கவேண்டுமேன்றும் ஆசைப்படார்களே என்கிறார், அண்ணாவப்பய்யங்கார் ஸ்வாமி. எறும்பியப்பா அருளிச்செய்த இவ்வாறு ஸ்லோகங்களில் ஒன்று இவர் அநுஸந்தித்ததாகவும், மற்ற ஐந்தும் இவரிடம் உள்ள கௌரவத்தினாலும் ஸ்லோகங்களின் இனிமையாலும் மற்ற ஐவரும் அநுஸந்தித்ததாகவும் கொள்க.

வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment