ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
<<முன் பாசுரம் அடுத்த பாசுரம்>>
11-ஆம் பாசுரம்
आत्मलाभात्परं किञ्चिद् अन्यन्नास्तीति निश्चयात् ।
अङ्गीकर्तुमिव प्राप्तम् अकिञ्चनमिमं जनम् ॥
ஆத்மலாபாத் ஆத்மலாபாத் பரம் கிஞ்சித் அந்யந்நாஸ்தீதி நிஸ்சயாத் |
அங்கீகர்த்துமிவ ப்ராப்தம் அகிஞ்சநமிமம் ஜநம் ||
பதவுரை:- ஆத்மலாபாத் – பரமாத்மாவுக்கு ஜீவாத்மாவைத் தன்தொண்டனாக ஆக்கி அவனைப் பெறுவதைவிட, அந்யத் கிஞ்சித் – வேறான எதுவும், பரம் நாஸ்தி – உயர்ந்த லாபம் இல்லை, இதிநிஸ்சயாத் – என்கிற திடமான எண்ணத்தினால், அகிஞ்சநம் – ஏற்றுக்கொள்வதற்குக் காரணமான நற்குணம் சிறிதுமில்லாதவனாய், இமம் ஜநம் – (அதற்கு நேர்மாறாக, நீக்குவதற்குக் காரணமாகிய தீய குணங்கள் அனைத்தும் நிறையப்பெற்ற) இந்த மனிதனை (அடியேனை), அங்கீகர்த்தும் – (திருத்தித் திருமகள்கேள்வனுக்குத் தொண்டனாக்குவதற்காக) ஏற்றுக்கொள்வதற்கென்று, ப்ராப்தமிவ – (அடியேன் எதிர்பாராமலிருக்கவும்) அடியேனேதிரில் எழுந்தருளுமாப்போலே இருக்கிற….
கருத்துரை:- முன் ஸ்லோகத்தில் கூறப்பட்ட மந்தஹாஸம், கருணை பொங்கிய கண்ணிணை, மதுரமான வார்த்தை ஆகியவற்றால் அடியேன் ஊகிக்கிறேன் – அடியேனுக்கருள் செய்வதற்காகவே அடியேன் வரும் ஸமயத்தை நிஸ்சயித்து அடியேன் கோவிலுக்குச் செல்லும்போது எழுந்தருளினார்; அவருடன் அடியேனுக்கு நேர்ந்த சேர்த்தி தானாகவே நேர்ந்ததன்று – என்பதாக – என்று கூறுகிறார் இதனால். ஜந – பிறந்தவன், அகிஞ்சந – குணமில்லாதவன், இமம் – (அயம்) (ஸ்வரத்தைக் கொண்டு பொருள் கொள்க) – குற்றமனைத்துக்கும் கொள்கலமானவன். இவற்றால் – உலகத்தில் பூமிபாரமாகவும் உண்டிக்கும் கேடாகவும் பிறந்தது மட்டுமேயன்றி பிறப்புக்குப் பயனாகக் குற்றம் நீக்குதலும் குணம் பெருக்குதலுமின்றிக் கெட்டுப்போனவன் அடியேன் என்று தம்மை இகழ்ந்தார் எறும்பியப்பா என்க. இத்தகையவனையும் விடாமல் காக்கவந்த மாமுனிகளின் மஹக்ருபை என்னே என்று வியக்கிறார் இதனால். ப்ராப்தமிவ – இங்கு ‘இவ’ என்பது உவமையைக் குறிப்பதன்று – ஊகையைக் குறிப்பதாகும். ஊகை – (உத்ப்ரேக்ஷை) – கருத்துரையில் கூறப்பட்டது.(11)
archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – https://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org