உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 54

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 53

முன்னம் குரவோர் மொழிந்த வசனங்கள்

தன்னை மிகக் கொண்டு கற்றோர் தம் உயிர்க்கு மின்னணியாச்

சேரச் சமைத்தவரே சீர் வசன பூடணமென்னும்

பேர் இக்கலைக்கு இட்டார் பின் 

ஐம்பத்துநான்காம் பாசுரம். இப்படிப்பட்ட பெருமை உடைய இந்த க்ரந்தத்துக்கு இதை அருளிய பிள்ளை லோகாசார்யரே இதற்குத் தகுந்ததான திருநாமத்தையும் சூட்டினார் என்று அருளிச்செய்கிறார்.

பிள்ளை லோகாசார்யருக்கு முற்பட்ட பூர்வாசார்யர்கள் அருளிய, ஸம்ப்ரதாய அர்த்தங்கள் பொதிந்து இருக்கும் ஸ்ரீஸூக்திகளையே மிகுதியாகக் கொண்டு, சாஸ்த்ர மற்றும் ஸம்ப்ரதாய அர்த்தங்களைப் பெரியோர்களிடம் நன்றாகக் கற்றவர்கள் உகந்து அணியும் ஆபரணமாக, நன்றாகப் பொருந்தும்படி ஒரு க்ரந்தமாக ஏற்படுத்தினார். இப்படிச் செய்தபின், பிள்ளை லோகாசார்யர் தாமே இதற்கு ஸ்ரீவசன பூஷணம் என்ற திருநாமத்தைச் சூட்டினார். ரத்னங்களால் செய்யப்பட்ட ஆபரணம் ரத்ன பூஷணம் என்று சொல்லப்படுமாபோலே பூர்வர்களுடைய ஸ்ரீஸூக்திகளால் செய்யப்பட்டதால் இது ஸ்ரீவசன பூஷணம் என்று பெயரிடப்பட்டது. உடம்புக்கான ஆபரணமாக இல்லாமல் இது ஆத்மாவுக்கான ஆபரணமாக அமைந்துள்ளது தனிச் சிறப்பு.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment