உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 53

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 52

அன்ன புகழ் முடும்பை அண்ணல் உலகாசிரியன்

இன்னருளால் செய்த கலை யாவையிலும் உன்னில்

திகழ் வசன பூடணத்தின் சீர்மை ஒன்றுக்கில்லை

புகழல்ல இவ்வார்த்தை மெய் இப்போது 

ஐம்பத்துமூன்றாம் பாசுரம். இப்பாசுரம் தொடக்கமாக பிள்ளை லோகாசார்யர் அருளிய ஆழ்வார்களின் அருளிச்செயல்களில் உள்ள ஸாரத்தைக் காட்டுவதான ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தின் வைபவத்தையும் ஸாரத்தையும் அருளிச்செய்கிரார். இப்பாசுரத்தில் பிள்ளை லோகாசார்யர் செய்த பேருபகாரத்தை அருளிச்செய்கிறார்.

கீழே காட்டியபடி இப்படிப்பட்ட பெருமையை உடையவரான, முடும்பைக் குலத் தலைவரான, நம் எல்லோருக்கும் ஸ்வாமியான பிள்ளை லோகாசார்யர் தன்னுடைய பெரும் கருணையினாலே இவருக்கு முற்பட்ட ஆசார்யர்கள் ரஹஸ்யமாக ஆசார்ய-சிஷ்ய உபதேச க்ரமத்திலே பாதுகாத்து வந்த ரஹஸ்யார்த்தங்களை, ரஹஸ்ய க்ரந்தங்களாக ஏடுபடுத்தி, எல்லோருக்கும் உஜ்ஜீவனத்துக்கு வழி காட்டினார். இப்படி இவர் செய்த க்ரந்தங்கள் அனைத்திலும் சிந்தித்துப் பார்த்தால், உயர்ந்து விளங்குவதான ஸ்ரீவசன பூஷணம் என்ற க்ரந்தத்தின் பெருமைக்கு ஒப்பாக வேறு ஒன்றும் இல்லை. இது புகழ்ச்சிக்காகச் சொல்லுவதில்லை, ஸத்யம். வேதாந்தம் மற்றும் ஆழ்வார்களின் அருளிச்செயல்களின் தாத்பர்யமான ஆசார்ய க்ருபையின் பெருமையை விரிவாக வெளியிடுவது இந்த க்ரந்தத்தின் தனிச் சிறப்பாகும்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment