உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 37

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 36

ஓராண் வழியாய் உபதேசித்தார் முன்னோர்
ஏரார் எதிராசர் இன்னருளால் – பாருலகில்
ஆசை உடையோர்க்கெல்லாம் ஆரியர்காள் கூறும் என்று
பேசி வரம்பறுத்தார் பின் 

முப்பத்தேழாம் பாசுரம். ஸ்ரீமந்நாதமுனிகள் தொடக்கமான ஆசார்யர்களால் ஆதரிக்கப்பட்ட ப்ரபத்தி (சரணாகதி) மார்க்கம் ஓராண் வழியாக வந்தது என்றும் அதை எம்பெருமானார் தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையினாலே மாற்றி அமைத்தார் என்றும் அருளிச்செய்கிறார்.

எம்பெருமானார்க்கு முன்பு இருந்த ஆசார்யர்கள் ஒரு சில உயர்ந்த சிஷ்யர்களுக்கே இந்த ப்ரபத்தியின் அர்த்தத்தை உபதேசித்து வந்தார்கள். அவர்கள், விஷயத்தின் மேன்மையைப் பார்த்து அதை மறைத்து வைத்தார்கள். பெருமை பொருந்திய எதிராசராம் எம்பெருமானார் தன்னுடைய சிறந்த கருணையினால், இவ்வுலகத்தவர்களின் துன்பத்தைக் கண்டு பொறுக்க முடியாமல், தன்னால் நியமிக்கப்பட்ட உயர்ந்த ஆசார்யர்களான ஆழ்வான், ஆண்டான் முதலியோரை அழைத்து “இவ்வுலகிலே யாருக்கெல்லாம் எம்பெருமானை அடைய வேண்டும் என்று ஆசை உள்ளதோ, அவர்கள் அனைவர்க்கும் என்னைப் போலவே கருணையுடன் உபதேசம் செய்யுங்கள்” என்று சொல்லி, முன்பு இருந்த வரம்பை அறுத்தார்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment