ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
<< பாசுரம் 5
ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை
ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் – எப்புவியும்
பேசு புகழ்ப் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்
தேசுடனே தோன்று சிறப்பால்
ஆறாம் பாசுரம். முதலாழ்வார்களின் அவதார தினப் பெருமையை விளக்குகிறார்.
ஓ உலகத்தவர்களே! ஐப்பசி மாதத்தில் திருவோணம், அவிட்டம், சதயம் என்ற நாள்கள் ஒப்பற்றவை. ஏனெனில் எல்லா உலகத்தவர்களும் கொண்டாடும் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வார் ஆகியோர் தேஜஸ்ஸுடன் முறையே இம்மூன்று நாள்களில் தோன்றியதால் .
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org