வரவரமுனி சதகம் – பகுதி 6

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வரவரமுனி சதகம்

<< பகுதி 5

भृत्यैर्द्वित्रैः प्रियहितपरैरञ्चिते भद्रपीठे |
तुङ्गं तूलासनवरमलन्कुर्वतस्सोपधानम्  ||
अङ्घ्रिद्वन्द्वं वरवरमुनेरब्जपत्राSभिताम्रं |
मौलौ वक्त्रे भुजशिरसि मे वक्षसि स्यात्क्रमेण || ५१॥

ப்ருத்யைர் த்வித்ரை: ப்ரியஹித பரைரஞ்சிதே பத்ரபீடே |
துங்கம் தூலாஸந வரமலங்குர்வதஸ் சோபதாநம் ||
அங்க்ரிர்த்வந்த்வம் வரவரமுநேரப்ஜபத்ராபிதாம்ரம்  |
மௌலௌ வக்த்ரே புஜ சிரஸி மே வக்ஷசிஸ்யாத் க்ரமேண || 51

உமது ப்ரியத்திலும் ஹிதத்திலும் நோக்கமுள்ள பரிசாரகர்கள் இருவர் மூவரால் அலங்கரிக்கப்பட்ட பத்ர பீடத்திலுள்ள தலையணையுடன் கூடிய உயர்ந்த மெத்தையை அலங்கரித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் தாமரை இதழ்போல் சிவந்த திருவடியிணை சிரஸ்ஸிலும் முகத்திலும் தோளிலும் என் மார்பிலும் முறையே ஸ்பர்சிக்க வேணும்.

अग्रे पश्चादुपरि परितो भूतलं पार्श्वतो मे |
मौलौ वक्त्रे वपुषि सकले मानसाम्भोरुहे च ||
दर्शंदर्शं वरवरमुने ! दिव्यंमङ्घ्रिद्वयं ते |
मज्जन्मज्जन्नमृतजलधौ निस्तरेयं भवाब्धिम् || ५२॥

அக்ரே பச்சாதுபரி பரிதோ பூதலம் பார்ச்வதோ மே |
மௌலௌ வக்த்ரே வபுஷி ஸகலே மானஸாம்போருஹேச ||
தர்ஷம் தர்ஷம் வரவரமுநே திவ்யமங்க்ரி த்வயம் தே |
மஜ்ஜந் மஜ்ஜந்நம்ருத ஜலதௌ நிஸ்தரேயம் பவாப்திம் || 52

முன்புறம், பின்புறம், மேலே, நாற்புறம், பூமி, என் பக்கங்கள், தலை, முகம், எல்லா உடல், உள்ளத் தாமரை இவ்வெல்லா இடங்களிலும் வரவரமுநியே! உமது திவ்ய திருவடியிணையினைப் பார்த்து அம்ருதக் கடலில் அமிழ்ந்து அமிழ்ந்து ஸம்ஸாரக் கடலைத் தாண்டுவேன்.

कर्माधीने वपुषि कुमतिः कल्पयन्नात्मभावं |
दुःखे मग्नः किमिति सुचिरं दूयते जन्तुरेषः ||
सर्वे त्यक्त्वा वरवरमुने ! सम्प्रति त्वत्प्रसादात्-
दिव्यं प्राप्तुं तव पदयुगं देहि मे सुप्रभातम् || ५३॥

கர்மாதீநே வபுஷி குமதி: கல்பயந் நாத்ம பாவம் |
து:கே மக்ந: கிமிதி ஸுசிரம் தூயதே ஜந்துரேஷ: ||
ஸர்வம் த்யக்த்வா வரவரமுநே ஸம்ப்ரதி த்வத் ப்ரஸாதாத் –
திவ்யம் ப்ராப்தும் தவ பதயுகம் தேஹி மே ஸுப்ரபாதம் || 53

கர்ம வச்யமான இந்த உடலில் கெட்ட புத்தியுள்ள மனிதன் ஜீவ புத்தியை ஏற்படுத்திக்கொண்டு துக்கத்தில் மூழ்கிக்கொண்டு இந்த ப்ராணி வெகு நாள்களாக வருந்துகிறான். வரவரமுநியே! எல்லாவற்றையும் விட்டு இப்போது உமது அநுக்ரஹத்தால் உமது திவ்யமான திருவடியிணை கிடைத்திருக்கிறது. எனக்கு நல்லொளி என்னும் ஸுப்ரபாதத்தைக் கொடுப்பீராக!

या या वृत्तिर्मनसि मम सा जायतां संस्मृतिस्ते |
यो यो जल्पस्स भवतु विभो ! नामसङ्कीर्तनं ते ||
या या चेष्टा वपुषि भगवन्  ! सा भवेद्वन्दनं ते |
सर्वं  भूयाद्वरवरमुने ! सम्यगाराधनं ते || ५४॥

யா யா வ்ருத்திர் மநஸி மம ஸா ஜாயதாம் ஸம்ஸ்ம்ருதிஸ்தே |
யோ யோ ஜல்பஸ் ஸ பவது விபோ நாம ஸங்கீர்த்தநம் தே ||
யா யா சேஷ்டா வபுஷி பகவந் ஸா பவேத் வந்தநம் தே |
ஸர்வம் பூயாத் வரவரமுநே ஸம்யகாராதநம் தே || 54

என் உள்ளத்தில் என்ன தொழில் உண்டாகிறதோ அது எல்லாம் உம்  நினைவாகவே இருக்க வேண்டும். என் வாயில் என்ன பேச்சு உண்டாகிறதோ அவையெல்லாம் உமது திருநாமத்தைப் பேசுவதாகவே அமைய வேண்டும். என் உடலில் ஏற்படும் சேஷ்டைகள் எல்லாம் உமக்கு வந்தனமாகவே அமைய வேண்டும். எல்லாம் உமக்குத் த்ருப்தி அளிக்கும் திருவாராதாநம் ஆக வேண்டும்.

कामावेशः कलुषमनसामिन्द्रियार्थेषु योSसौ |
भूयो नाथे मम तु शतधा वर्ततामेव भूयान् ||
भूयोSप्येवं वरवरमुने ! पूजनत्वे प्रियाणां |
भूयोभूयस्तदनुभजने पूर्णकामो भवेयम् || ५५॥

காமாவேச: கலுஷ மனஸாம் இந்த்ரியார்த்தேஷு யோஸௌ |
பூயோ நாதே மம து சததா வர்த்ததாமேவ  பூயாந் ||
பூயோப்யேவம் வரவரமுநே பூஜநேத்வத் ப்ரியாணாம் |
பூயோ பூயஸ் ததநு பஜனே பூர்ண காமோ பவேயம் || 55

பாப மனம் படைத்தவர்களுக்கு லௌகிக விஷயங்களில் எவ்வகையான ஆசை இருக்கிறதோ அவ்வாசை நூறு மடங்காகப் பெருகி உம்மிடத்தில் உண்டாகட்டும். அப்படியே உமதன்பர்களைப் பூசிப்பதிலும், அவர்களை அநுவர்த்திப்பதிலும் நிறைந்த மனம் படைத்தவனாக இருக்கக்கடவேன்.

भक्ष्याSभक्ष्ये भयविरहितस्सर्वता भक्षयित्वा |
सेव्याSसेव्यौ समयरहितस्सेवया तोषयित्वा ||
कृत्याकृत्ये किमपि न विदन् गर्हितं वाSपि  कृत्वा |
कर्तुं युक्तं वरवरमुने ! काङ्क्षितं त्वत्प्रियाणाम् || ५६॥

பக்ஷ்யாபக்ஷ்யே பய விரஹித: ஸர்வதோ பக்ஷயித்வா  |
ஸேவ்யாஸேவ்யௌ ஸமய ரஹித: ஸேவயா தோஷயித்வா ||
க்ருத்யாக்ருத்யே கிமபி ந விதந் கர்ஹிதம் வாபி க்ருத்வா  |
கர்த்தும் யுக்தே வரவரமுநே காங்க்ஷிதம் த்வத் ப்ரியாணாம் || 56

புசிக்கத் தக்கவை புசிக்கத் தகாதவை என்று பகுத்தறியாமல் பயமின்றி எல்லாவற்றையும் எல்லா இடத்திலும் புசித்தும், அடிமை செய்யத் தக்கவர்கள் செய்யத் தகாதவர்கள் என்கிற பேதமில்லாது எல்லாரையும் அடிமையினால் மகிழ்வித்து வாசியறியாத நீசனுக்கு மணவாளமாமுநியே! உமதன்பர்களின் விருப்பத்தைச் செய்வது எப்படிப் பொருந்தும்?

वृत्तिं त्रातुं वरवरमुने ! विश्वतो वीतरागैः |
प्राप्यं सद्भिः परमिदमसौ नेच्छति ब्रह्मसाम्यम् ||
निर्मर्यादः पततु निरये निन्दितैरप्यनल्पैः
लब्ध्वा किञ्चित्त्वदनुभजनं त्वन्मुखोल्लासमूलम् || ५७॥

வ்ருத்திம் த்ராதும் வரவரமுநே விச்வதோ வீத ராகை: |
ப்ராப்யம் ஸத்பி: பரமிதமஸௌ நேச்சதி ப்ரஹ்ம ஸாம்யம் ||
நிர்மர்யாத: பதது நிரயே நிந்திதைரப்யனல்பை: |
லப்த்வா கிஞ்சித் த்வதநு பஜநம் த்வந் முகோல்லாஸ மூலம் || 57

 வரவரமுநியே! உலகப் பற்றற்ற பெரியோர்களால் அடையத் தகுந்த ப்ரஹ்ம ஸாம்ராஜ்யத்தை இவன் விரும்புகிறதில்லை. மர்யாதை இல்லாமல் தவறு புரிந்து அளவில்லா இழிதொழில்களால் நரகத்தில் விழட்டும் – கொஞ்சம் உமக்குத் தொண்டு புரிந்து உமது முகத்துக்கு மகிழ்ச்சியை அளிப்பதையே விரும்புகிறேன்.

नाSसौ  वासं नभसि परमे वाञ्च्छति त्वत्प्रसादान् |
मर्त्यावासो यदिह सुलभः कोऽपि लाभो महीयान् ||
किञ्चित्कृत्वा वरवरमुने ! केवलं त्वत्प्रियाणां |
पश्यन् प्रीतिं भवति भवतो वीक्षणानां निधानम् || ५८॥

நாஸௌ வாஸம் நபஸி பரமே வாஞ்சதி த்வத் ப்ரஸாதாத் |
மர்த்யா வாஸோ யதிஹ ஸுலப: கோபி லாபோ மஹீயாந் ||
கிஞ்சித் க்ருத்வா வரவரமுநே! கேவலம் த்வத் ப்ரியாணாம் |
பச்யந் ப்ரீதிம் பவதி பவதோ வீக்ஷிதாநாம் நிதாநம் || 58

இவன் உமது அருளால் பரமபதத்தில் வாஸத்தை விரும்புகிறதில்லை. இந்த மனிதப் பிறவியே ஒரு சிறந்த லாபத்தைத் தருகிறது. உமது பக்தர்களுக்குக் கொஞ்சம் பணிவிடை செய்து பார்த்துக்கொண்டு உமது கடாக்ஷங்களுக்கு நிதியாக இருப்பேன்.

अस्माद्भूयांस्त्वमसि विविधानात्मनश्शोधयित्वा |
पद्माभर्तुः प्रतिदिनमिह प्रेषयन् प्राभृतानि ||
तस्मिन्दिव्ये वरवरमुने ! धामनि ब्रह्मसाम्यात्-
पात्रीभूतो भवति भगवन् ! नैवकिन्चिद्दयायाः || ५९॥

அஸ்மாத் பூயாந் த்வமஸி விவிதா நாத்மந: சோதயித்வா |
பத்மா பர்த்து: ப்ரதி திநமிஹ ப்ரேஷயந் ப்ராப்ருதாநி ||
தஸ்மிந் திவ்யே வரவரமுநே தாமநி ப்ரஹ்ம ஸாம்யாத் |
பாத்ரீ பூதோ பவது பகவந் நைவ கிஞ்சித் தயாயா: || 59

பிராட்டியின் கணவனான ஸ்ரீமந்நாராயணனுக்குப் பரிசாக இங்கு தினந்தோறும் பல ஜீவன்களைச் சுத்தி செய்து எங்களை அனுப்பிக்கொண்டு நீர் மதிக்கத்தக்கவராக இருக்கிறீர். ஹே வரவரமுநியே! அந்தப் பரமபதத்தில் பரப்ரஹ்ம ஸமமாக இருப்பதால் உமது கருணைக்குப் பாத்திரமாக ஒரு வஸ்துவும் ஆகிறதில்லை.

जप्यन्नान्यत्किमपि यदि मे दिव्यनाम्नस्त्वदीयाः –
नैवोपास्यं नयनसुलभादङ्घ्रियुग्मादृते ते ||
प्राप्यं किञ्चिन्न भवति परं  प्रेष्यभावादृते ते |
भूयादस्मिन् वरवरमुने ! भूतले नित्यवासः || ६०॥

ஜப்யந்நாந்யத் கிமபி யதி மே திவ்ய நாம்நஸ்த்வதீயாத் –
நைவோபாஸ்யம் நயந ஸுலபாத் அங்க்ரி யுக்மாத்ருதே தே ||
ப்ராப்யம் கிஞ்சித் ந பவதி பரம் ப்ரேஷ்ய பாவாத்ருதே தே |
பூயாதஸ்மிந் வரவரமுநே பூதலே நித்ய வாஸ: || 60

ஹே வரவரமுநியே! உமது திருநாமத்தையன்றி வேறு ஜபிக்கத்தக்க சொல் எனக்கில்லை. கண்களுக்குத் தெரிந்த உமது திருவடியிணையன்றித் த்யானம் செய்யத் தகுந்த வேறொன்று கிடையாது. உமது அடிமையைத் தவிர வேறொன்று  கதி எனக்கு இல்லை. ஆகையால் இந்நிலவுலகிலேயே எனக்கு நித்ய வாஸம் உண்டாகட்டும்.

வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment