யதிராஜ விம்சதி – ச்லோகம் – 12

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திராஜ விம்சதி        

 ச்லோகம் 11                                                                                                                       ச்லோகம் 13

ச்லோகம் 12 

अन्तर्बहिस्सकलवस्तुषु सन्तमीशम् अन्धः पुरस्स्थितमिवाहमवीक्षमाणः ।
कन्दर्पवश्यह्रुदयस्सततं भवामि हन्त त्वदग्रगमनस्य यतीन्द्र नार्हः ॥ (12)

அந்தர்பஹிஸ்ஸகலவஸ்துஷு ஸந்தமீஸம்
அந்த:புரஸ்ஸ்திதமிவாஹமவீக்ஷமாந: |
கந்தர்பவஷ்யஹ்ருதயஸ்ஸததம் பவாமி
ஹந்த த்வதக்ரகமநஸ்ய யதீந்த்ர! நார்ஹ: || (12)

பதவுரை:- ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே, அஹம் – அடியேன், ஸகல வஸ்துஷு – எல்லாப்பொருள்களிலும், அந்த: பஹி: ச ஸந்தம் – உள்ளும் புறமும் பரந்திருந்து, ஈஸம் – எல்லாவற்றையும் அடக்கியாளுகிற ஸ்ரீமந் நாராயணனை, புர:ஸ்திதம் – முன்னே நிற்கும் மனிதனை, அந்த: இவ – குருடன் போல், அவீக்ஷமாண: ஸந் – பாராதவனாய்க் கொண்டு, (அதனால்) கந்தர்ப்பவஸ்ய ஹ்ருதய: – மந்மதனுக்கு (ஆசைக்கு)வஸப்பட்ட மனத்தையுடையவனாக, ஸததம் பவாமி – எப்போதும் இருக்கிறேன். (ஆகையால்) த்வத் அக்ர கமநஸ்ய – தேவரீர் திருமுன்பே வருவதற்கு (அஹம்) ந அர்ஹ: – அடியேன் தகுந்தவனாக இல்லை, ஹந்த – ஐயோ கஷ்டம்.

கருத்துரை:- ‘ஐயா, அப்படியானால் நீர் நானிருக்குமிடத்திற்கு வாரும். அதற்கு ஆவன செய்கிறேன்’ என்று யதிராஜருக்குத் திருவுள்ளமாயிருக்குமென்று கருதி தாம் அவரைக் கிட்டுவதற்கும் தமக்குத் தகுதியில்லாமையை இதனால் கூறுகிறார். ‘வ்ருத்த்யா பஷு: நர வபு: அஹம்’ தாய்க்கும் மற்றவற்றிற்கும் வாசி தெரியாமல் செய்யும் செயலினால் விலங்காய், உடலால் மட்டும் மனிதனாக இருக்கிறேன் அடியேன் – என்ற கீழ் ஏழாம் ஸ்லோகத்தை விவரிப்பவராய் தாம் காமத்திற்கே வசப்பட்ட மனமுடைமையைக் கூறித் தமது நிலையை யதிராஜரிடம் விண்ணப்பிக்கிறாரென்றபடி. யதிராஜர் என்று பெயர் படைத்துக் காமம் முதலியவற்றையடக்கிய பெரியோர்கட்கெல்லாம் தலைவராகிய எம்பெருமானார் எதிரே வந்து நிற்பதற்கு, காமத்திற்கே பரவஸப்பட்ட தமக்குத் தகுதியில்லாமையை இதனால் விண்ணப்பித்தாரென்பது தேர்ந்த கருத்தாகும். காமத்தையே நினைக்கிற மனமுடைய அடியேன் தேவரீர் முன்பு வந்து நிற்பதை யெண்ணாத மனமுடையவனாகி, அங்ஙனம் முன்பு வந்து நிற்பதற்குத் தகுதியுடையவனல்லேன் என்றும் இங்ஙனம் நீசனான அடியேன் தேவரீர் முன்பு வந்து நின்றால் தேவரீருக்கு மிகவும் அருவருப்பு உண்டாகுமாகையால் அப்படிவந்து நிற்பதற்கு அடியேன் தகுதி பெற்றிலேன் என்றும் கருத்துக் கூறுவர் அண்ணாவப்பங்கார் ஸ்வாமி.

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

Leave a Comment