யதிராஜ விம்சதி – ச்லோகம் – 11

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திராஜ விம்சதி        

 ச்லோகம் 10                                                                                                                      ச்லோகம் 12

ச்லோகம் 11

पापे क्रुते यदि भवन्ति भयानुतापलज्जाः पुनः करणमस्य कथं घटेत ।
मोहेन मे न भवतीह भयादिलेशः तस्मात् पुनः पुनरघं यतिराज कुर्वे ॥ (11)

பாபே க்ருதே யதி பவந்தி பயாநுதாப-
லஜ்ஜா: புந: கரணமஸ்ய கதம் கடேத |
மோஹேந மே ந பவதீய பயாதிலேஸ:
தஸ்மாத் புந: புநரகம் யதிராஜ குர்வே || (11)

பதவுரை:- யே யதிராஜ – வாரீர் யதிராஜரே , பாபே க்ருதே ஸதி – பாவம் செய்யப் பட்டப்போது, மம – அடியேனுக்கு, பய அநுதாப லஜ்ஜா: – மேல் என்ன கேடு நேரிடுமோ என்னும் பயமும், ஐயோ தவறு செய்துவிட்டோமே என்னும் பச்சாத்தாபமும் (கழிவிரக்கமும்) பெரியோர்கள் முகத்தில் நாம் எப்படி விழிப்பதென்கிற வெட்கமும், பவந்தி யதி – உண்டாகுமேயானால், அஸ்ய புந: கரணம் – இப்பாபத்தை மறுபடியும் செய்வதென்பது, கதம் கடேத – எப்படிப்பொருந்தும் ? இஹ – இப்பாவம் செய்யும் விஷயத்தில், பயாதி லேஸ: (அபி) – பயம் முதலிய மூன்றில் சிறிதளவு கூட, மோஹேந – அநுபவிக்கத்தகாத நீச விஷயத்தில் இது அநுபவிக்கத்தக்கதென்னும் திரிபுணர்ச்சியினாலே, மே – அடியேனுக்கு, ந பவதி – உண்டாகிறதில்லை. தஸ்மாத் – அதனால், அகம் – பாவத்தை, புந: புந: – மறுபடியும் மறுபடியும், குர்வே – செய்துவருகிறேன்.

கருத்துரை:- ஐயா, ஸரணாகதனென்னும் பெயரை மட்டும் சுமந்தாலும் உமக்கு , பாபம் செய்தபிறகு பயமும் வெட்கமும் உண்டானால் பாபத்தை மேலும் செய்யமாட்டீர். பச்சாதாபமுண்டானால் செய்த பாபமும் தீரும். இதற்கு நாம் என்ன செய்ய வேண்டியிருக்கிறது ? என்று யதிராஜருக்குத் திருவுள்ளமாயிருக்கலாம் என்று ஊஹித்து அருளிச்செய்கிறார். அகம் – பாபம். பயம் முதலியவை பூர்ணமாக உண்டானால் மறுபடியும் பாபம் செய்வதற்கே இடமில்லை. அவை சிறிதே உண்டானால் எப்போதோ ஒரு தடவை செய்வது தவிர மேன்மேலும் செய்யவழியில்லை. அடியேனுக்கோ அவை சிறிதும் உண்டாகாமையினால் மேன்மேலும் இடையறாது அப்பாபத்தைச் செய்து கொண்டிருக்கிறேன். ஆகையால் அவை சிறிதும் உண்டாகாமைக்குக் காரணமாகிற மோஹத்தை – ஸப்தாதி நீச விஷயங்களில் ‘இவை அநுபவிக்கத்தக்கவை’ என்கிற திரிபுணர்ச்சியை நீக்கியருள வேணுமென்று ப்ரார்த்திப்பது இந்த ஸ்லோகத்தின் உட்கருத்தாகும். அதனால் முற்கூறிய ‘தத்வாரய’ (அதை நீக்கியருளவேணும்) என்பதை இங்கும் வருவித்துக்கொள்ள வேணும்.

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

Leave a Comment