பூர்வ திநசர்யை – 8 – காஷ்மீர

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ வரவரமுநி திநசர்யை

<<முன் பாசுரம்                                                                                                           அடுத்த பாசுரம்>>

 8-ஆம் பாசுரம்

काश्मीर केसरस्तोम कडारस्निग्धरोचिषा ।
कौशेयेन समिन्धनम् स्कन्धमूल अवलम्बिना ॥

காஷ்மீரகேஸரஸ்தோமகடாரஸ்நிக்தரோசிஷா|
கௌஸேயேந ஸமிந்தாநம் ஸ்கந்தமூலாவலம்பிநா||

பதவுரை:- காஷ்மீரகேஸரஸ்தோமகடாரஸ்நிக்தரோசிஷா – குங்குமப் பூக்களின் ஸமூஹம் போல் செந்நிறமாய்ப் பளபளத்த காந்தியை உடையதாய், ஸ்கந்தமூல அவலம்பிநா – தோள்களில் தரிக்கப்பட்டிருக்கிற, கௌஸேயேந – பட்டுவஸ்த்ரத்தினால், மிந்தாநம் – மிகவும் விளங்குமவராகிய….

கருத்துரை:- ஊர்த்வபுண்ட்ரத்தோடு பொருந்திய தோள்களும் அவற்றில் தரிக்கப்பட்ட பட்டுவஸ்த்ரமும் நினைவுக்கு வரவே அவற்றையும் வருணிக்கிறார் இதனால். பட்டு வஸ்த்ரத்தை உத்தரீயமாக அணிந்திருத்தல் இங்குக் கூறப்படுகிறது. ப்ரஹ்மசாரி, க்ருஹஸ்த்தன், வாநப்ரஸ்தன், ஸ்ந்யாஸி எனப்படுகிற நான்கு ஆஸ்ரமங்களிலுள்ள எல்லா ப்ராஹ்மணர்களுக்கும் பொதுவாக பட்டு வஸ்திரமணிதல் விதிக்கப்பட்டுள்ளது. பராஸரர் ‘யஜ்ஞோபவீதம் குடுமி ஊர்த்வபுண்ட்ரம் தாமரைமணிமாலை பட்டுவஸ்த்ரமென்னுமிவற்றை ப்ராஹ்மணன் எப்போதும் தரிக்கக்கடவன்’ என்று கூறியது காண்க. இந்த ப்ரகரணத்தில் ‘உத்தரீயத்தை அணியக்கூடாது’ என்று விலக்கியிருப்பது – அவைஷ்ணவ (வைஷ்ணவரல்லாத) ஸந்யாஸியைப் பற்றியதேயன்றி வைஷ்ணவ ஸந்யாஸியைப் பற்றியதன்றென்று கொள்ளத்தக்கது. இது தெருவில் எழுந்தருளிக் கொண்டிருக்கிற மாமுநிகளைப் பற்றி வருணிக்கிற ஸ்லோகமாகையால் உத்தரீயம் தோளிலணிந்திருப்பது குற்றத்தின்பாற்படாது. ‘ப்ரதக்ஷிணம் பண்ணும்போதும், தண்டனிடும்போதும், தேவபூஜை செய்யும் போதும், ஹோமம் பண்ணும் போதும், பெருமாளையும் ஆசார்யனையும் ஸேவிக்கும் போதும் தோளில் உத்தரீயம் அணிதல் ஆகாது’ என்றே சாண்டில்யர் கூறியுள்ளதனால் என்க. இங்குக் குறிப்பிட்ட பட்டுஉத்தரீயம் காஷாய வர்ணமுடையதென்று கொள்க; ஸந்யாஸிகளுக்கு அதுவே நியாயமுடையதாகையாலே. (8)

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – https://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org

srIvaishNava education/kids portal –
http://pillai.koyil.org

Leave a Comment