பூர்வ திநசர்யை – 32 – தத: ஸுபாஸ்ரயே

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ வரவரமுநி திநசர்யை

<<முன் பாசுரம்  

32-ஆம் பாசுரம்

ततश्शुभाश्रये तस्मिन् निमग्नम् निभ्रुतम् मनः
यतीन्द्रप्रवणं कर्तुं यतमानं नमामि तम् 32

தத: ஸுபாஸ்ரயே தஸ்மிந் நிமக்நம் நிப்ருதம் மந: |
யதீந்த்ரப்ரவணம் கர்த்தும் யதமாநம் நமாமி தம் || 32

பதவுரை:- தத: யோகமாகிற பகவத்த்யாநம் செய்தபிறகு, தஸ்மிந் – முற்கூறிய, ஸுபாஸ்ரயே – யோகிகளால் த்யாநிக்கப்படும் பரமபுருஷனிடத்தில், நிமக்நம் – மூழ்கியதாய், நிப்ருதம் – அசையாது நிற்கிற, மந: – தனது மனத்தை, யதீந்த்ரப்ரவணம் – எதிராஜரான எம்பெருமானாரிடத்தில் மிக்க பற்றுடையதாய் அசையாமல் நிற்றலையுடையதாக, கர்த்தும் – செய்வதற்கு, யதமாநம் – முயற்சி செய்து கொண்டிருக்கிற, தம் – அந்த மணவாளமாமுனிகளை, நமாமி – தெண்டம் ஸமர்ப்பிக்கிறேன்.

கருத்துரை:- இங்கு ‘யதீந்த்ரப்ரவணம் கர்த்தும்’ என்பதற்கு ‘யதீந்த்ரப்ரணமேவ கர்த்தும்’ என்பது பொருள். அதாவது முன்பு ‘யதீந்த்ரசரணத்வந்த்வ ப்ரவணேநைவ சேதஸா’ (16) என்று எம்பெருமானார் திருவடியிணையை மனத்தினால் பக்தியோடு நினைத்துக்கொண்டே பகவதபிகமநம் முதலாக எல்லாவநுஷ்டானங்களையும் மாமுனிகள் நிறைவேற்றிவருவதாகக் கூறியுள்ளபடியால், எம்பெருமானாரையும் அவருக்கு இஷ்டமான எம்பெருமானையும் நினைத்துக்கொண்டிருந்த தமது மநஸ்ஸை ‘எம்பெருமானாரையே நினைப்பதாகச் செய்வதற்கு’ என்பது கருத்தென்ற்படி. ஸுபாஸ்ரயமென்றது – த்யாநம் செய்பவனுடைய ஹேயமான து:க்காதிகளைப் போக்குவதும், அவனுடைய மனத்தைத் தன்னிடம் இழுத்து நிறுத்துவதுமான எம்பெருமானுடைய திவ்யமங்களவிக்ரஹமாகும். இதனால் எறும்பியப்பா மாமுனிகளின் யதீந்த்ர ப்ராவண்யத்தை (சரமபர்வநிஷ்டையை) அநுஸந்தித்து அவரை வணங்கினால், தமக்கும் சரமபர்வநிஷ்டை ஸித்திக்குமென்று கருதி ‘யதீந்த்ரப்ரவணம் கர்த்தும் யதமாநம் நமாமி தம்’ என்றருளினாராயிற்று.

archived in https://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – https://koyil.org
pramANam (scriptures) – http://granthams.koyil.org/
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

0 thoughts on “பூர்வ திநசர்யை – 32 – தத: ஸுபாஸ்ரயே”

Leave a Comment