பூர்வ திநசர்யை – 31 – அப்ஜாஸநஸ்த

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ வரவரமுநி திநசர்யை

<<முன் பாசுரம்                                                                                                          அடுத்த பாசுரம்>>

31-ஆம் பாசுரம்

अब्जासनस्थमवदातसुजातमूर्तिम् आमीलिताक्षमनुसंहितमन्त्ररत्नम्
आनम्रमौलिभिरुपासितमन्तरङ्गैः नित्यं मुनिं वरवरं निभ्रुतो भजामि 31

அப்ஜாஸநஸ்தமவதாதஸுஜாத மூர்த்திம்
ஆமீலிதாக்ஷமநுஸம்ஹித மந்த்ரரத்நம் |
ஆநம்ரமௌளிபிருபாஸிதமந்தரங்கை:
நித்யம் முநிம் வரவரம் நிப்ருதோ பஜாமி || 31

பதவுரை:- அப்ஜாஸநஸ்தம் – பரமாதமத்யாநத்திற்காகப் பத்மாஸநத்தில் எழுந்தருளியிருப்பவரும், அவதாத ஸுஜாத மூர்த்திம் – பாலைத்திரட்டினாற்போல் வெளுத்து அழகியதான திருமேனியை உடையவரும், ஆமீலித அக்ஷம் – (கண்ணுக்கும் மனத்துக்கும் இனிய எம்பெருமான் திருமேனியைத் த்யாநம் செய்வதனாலே) சிறிதே மூடிய திருக்கண்களையுடையவரும், அநுஸம்ஹித மந்த்ரரத்நம் – ரஹஸ்யமாக மெல்ல உச்சரிக்கப்பட்ட மந்த்ரரத்நமாகிய த்வயத்தையுடையவரும், ஆநம்ர மௌளிபி: – நன்றாக வணங்கிய தலைகளை உடையவரான, அந்தரங்கை: – மிகவும் நெருங்கிய கோயிலண்ணன் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா முதலிய ஸிஷ்யர்களாலே, உபாஸிதம் – ஸதா ஸேவிக்கப்படுமவருமான, வரவரம் முநிம் – அழகியமணவாளமாமுநிகளை, நிப்ருதஸ்ஸந் – ஊக்கமுடையவனாய்க் கொண்டு, நித்யம் பஜாமி – எப்போதும் ஸேவிக்கிறேன்.

கருத்துரை:- ‘அதிகமான காற்றில்லாததும் அழகியதும் மேடுபள்ளமில்லாததுமானதோர் இடத்தில் முதலில் (மரத்தாலான மணையை இட்டு) அதன்மேல் தர்ப்பங்களையும், அதன்மேல் மான்தோலையும், அதன்மேல் வஸ்த்ரத்தையும் விரித்து பத்மாஸநத்திலுள்ளவனாய் அவயங்களை நேராக வைத்துக்கொண்டு யோகம் செய்ய வேண்டும்’ என்று விஸ்வாமித்ரர் கூறியது காணத்தக்கது. மூக்கின் நுனியை இருகண்களாலும் பார்த்துக்கொண்டு யோகம் செய்யவேண்டுமென்று தர்ம்ஸாஸ்த்ரங்களில் கூறியுள்ளதனையொட்டி, சிறிதே மூடிய திருக்கண்களையுடைமை மாமுனிகளுக்குக் கூறப்பட்டது. ‘ஸந்தோஷத்தினால் குளிர்ந்த கண்ணீர் பெருக்குமவனும், மயிர்க்கூச்செறியப்பெற்ற தேஹத்தையுடையவனும், பரமாத்மாவின் குணங்களால் ஆவேஸிக்கப்பட்டவனுமாகிய (பரமாத்மகுணங்களை த்யாநம் செய்யுமவனுமாகிய) யோகியானவன் உடலெடுத்த அனைவராலும் ஸதா காணத்தக்கவனாகிறான் (விஷ்ணுதத்வம்) என்று கூறுகிறபடியினால், ஸிஷ்யர்களால் ஸேவிக்கப்பட்ட மணவாளமாமுனிகளை எப்போதும் ஸேவிக்கிறேன்’ என்று கூறினாரென்க. (31)

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

Leave a Comment