ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
உய்ய நினைவுடையீர் உங்களுக்குச் சொல்லுகின்றேன்
வைய குரு முன்னம் வாய் மொழிந்த – செய்ய கலையாம்
வசன பூடணத்தின் ஆழ்பொருளை கற்றதனுக்காம்
நிலையில் நில்லும் அறிந்து
ஐம்பத்தாறாம் பாசுரம். ஸத்வ குணம் உள்ளவர்களை இந்த க்ரந்தத்திலே இருக்கும் அர்த்தங்களை அறிந்து அனுஷ்டிக்குமாறு உபதேசிக்கிறார்.
உஜ்ஜீவனம் பெற ஆசை உள்ளவர்களே! உங்கள் எண்ணத்தை நிறைவேற்ற உங்களுக்குச் சொல்லுகின்றேன். பிள்ளை லோகாசார்யர் முன்பு தன்னுடைய க்ருபையாலே அருளிய, தத்வார்த்தத்தைத் தேடுபவர்களுக்கு உண்மையாக அதைக் காட்டக்கூடிய க்ரந்தமான ஸ்ரீவசன பூஷணத்தின் ஆழ் பொருளான ஆசார்ய அபிமானத்தை நன்றாகக் கற்று அந்த நிலையிலேயே நிற்கவும்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org