உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 45

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 44

அன்போடு அழகிய மணவாளச் சீயர்

பின்போரும் கற்றறிந்து பேசுகைக்கா தம் பெரிய

போதமுடன் மாறன் மறையின் பொருள் உரைத்தது

ஏதமில் பன்னீராயிரம் 

நாற்பத்தைந்தாம் பாசுரம். வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர் திருவாய்மொழிக்கு அருளிச்செய்த பன்னீராயிரப்படி வ்யாக்யானத்தின் வைபவத்தை அருளிச்செய்கிறார்.

நம்மாழ்வாரிடமும் திருவாய்மொழியிலும் பெரும் பக்தியுடனும் சேதனர்களிடத்திலே மிகவும் அன்புடனும் பெரியவாச்சான் பிள்ளையின் க்ருபைக்கு இலக்கான வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர், தன் காலத்துக்குப் பிற்பட்டவர்களும் பாசுரங்களின் அர்த்தங்களை நன்றாகக் கற்றுத் தேறி, மற்றவர்களுக்கு உபதேசிப்பதற்கு உதவியாகத் தம்முடைய ஆசார்யன் க்ருபையாலே கிடைத்த பெரிய ஞானத்தைக் கொண்டு, நம்மாழ்வாராம் மாறன் அருளிய தமிழ் வேதமான திருவாய்மொழிக்கு அருளிய வ்யாக்யானம் பன்னீராயிரப்படி வ்யாக்யானம். இது பதவுரையாக அமைந்துள்ளது – அதாவது பாசுரங்களில் வார்த்தைகளுக்குத் தனித் தனியாக அர்த்தம் அருளியுள்ளார் இவர்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment