உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 44

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 43

தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை

வள்ளல் வடக்குத் திருவீதிப் பிள்ளை – இந்த

நாடறிய மாறன் மறைப் பொருளை நன்குரைத்தது

ஈடு முப்பத்தாறாயிரம் 

நாற்பத்து நான்காம் பாசுரம். திருவாய்மொழிக்கு நம்பிள்ளை அருளிய உபந்யாஸங்களை வடக்குத் திருவீதிப் பிள்ளை ஈடு முப்பத்தாறாயிரப்படி வ்யாக்யானமாக ஏடுபடுத்திய வைபவத்தை அருளிச்செய்கிறார்.

நஞ்ஜீயரின் சிஷ்யரான, தெளிந்த ஞானத்தை உடைய நம்பிள்ளை, நம்மாழ்வாராம் மாறன் தொடக்கமாக நம் பூர்வாசார்யர்கள் காட்டிய வேத/வேதாந்த மார்க்கத்தை விளக்க, அதை “இந்த உயர்ந்த அர்த்தங்கள் எல்லோருக்கும் சென்று அடைய வேண்டும்” என்ற வள்ளல் தன்மை கொண்ட வடக்குத் திருவீதிப் பிள்ளை இந்த நாடே அறிந்து உஜ்ஜீவனம் அடையும்படி அருளிச்செய்த வ்யாக்யானம் ஈடு முப்பாத்தாறாயிரப்படி வ்யாக்யானம். ஈடு என்றால் பொருள் (விளக்கம்), கவசம், ஒப்புயர்வற்ற என்று பல அர்த்தங்கள். இது ஸ்ரீபாஷ்யத்துக்கு ஏற்பட்ட உரையான ச்ருத ப்ரகாசிகையின் அளவிலே இருக்கும். ச்ருத ப்ரகாசிகையின் காலம் இதற்கு பிற்பட்டதாய் இருந்தாலும், ஒப்புமை சொல்லலாம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment