ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
பிள்ளான் நஞ்சீயர் பெரியவாச்சான் பிள்ளை
தெள்ளார் வடக்குத் திருவீதிப் பிள்ளை
மணவாள யோகி திருவாய்மொழியைக் காத்த
குணவாளர் என்று நெஞ்சே கூறு
முப்பத்தொன்பதாம் பாசுரம். இனி த்வய மஹா மந்த்ரத்தின் அர்த்தமான திருவாய்மொழிக்கு வ்யாக்யானங்கள் எம்பெருமானாரின் ஆணை அடியாக அவதரித்ததாலும், எம்பெருமானார் விளக்கிய அர்த்தங்களை அடியாகக் கொண்டு இந்த வ்யாக்யானங்கள் பெருகியதாலும், அவற்றை விளக்கத் தொடங்குகிறார்.
நெஞ்சே! எம்பெருமானாரின் அபிமான புத்ரரான திருக்குருகைப் பிரான் பிள்ளான், பட்டர் சிஷ்யரான வேதாந்தி நஞ்சீயர், வ்யாக்யான சக்ரவர்த்தியான பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளையின் ப்ரிய சிஷ்யரும் தெள்ளிய ஞானத்தைப் பெற்றவருமான வடக்குத் திருவீதிப் பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளையின் கருணைக்கு இலக்கான வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர் ஆகியோர் நம்மாழ்வார் தன் சோதி வாய் மலர்ந்து அருளிய, நம் ஸம்ப்ரதாயத்தின் ஆணிவேரான த்வய மஹாமந்த்ரத்தின் விவரணமான திருவாய்மொழியைக் காத்து வளர்த்த குணவாளர்கள் என்று கொண்டாடு.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org