உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 38

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 37

எம்பெருமானார் தரிசனம் என்றே இதற்கு

நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்தார் அம்புவியோர்

இந்தத் தரிசனத்தை எம்பெருமானார் வளர்த்த

அந்தச் செயல் அறிகைக்கா 

முப்பத்தெட்டாம் பாசுரம். எம்பெருமானார் ப்ரபத்தி மார்க்கத்தை நன்றாக நடத்தியும், ஸ்ரீ பாஷ்யம் முதலான க்ரந்தங்கள் மூலமாக இந்த மார்க்கத்தை ரக்ஷித்தும், இவற்றின் மூலம் நம் ஸம்ப்ரதாயத்தை நன்றாக வளர்த்தருளியதும் எல்லோரும் அறிந்து கொள்ளும்படி நம்பெருமாள் இவருக்குச் செய்த பெரிய கௌரவத்தை அருளிச்செய்கிறார்.

நம்முடைய ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்துக்கு “எம்பெருமானார் தரிசனம்” என்று நம்பெருமாள் நன்றாக ஸ்தாபித்து வைத்தார். இது எதற்காக என்றால், எம்பெருமானார் ஸ்ரீபாஷ்யம் முதலான க்ரந்தங்களை அருளிச்செய்வதன் மூலமும், பல ஆசார்யர்களைக் கொண்டு நம் ஸம்ப்ரதாய அர்த்தங்களை எல்லோரும் அறிந்து கொள்ளும்படிச் செய்தும், திவ்யதேசங்களில் சீர்திருத்தம் செய்தும் இந்த ப்ரபத்தி மார்க்கத்தை நன்றாக எடுத்துரைத்து வளர்த்தார். இப்படி இவர் செய்த பேருபகாரங்களை உலகத்தில் உள்ளோர் எல்லோரும் அறியும்படி நம்பெருமாளே இதை ஸ்தாபித்தார். இவரின் பெரும் கருணையைக் கண்ட திருக்கோஷ்டியூர் நம்பி இவருக்குத் எம்பெருமானார் என்று திருநாமம் சார்த்தி அருளியதை மனதில் கொண்டு நம்பெருமாள் தாமே நம்பி மூலமாக இந்தப் பெருமையை இவருக்கு ஏற்படுத்தினார் என்றும் சொல்லலாம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment