உபதேச ரத்தின மாலை – பாசுரம் 5

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 4

அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த ஆழ்வார்கள்
இந்த உலகில் இருள் நீங்க – வந்துதித்த
மாதங்கள் நாள்கள் தம்மை மண்ணுலகோர் தாம் அறிய
ஈதென்று சொல்லுவோம் யாம் 

ஐந்தாம் பாசுரம். இப்படி அவதரித்த ஆழ்வார்களின் அவதார மாதங்களையும் திருநக்ஷத்ரங்களையும் அருளிச்செய்யத் தொடங்குகிறார்.

உயர்ந்த சாஸ்த்ரமான வேதங்களின் ஆழ்பொருளை ஆராய்ந்து அதன் சீரிய அர்த்தங்களை இந்த நில உலகில் உள்ள அஜ்ஞானம் என்னும் இருள் போகும்படி எடுத்துரைத்த ஆழ்வார்கள் வந்து அவதரித்த மாதங்கள் மற்றும் நாள்களை இப்பொழுது இவ்வுலகில் உள்ளோர் அறியும்படி நாம் சொல்லுவோம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment