யதிராஜ விம்சதி

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ramanujar-alwaiஎம்பெருமானார் – ஆழ்வார்திருநகரி பவிஷ்யதாசார்யன் ஸன்னிதி

mamunigal-srirangamமாமுனிகள் – ஸ்ரீரங்கம்

e-book: http://1drv.ms/1R1evjQ

முன்னுரை

மன்னுயிர்காளிங்கே மணவாள மாமுனிவன்
பொன்னடியாம் செங்கமல போதுகளை – உன்னி
சிரத்தாலே தீண்டில் அமானுவனும் நம்மை
கரத்தாலே தீண்டல் கடன்.

பல பல மஹாசார்யர்களின் அவதாரத்தினால் புனிதமான இவ்வுலகில் பூர்வாசார்யர்கள் என்று இன்றைக்கும் நாம் வழங்கி வரும் மஹாசார்யர்களின் பரம்பரையானது மணவாள மாமுனிகளுடன் நிறைவு பெறுகின்றது. அவருக்கு பின்னும் பல மகான்கள் திரு அவதாரம் செய்திருப்பினும் நம்பெருமாளே அழகிய மணவாளனான திருக்கோலத்தில் ஆசார்ய பூர்த்தியுள்ள  மாமுனிகள் பக்கலிலே சிஷ்யனாக இருந்தமையால், பூர்வாசார்ய குருபரம்பரையானது மாமுனிகளுடன் பூர்த்தி அடைந்ததாகக் கருதுவர் பெரியோர். நல்லார் நவில் குருகூர் என்கிற ஆழ்வார் திருநகரியில் திரு நாவீருடைய பிரான் தாசர் என்கிற மஹாசார்யருக்கு திருக்குமாரராய் சாதாரண வருடத்தில் ஐப்பசி மாதத்தில் திருமூல நக்ஷத்ரத்தில் திரு அவதாரம் செயதார். மணவாள மாமுனிகளுடைய ஆசார்யர் திருவாய்மொழிப் பிள்ளை ஆவார்.

திருவாய்மொழிப் பிள்ளை ஒரு நாள் எம்பெருமானாருடைய குணாநுபவம் பண்ணிக்கொண்டு இருக்கையில் மாறன் அடி பணிந்து உய்ந்த ராமானுசன் என்றும் உள்ள பல பாசுரங்களை சிந்தை செய்து ஆழ்வார் திருவடிகளிலும் அருளிச்செயல் திறத்திலும் எம்பெருமானாருக்கு இருந்த பெருத்த ஈடுபாட்டை மனத்தில் கொண்டு இத்திருநகரியிலே அவருக்கு ஒரு தனிக்கோயில் அமைக்க வேணுமென்று சிஷ்யர்களை நியமித்து அருளினார்.

நாயனாரும் ( மணவாளமாமுனியும் ) அந்த உடையவர் திருவடிகளிலே மிகவும் பக்தியுடன் உரிய கைங்கர்யங்களை செய்து வந்தார்.  அந்த உடையவரின் திருவடிகளிலே ஒரு ஸ்தோத்ரம் விக்ஞாபிக்க வேணுமேன்னு ஆசார்ய நியமனமாக யதிராஜ விம்சதி என்னும் ஸ்துதியை இயற்றினார். இந்த யதிராஜ விம்சதியின் மாதுர்யம் முதலிய குண விசேஷங்களைப்பற்றி அண்ணா வரவரமுநிசதகத்தில் அருளிசெய்துள்ளார்.

முன்னுரை –  பெருமாள் கோயில் ஸ்ரீ உ. வே ப்ர.ப. அண்ணங்கராசார்ய ஸ்வாமி (ஸ்ரீராமானுஜன் பத்திரிகை – 3-11-1970 http://acharya.org/d.html)

ஸம்ஸ்க்ருத வ்யாக்யானத்தின் தமிழாக்கம் – திருப்பதி ஸ்ரீ உ வே க்ருஷ்ணமாசார்ய ஸ்வாமி

archived in http://divyaprabandham.koyil.org

pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) –
http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

Leave a Comment