ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
कालोSनन्तः कमलजनुषो न व्यतीता: कियन्तः
तिर्यङ्मर्त्यस्तृणवनलताः प्रस्तारोSप्यभूवम् ||
इत्थं व्यर्थैजनिमृतिशतैरेनसामेव पात्रं |
दिष्ट्या सोऽहं वरवरमुने दृष्टिगम्यस्तवासम् || २१॥
காலோநந்த: கமல ஜனுஷோ ந வ்யதீதா: கியந்த:
திர்யங் மர்த்யஸ் த்ருண வந லதா: ப்ரஸ்தரோவாப்யபூவம்|
இத்தம் வ்யர்த்தைர் ஜநி ம்ருதி சதைரேநஸாமேவ பாத்ரம்
திஷ்ட்யா ஸோஹம் வரவரமுநே த்ருஷ்டி கம்யஸ்தவாஸம் || 21
காலமோ முடிவில்லாதது. ப்ரம்மனுக்கு எத்தனை காலம் கடக்கவில்லை. திர்யக், மனுஷ்யன், புல், காட்டில் கொடி, புதர் , இப்படிப் பலவகையாக இருந்தேன். இது போல் வீணான பிறப்பு இறப்புகளால் பாபத்துக்கு உறைவிடமானேன். அப்படிப்பட்ட நான் தெய்வாதீனமாக, வரவரமுநியே! உமது பார்வைக்கு இலக்காக ஆனேன்.
मुक्त्वैव त्वां वरवरमुने सम्पदाम् मूलकन्दं |
क्षेमं किन्चिन्नखलु सुलभं केशवैकान्त्यभाजाम् ||
दृष्टो दैवात्तव पुनरनुक्रोशकोशैरपाङ्गैः –
निर्मर्यादः पशुरपि भृशं नीयते निर्मलत्वम् || २२॥
முக்த்வைவத்வாம் வரவரமுநே ஸம்பதாம் மூல கந்தம் |
க்ஷேமம் கிஞ்சிந் ந கலு ஸுலபம் கேசவைகாந்த்ய பாஜாம் ||
த்ருஷ்டோ தைவாத் தவ புநரநுக்ரோசகோசைரபாங்கை: |
நிர் மர்யாத: பசுபரபிப்ருஷம் நீயதே நிர்மலத்வம் || 22
வரவர முநியே! செல்வங்களுக்கு மூல காரணமான உம்மை விட்டு, கேசவனிடத்திலேயே பக்தி செலுத்துபவர்களுக்கு ஒரு வகை க்ஷேமமும் இல்லையன்றோ! விதி வசத்தால் உமது தயை நிறைந்த பார்வைகளால் பார்க்கப் பட்டவன் ஒன்றும் அறியாத பசுவாயிருந்த போதிலும் மிகவும் பாபமற்றவன் ஆகிறான்.
मर्त्यङ्कञ्चन्वरवरमुने ! मानहीन: प्राशंसन् |
पादौ तस्य प्रपदनपरः प्रत्यहं सेवमानः ||
तच्छेषत्वं निरयमपि यश्लाघ्यमित्येव भुङ्क्ते |
सोऽयं प्राप्तः कथमिव परं तवत्पदैकान्त्यवृत्तम् || २३॥
மர்த்யங்கஞ்சந் வரவரமுநே மாந ஹீந ப்ரசம்ஸந் |
பாதௌ தஸ்ய ப்ரபதன பர: ப்ரத்யஹம் ஸேவமாந: ||
தச்சேஷத்வம் நிரயமபிய: ஷ்லாக்யமித்யேவ புங்க்தே |
ஸோயம் ப்ராப்த: கதமிவ பரம் த்வத்பதைகாந்த்யவ்ருத்திம் || 23
வரவரமுநியே! மனிதன் ஒருவனை அஹங்காரமற்ற எவன் ஒருவன் புகழ்ந்து அவனுடைய திருவடிகளில் சரணாகதி நோக்குடன் தினந்தோறும் சேவை செய்துகொண்டு அவனுடைய அடிமையை நரகத்துக் கொப்பாக இருந்தும் சிறந்ததாக அனுபவிக்கிறானோ அப்படிப்பட்ட நான் இதோ வந்தேன்; எப்படியோ உம் திருவடிகளில் அடிமையையே தொழிலாகக் கொண்டேன்.
नित्यानां यः प्रथमगणनां नीयसे शस्त्रमुख्यैः |
कृत्याSSकृत्या भवसि कमलाभर्तुरेकान्तमित्रम् ||
देवः स्वामी स्वयमिह भवन्सौम्यजामातृयोगी |
भोगीश त्वद्विमुखमपि मां भूयसा पश्यसित्वम् || २४॥
நித்யாநாம் யத் ப்ரதம கணநாம் நீயஸே ஷாஸ்த்ர முக்யை: |
க்ருத்யாSSக்ருத்யா பவஸி கமலா பர்துரேகாந்த மித்ரம் ||
தேவ:ஸ்வாமீ ஸ்வயமிஹ பவந் ஸௌம்யஜாமாத்ரு யோகீ |
போகீஷத்வத் விமுகமபிமாம் பூயஸா பஷ்யசி த்வம் || 24
எந்த நீர் சாஸ்த்ரமறிந்தவர்களால் நித்யர்களுக்குள் முதல்வராக எண்ணப் படுகிறீர், செய்கையாலும் உருவத்தாலும் கமலாபதியின் ரஹஸ்யத் தோழனாகிறீர் — தேவனாகவும் உடையவனாகவும் உள்ள தாமே இங்கு வரவர முநியாகி ஹே அநந்தனே! உம்மைப் பாராதிருந்தும் என்னை நிறையக் கடாக்ஷிக்கிறீர்.
अर्थौदार्यादपि च वचसामञ्जसा सन्निवेशात् –
आविर्बाष्पैरमलमतिभिर्नित्यमाराधनीयम् ||
आशासानैर्वरवरमुने नित्यमुक्तैरलभ्यं |
मर्त्यो लब्धुं प्रभवति कथं मद्विधः श्रीसुखं ते || २५॥
அர்த்த ஒளதார்யாத் அபிச வசசாமஞ்சஸா ஸந்நிவேசாத் |
ஆவிர் பாஷ்பைரமல மதிபி: நித்ய மாராதநீயம் ||
ஆசாஸாநைர் வரவரமுநே நித்ய முக்தைரலப்யம் |
மர்த்யோ லப்தும் ப்ரபவதி கதம் மத்வித: ஸ்ரீமுகம் தே || 25
ஆழ்ந்த பொருளுடைமையாலும், வெகு சீக்கிரத்தில் வாக்கியங்களை அமைப்பதாலும், வெளித்தோன்றுகிற கண்ணீர்களை உடைய தூய புத்தி உள்ள மங்களாசாஸனம் செய்கின்றவர்களால் தினந்தோறும் கௌரவிக்கத் தகுந்ததும் நித்யர்களுக்கும் முக்தர்களுக்கும் கிடைக்காததுமான உமது திருமுக மண்டலத்தை என் போன்ற மனிதன் எப்படி அடைய முடியும்?
साराSसारप्रमितिरहितस्सर्वथा शासनं ते |
सद्यः श्रीमन् ! कपिकरकृतां मालिकामेव कुर्याम् ||
नोचेदेतद्वरवरमुने ! दूरदूरं श्रुतीनाम् ||
मौलौ कुर्यात्पुरुषवृषभो मैथिलीभागधेयम् || २६॥
ஸாராஸார ப்ரமிதி ரஹித: ஸர்வதா ஷாஸநம் தே |
ஸத்ய ஸ்ரீமந் கபிகர க்ருதாம் மாலிகாமேவ குர்யாம் ||
நோசேதே தத் வரவரமுநே! தூர தூர: ச்ருதீநாம் ||
மௌலௌ குர்யாத் புருஷ வ்ருஷபோ மைதிலீ பாகதேயம் || 26
நன்று தீதென்றறிவற்றவனே எல்லா விதத்திலும் உமது நியமனத்தைக் குரங்குக்கை மாலையாகச் செய்பவன். ஸ்ரீமானே! இல்லாவிட்டால் உபநிஷத்தில் இந்த மைதிலியின் வைபவத்தை வெகு தூரத்தில் செய்பவன் புருஷர்களின் சிறந்தவன்.
लक्ष्यं त्यक्त्वा यदपि विफलो जायते रामबाणो !
वाणी दिव्या वरवरमुने ! जातु नैवन्त्वदीयम् ||
सोऽयं सर्वम्मदभिलषितं वर्षति श्रीसुखाब्द: –
तस्मै नित्यन्तदिह परमं धाम कस्माद्दुरापम् || २७॥
प्रेमस्थानं वरवरमुने ! सन्तु सन्तश्शतं ते |
லக்ஷ்யம் த்யக்த்வா யதபி விபவோ ஜாயதே ராம பாணோ |
வாணீ திவ்யா வரவரமுநே ஜாது நைதத் த்விதீயா ||
ஸோயம் ஸர்வம் மதபிலஷிதம் வர்ஷதி ஸ்ரீ முகாப்த: |
தஸ்யை நித்யம் ததிஹ பரமம் தாம கஸ்மாத் துராபம் || 27
வரவர முநியே! ஸ்ரீராம பாணமும் குறிதவறி வீணாக ஆனாலும் ஆகலாம், ஆனாலும் உமது வாக்கு ஒருபோதும் வீணாவதில்லை. அப்படிப்பட்ட இந்த ஸ்ரீமுக வர்ஷம் என் இஷ்டத்தை எல்லாம் வர்ஷித்துக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்டவனுக்கு நித்யமான பரமபதம் ஏன் கிடைக்காமல் போகிறது?
प्रेमस्थानं वरवरमुने ! सन्तु सन्तश्शतं ते |
तुल्यः को वा वरदगुरुणा तेषु नारायणेन ||
सानुक्रोशस्स तु मयि दृढं सर्वदोषास्पदेस्मिन् |
मामेवं ते मनसि कुरुते मत्समः को हि लोके || २८॥
ப்ரேமஸ்தாநம் வரவரமுநே ஸந்து ஸந்த: ஷதம் தே |
துல்ய: கோ வா வரத குருணா தேஷு நாராயணேன ||
ஸாநுக்ரோஷஸ் ஸது மயி த்ருடம் ஸர்வ தோஷாஸ்பதேஸ்மிந் |
மாமேவம் தே மநஸி குருதே மத் ஸம: கோ ஹி லோகே || 28
வரவர முநியே! உமது அன்புக்குரிய பெரியோர்கள் பலர் இருக்கட்டும். அவர்களில் வரத நாராயண குருவுக்கு ஒப்பானவர்கள் எவர்? அந்த வரத நாராயண குருவானவர் என்னிடம் திடமான அன்பு கொண்டவர். நானோ எல்லாக் குறைகளுக்கும் உறைவிடம். உமது திருவுள்ளத்தில் என்னை இவ்விதம் செய்கிறார், எனக்கு நிகர் இவ்வுலகில் யார் இருக்கிறார்கள்?
भक्त्युत्कर्षैर्दिशति यदि मे पादपद्मे त्वदीये |
तस्मादस्मै भवति वरदस्सार्थनामा गुरुर्मे ||
यद्वा तस्मै वरवरमुने ! यद्यहं प्रेमयुक्तो |
धन्यस्त्वं मामनुभजसि तत्किन्न मन्ये यदन्यैः || २९॥
பக்த்யுத்கர்ஷம் திஷதி யதி மே பாத பத்மே த்வதீயே |
தஸ்மாதஸ்மை பவதி வரதஸ்ஸார்த்த நாமா குருர்மே ||
யத்வா தஸ்மை வரவரமுநே யத்யஹம் ப்ரேமயுக்த: |
தந்யஸ்த்வம் மாம் அநு பஜஸி தத் கிந்நு மந்யே யதந்யை: || 29
உமது திருவடித் தாமரைகளில் எனக்கு பக்தியைத் தருகிற எனது வரதகுரு பொருள் செறிந்த பெயர் படைத்தவராவார். அல்லது, வரவர முநியே! அவர் பொருட்டு நான் அன்புடையவன் ஆனால் நீர் தந்யர் ஆகிறீர், என்னை அநுஸரித்தவர் ஆகிறீர். ஆகவே மற்றவர்களைப் பற்றி என்ன நினைப்பேன்!
यत्सम्बन्धाद्भवति सुलभं यस्य कस्याSपि लोके |
मुक्तैर्नित्यैरपि दुरधिगं दैवतं मुक्तिमूलम् ||
तं त्वामेवं वदति वरदे सौह्र्दं मे यदि स्यात् |
तस्यैव स्याद्वरवरमुने सन्निधौ नित्यवासः || ३०॥
யத் ஸம்பந்தாத் பவதி ஸுலபம் யஸ்ய கஸ்யாபி லோகே |
முக்தைர் நித்யைரபி துரதிகம் தைவதம் முக்தி மூலம் ||
தம் த்வாமேவம் வததி வரதே ஸௌஹ்ருதம் மே யதி ஸ்யாத் |
தஸ்யைவஸ்யாத் வரவரமுநே ஸந்நிதௌ நித்ய வாஸ: || 30
இவ்வுலகில் எவன் ஒருவனுக்கும் எவருடைய ஸம்பந்தத்தால் முக்தர்களுக்கும் நித்யர்களுக்கும் அடையமுடியாத முக்தி காரணமான தேவதை ஸுலபமாகக் கிடைக்கிறதோ அப்படிப்பட்ட உம்மை இவ்வாறு சொல்லுகிற வரதகுரு வினிடத்தில் எனக்கு ஸ்நேஹம் இருக்குமானால் வரவரமுநியே! அவர் அருகிலேயே நித்ய வாஸம் உண்டாகட்டும்.
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org