ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
வரவரமுனிவர்ய பாது ரத்னம் வரதகுரும் குருமாச்ரயே குரூணாம் |
உபநிஷதுப கீதமர்த்த தத்வம் ததிஹ யதீய வசம் வதம் ஸமிந்தே || 1
வரவர முனிம் = மணவாள மாமுனிகளின்
பாது ரத்நம் = திருவடிகளுக்கு ரத்நம் போல் சிறந்த அடியார்
குரூணாம் குரு =ஆசார்யர்களுக்கு ஆசார்யராய் இருப்பவர்
உபநிஷதுபகீதம் அர்த்த தத்வம் = உபநிஷத்துகளில் ஓதப்படும் பொருளை
ததிஹ யதீய வசம் வதம் ஸமிந்தே =தம் அதீனமாக உடையவர் ஆகிய
வரதகுரும் ஆச்ரயே = வரதகுருவை வணங்குகிறேன்.
மணவாள மாமுனிகளின் திருவடிகளுக்கு ரத்னம் போல் சிறந்த அடியவர், ஆசார்யர்களுக்கு ஆசார்யராய் இருப்பவர், உபநிஷத்துகளில் ஓதப்படும் உண்மைப்பொருளைத் தம் அதீனமாக உடையவர் ஆன வரதகுருவை வணங்குகிறேன்.
आकल्पमत्र भवतु प्रदयन् धरित्रीं
अस्मद्गुरुर्वरवरप्रवरो मुनीनाम |
अन्तस्तमश्शमनम् अन्तदृषां यदीयम्
अम्लानपल्लवतलारुणमङ्घ्रियुग्मम् || २॥
ஆகல்பமத்ர பவது ப்ரதயந் தரித்ரீம்
அஸ்மத் குருர் வரவர ப்ரவரோ முநீநாம் |
அந்தஸ்தமச் சமநம் அந்தத்ருசாம் யதீயம்
அம்லாந பல்லவ தலாருணம்அங்க்ரி யுக்மம் || 2
எந்த மணவாள மாமுனிகள் வாடாத தளிர்போல் சிவந்த இரண்டு திருவடிகள் பார்வை இழந்தவர்களுடைய உள் இருளைப் போக்க வல்லதோ அந்த முனிவர்களின் தலைவர், எமது குருவான மாமுனிகள் இந்த பூமியைப் ப்ரகாசப் படுத்திக்கொண்டு கல்பம் முடியும்வரை இங்கிருக்கவேண்டும்.
குணமணி நிதயே நமோ நமஸ்தே
குருகுல துர்ய நமோ நமோ நமஸ்தே |
வரவரமுநயே நமோ நமஸ்தே
யதிவர தத்வ விதே நமோ நமஸ்தே || 3
சிறந்த குணங்களுக்கு நிதியாக இருப்பவரின் பொருட்டு வணக்கம். ஆசார்யர்களில் சிறந்தவரே உமக்கு வணக்கம். மணவாள மாமுனிகளே உமக்கு வணக்கம். யதிராஜரின் திருவுள்ளம் அறிந்தவரே உமக்கு வணக்கம்.
குருமயிவிமலம் த்ருகஞ்சலம் தே
குசல நிதாந தயாநிதே நமஸ்தே |
நிசிசர பரிபந்தி நித்ய யுக்தே
நிமிகுல மங்கல தீபிகே நமஸ்தே || 4
க்ஷேமத்துக்குக் காரணமான கருணைக் கடலே! உமது சுத்தமான கடைக்கண் பார்வையை என்னிடம் செலுத்தும்.உமக்கு வணக்கம். அரக்கர்களின் விரோதிகளுடன் கூடியவளே நிமிகுல தீபமானவளே! வணக்கம். (நிமிகுல தீபம்= சீதாப்பிராட்டி)
ரவி ஸுத ஸுஹ்ருதே நமோ நமஸ்தே
ரகுகுல ரத்ந நமோ நமோ நமஸ்தே |
தச முக மகுடச் சிதோ நமஸ்தே
தசரத நந்தன ஸந்ததம் நமஸ்தே || 5
சுக்ரீவனுடைய நண்பனான உனக்கு வணக்கம். ரகுகுல ச்ரேஷ்டரான உமக்கு வணக்கம். பத்துத்தலை உடைய ராவணன் கிரீடத்தை அறுத்த உமக்கு வணக்கம். தசரத குமாரனான உமக்கு வணக்கம்.
யதி புனரபிதேய மத்விதீயம்
க்ருதிபிரத: பரமீக்ஷ்யதே நகிஞ்சித் |
விஜஹதி நஹிஜாது சுக்தி முக்தம்
விசத சதி த்யுதி மௌக்திகம் விதக்தா: || 6
ஒப்புயர்வற்ற ஒரு பொருள் இருக்குமானால் இதற்கு மேல் முயற்சிகளால் ஒன்றும் காணப்படவில்லை என்றால் நிர்மல சந்த்ரன் போன்ற காந்தியுள்ள முத்தை நிபுணர்கள் சிப்பியிலிருந்து வந்தது என்று ஒருபோதும் விட மாட்டார்கள்.
தேவ ப்ரஸீத மயி திவ்ய குணைக ஸிந்தோ: |
த்ருஷ்ட்யா தயாம்ருத துஹா ஸக்ருதீக்ஷிதும் மாம் ||
நைதேந க்ருத்வமஸிதேதி நசிந்தயித்வா |
நாராயணம் குருவரம் வரதம் விதந் மே || 7
தேவனே! திவ்ய குணங்களுக்குக் கடல் போன்றவரே! தயை எனும் அம்ருதத்தைப் பெருக்குகிற பார்வையால் என்னை ஒரு தடவை பார்ப்பதற்கு தயை புரிவீராக. இந்த அஸத்தால் ஆக வேண்டியது ஒன்றுமில்லை என்று நினைக்காமல் எனக்கு ஆசார்யர் வரத நாராயண குரு என்பதை அறிந்து அருள் புரிய வேண்டும்.
ஸ்ரீமத் ரங்கம் ஜயது பரமம் தாம தேஜோ நிதாநம் |
பூமா தஸ்மிந் பவது குசலீ கோபி பூமா ஸஹாய: ||
திவ்யம் தஸ்மை திசது பகவந் தேசிகோ தேசிகாநாம் |
காலே காலே வரவரமுநி: கல்பயந் மங்கலானி || 8
ஒளிக்கு நிதி போன்ற சிறந்த தலமான செல்வமுள்ள ஸ்ரீரங்க நகரம் விளங்க வேண்டும். அதில் ஒளிகளுக்கெல்லாம் ஒளி(யான எம்பெருமான்) க்ஷேமமாக வாழ வேண்டும். ஆசார்யர்களுக்கு ஆசார்யரான மணவாள மாமுனிகள் காலந்தோறும் மங்கலங்களைச் செய்துகொண்டு அவருக்கு ஓர் ஒளியை அளிக்க வேண்டும்.
தஸ்யை நித்யம் ப்ரதிசத திசே தக்ஷிணஸ்யை நமஸ்யாம் |
யஸ்யாமாவிர் பவதி ஜகதாம் ஜீவநீ ஸஹ்ய கந்யா ||
புண்யைர் யஸ்யா: க்ஷிதிஜல ஜுஷம் பூருஷம் ரங்க பூஷாம் |
பஷ்யந்தந்யோ வரவரமுநி: பாலயந் வர்த்ததே ந: || 9
எல்லா உலகத்தின் வாழ்வுக்கும் காரணமான காவிரி நதி எந்த திசையில் பெருகுகிறதோ அந்தத் தெற்குத் திசையை நோக்கி, எந்தத் திசையின் புண்யங்களால் பூமியை அடைந்த ரங்க நகருக்கு ஆபரணமான புருஷோத்தமனை ஸேவித்துக்கொண்டு தம்மைக் க்ருதார்த்தனாக நினைத்து மணவாள மாமுனிகள் நம்மைக் காத்துக் கொண்டுள்ளாரோ அந்த திசையை தினமும் வணங்குங்கள்.
ஆசா பாசைரவதி விதுரை: ஸ்வைரமாக்ருஷ்யமாணம் |
தூராத் தூரம் புநரபி ந மே தூயதாமேவ சேத : ||
அந்த: க்ருத்வா வரவர முநே நித்யமங்ரி த்வயம் தே |
தாராகார ஸ்மரண ஸுபகம் நிஸ்சலீ பூய தத்ர || 10
முடிவில்லாத பல ஆசைகளால் தன் இஷ்டம்போல் வெகுதூரம் இழுக்கப்பட்ட என் மனம் மறுபடி வருந்த வேண்டாம். வரவர முநியே! தினந்தோறும் உமது திருவடிகளையே நினைப்பதால் புனிதமாகி அங்கேயே ஸ்திரமாக இருக்கக் கடவது.
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org