சது: ச்லோகீ – முடிவுரை

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

சது: ச்லோகீ

<< ச்லோகங்கள்

varadharaja-perundhevithayar-ekasanam

இறுதியில் அநுஸந்திக்கப்படும் ச்லோகம்:

ஆகாரத்ரய ஸம்பன்னாம் அரவிந்த நிவாஸிநீம் |
அசேஷ ஜகதீசித்ரீம் வந்தே வரத வல்லபாம் ||

கேட்க

பொழிப்புரை

சேஷத்வ பாரதந்த்ர்ய போக்யதைகளில் அவனையன்றி அறியாதமை என்று சொல்லக்கூடிய முப்பெருமை பெற்றவளும் தாமரையில் வசிப்பவளுமான எல்லா உலகையும் நியமித்து நடத்துமவளுமான வரதனுடைய அன்புக்குரியவளை வணங்குகிறேன்.

இந்த அநுபவத்துக்கு மெருகூட்ட தாமல் வங்கீபுரம் பார்த்தஸாரதி ஐயங்கார் ஸ்வாமியால் சேர்க்கப்பட்ட ச்லோகங்கள்:

ஓம் பகவன் நாராயணாபிமதாநுரூப ஸ்வரூப ரூப குண விபவைச்வர்ய சீலாத்யநவதிகாதிசய
அஸங்க்யேய கல்யாண குண கணாம் பத்மவநாலயாம் பகவதீம் ச்ரியம் தேவீம் நித்யாநபாயிநீம் நிரவத்யாம் தேவதேவ திவ்ய மஹிஷீம் அகில ஜகன் மாதரம் அஸ்மன் மாதரம் அசரண்ய சரண்யாம் அனன்ய சரண: சரணமஹம் ப்ரபத்யே ||

பொழிப்புரை

பகவானான நாராயணனுக்கு இஷ்டமும் ஏற்றதுமான ஸ்வரூபம், ரூபம், பெருமை, குணங்கள், ஐஸ்வர்யம், ஒழுக்கம் முதலிய எல்லையில்லாப் பெருமை வாய்ந்ததும், கணக்கில் அடங்காததுமான மங்கள குணங்களைப் பெற்றவளும் தாமரைக் காட்டை இருப்பிடமாகக் கொண்டவளும் பகவதீ என்று சொல்வதற்கேற்ற ஆறு குணங்களுடன் கூடியவளும் ஸ்ரீ: என்ற திருநாமம் பூண்டவளும் ஒளியுள்ளவளும் தேவதேவனான நாராயணனுக்கு திவ்ய மஹிஷியும், என்றும் வேறொருவனை ரக்ஷகமாக அடையாதவளும், எனக்குத் தாயும் ஆனவளை வேறொருவரை ரக்ஷகமாகப் பெறாத நான் ரக்ஷகமாக அடைகிறேன்.

சரணாகதி கத்யம் முதல் சூர்ணை

 

உல்லாஸ பல்லவித பாலித ஸப்தலோகீ
நிர்வாஹ கோரகித நேம கடாக்ஷ லீலாம் |
ஸ்ரீரங்க ஹர்ம்ய தவ மங்கள தீப ரேகாம்
ஸ்ரீரங்கராஜ மஹிஷீம் ச்ரியம் ஆச்ரயாம: ||

பொழிப்புரை

செழித்து வளரும்படி ஏழு உலகங்களையும் செய்துகொண்டு ஸ்ரீரங்கம் என்னும் மாளிகைக்கு மங்களதீபம்போல் விளங்குகிற ஸ்ரீரங்கராஜ திவ்யமஹிஷியான ஸ்ரீ மஹாலக்ஷ்மியை ஆச்ரயிப்போமாக.

 

ஸமஸ்த ஜநநீம் வந்தே சைதந்ய ஸ்தந்ய தாயிநீம் |
ச்ரேயஸீம் ஸ்ரீநிவாஸஸ்ய கருணாமிவ ரூபிணீம் ||

பொழிப்புரை

தனது லீலையான கடாக்ஷத்தாலேயே நன்றாகச் எல்லாருக்கும் தாயும் அறிவு என்னும் முலைப்பால் கொடுப்பவளும் (தன்னை ஸ்திரமாக வைத்துக்கொண்டிருக்கும் திருவேங்கடமுடையானுக்கு) மேன்மையை அளிப்பவளும் திருவேங்கடமுடையானுடைய உருவெடுத்த கருணை போலும் இருக்கிற மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.

வலைத்தளம் –  https://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org/
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

0 thoughts on “சது: ச்லோகீ – முடிவுரை”

Leave a Comment