ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
<<முன் பாசுரம் அடுத்த பாசுரம்>>
3-ஆம் பாசுரம்
सुधानिधिम् इव स्वैर स्वीक्रुतो दग्र विग्रहम् ।
प्रसन्नार्क प्रतीकाश प्रकाश परिवेष्टितम् ॥
ஸுதாநிதிமிவ ஸ்வைரஸ்வீக்ருதோதக்ர விக்ரஹம்|
ப்ரஸந்நார்க்க ப்ரதீகாஶ ப்ரகாஶ பரிவேஷ்டிதம் ||
பதவுரை :-
ஸ்வைர ஸ்வீக்ருத உதக்ரவிக்ரஹம் – தமது இஷ்டப்படி தாமே ஏற்றுகொண்ட மிக அழகிய திருமேனியை உடையவராய், ஸுதாநிதி மிவ (ஸ்திதம்) – திருப்பாற்கடல் போல் வெண்மை நிறமுடையவராய் இருப்பவரும், ப்ரஸந்ந அர்க்க ப்ரதீகாஶ ப்ரகாஶ பரிவேஷ்டிதம் – (கண்கூசாமல் காணும்படியாகத்) தெளிந்தும் குளிர்ந்துமிருக்கும் ஸூர்யன் (ஒருவன் இருப்பானாகில் அவன்) போன்ற காந்தியினால் சூழப்பட்டவருமாகிய …
கருத்துரை :- ‘ ஆசார்யருடைய திருமேனியை, திருவடி முதலாகத் திருமுடியீறாக, ஶிஷ்யன் த்யானிக்கவேண்டும்’ என்றும், ‘ ஶிஷ்யன் ஆசார்யன் திருமேனியை ஸேவிப்பதில் பற்றுடையவனாக இருக்கவேண்டும்’ என்றுமுள்ள வசனத்தின்படி ஆசார்யன் திருமேனியை வருணிக்கிறார் எறும்பியப்பா. மாமுனிகள் வெள்ளைவெளேரென்ற திருமேனியையுடைய திருவநந்தாழ்வானுடைய அவதாரமாகையாலே தம்மிஷ்டப்படி தாமே ஏற்றுக்கொண்ட திருப்பாற்கடலுக்குக் காந்தி அதிகமாக இல்லாமையால், மேலும் காந்தியையுடைய ஸூரியனை மாமுனிகளுக்கு உபமானமாக்கினார். ஸூரியனுடைய காந்தி உக்ரமாகவும் உஷ்ணமாகவும் உள்ளதனால் அதனை நீக்க, ஸூரியனுக்கு ‘ப்ரஸந்ந’ என்ற விஶேஷணமிட்டார். ‘ தெளிந்தும், குளிர்ந்துமிருக்கிற’ என்பது அதன் பொருள். அப்படி ஒரு ஸூரியன் உண்டானால் அவனுடைய ஒளிபோன்ற ஒளியால் சூழப்பட்டவர் மாமுனிகள் என்று அபூதோபமையாக (இல்பொருளுவமையாக) ஸூரியனைக் கூறியபடியாம் இது. (3)
archived in http://divyaprabandham.koyil.
pramEyam (goal) – https://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org