ஞான ஸாரம் 33- எட்ட இருந்த குருவை

ஞான ஸாரம்

முந்தைய பாசுரம்

                                                                        33-ஆம் பாட்டு:

முன்னுரை:

அருகில் இருக்கிற ஆசார்யனை மனிதன் என்று கைவிட்டு நீண்ட தொலைவிலுள்ள (கட்புலனாகாத) இறைவனை ‘வேண்டின சமயத்தில் உதவுவான்’ என்று நினைத்து அவ் இறைவனை ஆவலுருகிறவன்  அறிவு கெட்டவன் ஆவான் என்னும் உண்மையைத் தக்க உதாரணத்துடன் இதி எடுத்துரைக்கப்படுகிறது.

bhagavad_ramanuja_2011_may

“எட்ட இருந்த குருவை இறையன்று என்று
விட்டு ஓர்  பரனை விருப்புறுதல் – பொட்டனத்தன்
கண் செம்பளித்திருந்து   கைத்துருத்தி நீர் தூவி
அம்புதத்தைப் பார்த்திருப்பான் அற்று”

பதவுரை:

எட்ட இருந்த மிக அருகில் எட்டும் இடத்தில் இருக்கிற
குருவை ஆசார்யனை
இறையன்று தலைவன் இல்லை என்று
விட்டு புறக்கணித்து
ஓர் பரனை அணுக அரிதாயிருக்கும் கடவுளை
விருப்புறுதல் அடையவேணுமென்று அவ்வவுதல்(எது போன்றது எனில்)
பொட்டன சடக்கென்று
தன்கண் தன்னுடைய கண்ணை
செம்பளித்திருந்து மூடிக்கொண்டிருந்து(மேல் விளைவதை ஆராயாதிருந்து)
கைத்துருத்தி நீர் விடாய் தணிக்க வைத்திருந்த துருத்தி நீரை
தூவி தரையில் ஊற்றி  விட்டு
அம்புதத்தை மேகத்தின் நீரை
பார்த்திருப்பானற்று எதிர் நோக்கி இருப்பவன் போல ஆகும்.

விளக்கவுரை:

எட்ட இருந்த குருவை: எட்டுதல்-கிட்டுதல் அருகில் என்று பொருள் .அதாவது லக அருகில் இருக்கும் ஆசார்யனை என்று பொருள். கட்புலனுக்கு இலக்காய் எப்பொழுதும் பார்த்துக்கொண்டிருப்பதற்கு உரியவனாயும் தனக்குக் காப்பாளர் வேண்டியபோது காப்பாளனகவும், இனியனாய் இருக்கையும். ஆத்ம நலனுக்கு உதவியாய் இருப்பவனும் எப்பொழுதும் கலந்து பரிமாறுவதற்கு உரியனாய்த் தனக்கு அருகில் இருப்பவனும் ஆனா ஆசார்யனை என்று பொருள்.

இறையன்று என்று விட்டு: இவர் தலைவர் இல்லை என்று குருவை விட்டிட்டு 31ம் பாடலில் ‘சரணாகதி தந்த தன்னிறைவன் தாளே அரணாகும்’ இரு கூறியதற்கு மாறாக அவ் ஆசார்யனைத் தனக்குத் தலைவனாகக் கொள்ளாமல் ‘நம்மைப் போன்றவர்’ என்று மனித இன் எண்ணத்தால் அவரைத் தலைமையாக மதிப்பதை விட்டு

ஓர் பரனை விருப்புறுதல்: எல்லோருக்கும் மேலானவனாகவிருக்கும் கடவுளை அவாவுறுதல் என்று பொருள். அதாவது  சாஸ்திரங்களினால் அறியத்தக்கவனாய் மிகத் தொலைவில் இருப்பவனைத் தனுக்கு அணுக அருயனாய் இருக்கும் கடவுளைத் தன்னைக் காப்பவனாகவும் இன்யனாகவும் கருதி அவனை அடைய வேணுமென்று ஆசைப்படுதலாம்.இது எது போன்றது என்றால்

பொட்டென: சடக்கென்று பின்வரும் விளைவை ஆராயாமல் என்பதாம்.

தன் கண் செம்பளித்திருந்து: தூங்குவாரைப் போல தன்னுடைய கண்களை மூடிக்கொண்டிருந்து பின்வரும் விளைவை அறியாமல் என்ற கருத்து.

கைத்துருத்தி நீர் தூவி: விடாய் பிறந்த போது விடாய் அகற்றிக் கொள்ளலாம் என்றெண்ணி துருத்தி (water can) யில் நிரப்பித் தன் கைவசம் இருக்கிற குடிநீரைப் ப் பூமியில் வார்த்துவிட்டு.

அம்புதத்தைப் பார்த்திருப்பான் அன்று: மேகத்திலுள்ள நீரை விடாய் தணிப்பதற்கு உதவும் என்று நினைத்து வானத்தில் உள்ளதும் மிக்கத் தொலைவில் இருப்பதுமான மழைத் தண்ணீரையே எதிர் பார்த்திருப்பான் செயல் போன்றது   என்று பொருள். அவனைப் போல் என்றது அவன் செயல் போல என்றவாறு. பரனை விருப்புறுதல் தொழிலுக்கும் அம்புதத்தைப் பார்த்திருப்பான் செயலுக்கும் பொருத்தமாயிருப்பதால் இதற்குத் தொழில் உவமம் என்று பெயர்.

இப்பாடல் கருத்துக்கு “ஸ்ரீ வசனபூஷனத்தில்” ‘விடாய் பிறந்தபோது கரச்தமான உதகத்தை உபேக்ஷித்து ஜீமுத ஜலத்தையும் சாகரஜலத்தையும் ஸரித் ஸவித்தையும் வாபீ கூப பயஸ்ஸுக்களையும் வாஞ்சிக்கக் கடவனல்லன் என்ற வாக்கியத்தை மேற்கோளாகக் காண்க.

0 thoughts on “ஞான ஸாரம் 33- எட்ட இருந்த குருவை”

Leave a Comment