பூர்வ திநசர்யை – 16 – தத:

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ வரவரமுநி திநசர்யை

<<முன் பாசுரம்                                                                                                           அடுத்த பாசுரம்>>

 16-ஆம் பாசுரம்

ततः प्रत्युषसि स्नात्वा क्रुत्वा पौर्वाह्णिकीः क्रियाः
यतीन्द्रचरणद्वन्द्व प्रवणेनैव चेतसा

தத: ப்ரத்யுஷஸி ஸ்நாத்வா க்ருத்வா பௌர்வாஹ்ணிகீ: க்ரியா: |
யதீந்த்ரசரணத்வந்த்வ ப்ரவணேநைவ சேதஸா || (16)

பதவுரை:- தத: – அதற்குப்பின்பு, ப்ரத்யுஷஸி – அருணோதயகாலத்தில், ஸ்நாத்வா – நீராடி, பௌர்வாஹ்ணிகீ: – காலையில் செய்யவேண்டிய, க்ரியா: – ஸுத்தவஸ்த்ரம் தரித்தல், ஸ்ந்த்யாவந்தனம் செய்தல் முதலிய காரியங்களை, யதீந்த்ர சரணத்வந்த்வ ப்ரவணேந ஏவ – யதிராஜரான எம்பெருமானாருடைய திருவடியிணையில் தமக்குள்ள பரமபக்தியொன்றையே கொண்ட, சேதஸா – மனஸ்ஸுடன், க்ருத்வா – செய்து.

கருத்துரை:- ப்ரத்யுஷ: – அருணோதயகாலம். அதாவது சூரியன் உதிப்பதற்கு முன்புள்ள நான்கு நாழிகைக் காலமாகும். இக்காலம் முன்பு கூறப்பட்ட – இரவின் நான்காவது யாமத்தின் கண் உள்ள ஏழரை நாழிகையில் முதல் மூன்றரை நாழிகை கழிந்தவுடன் பின்பு உண்டான நான்கு நாழிகைகாலமாகும். இந்த ஸ்லோகத்தில் கூறிய ஸ்நாநத்திற்கும், முன் ஸ்லோகத்தில் குறிக்கப்பட்ட குருபரம்பரை, எம்பெருமானுடைய ஆறுநிலைகள் ஆகிய இவற்றின் த்யானத்திற்கும் இடையில் நேரும் தேஹஸுத்தி தந்தஸுத்தி ஆகிய இவற்றையும் கொள்ளல் தகும். முன்பு ஆறு, ஏழு, எட்டாம் ஸ்லோகங்களில் குறிப்பிட்டபடி காஷாயங்களை உடுத்துதல், திருமண்காப்பு அணிதல், தாமரை மணிமாலை, துளஸிமணி மாலைகளை தரித்தல் ஆகியவற்றையும் இங்கு சேர்த்துக்கொள்வது உசிதம். ஆசார்யனையே எல்லாவுறவுமுறையாகவும் கொண்டுள்ள ஸிஷ்யர்கள், ‘எம்பெருமானே ஆசார்யனாக அவதரிக்கிறான்’ என்ற சாஸ்த்ரத்தின்படி ஆசார்ய ரூபத்தில் உள்ள எம்பெருமானுடைய திருமுகமலர்ச்சிக்காகவே நித்யநைமித்திக கருமங்களாகிய கைங்கர்யங்களைச் செய்ய வேண்டியிருப்பதனால், மாமுனிகள் அவற்றை எம்பெருமானார் திருவடிகளிலுண்டான பக்தி நிறைந்த மனஸ்ஸுடன் அநுஷ்டித்தமை இங்குக் குறிக்கப்பட்டது. (16)

archived in https://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – https://koyil.org
pramANam (scriptures) – http://granthams.koyil.org/
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

Leave a Comment