பூர்வ திநசர்யை – 17 – அத ரங்கநிதிம்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ வரவரமுநி திநசர்யை

<<முன் பாசுரம்                                                                                                           அடுத்த பாசுரம்>>

 17-ஆம் பாசுரம்

अथ रन्गनिधिं सम्यग् अभिगम्य निजं प्रभुम्
श्रीनिधानं शनैस्तस्य शोधयित्वा पदद्वयम् (17)

அத ரங்கநிதிம் ஸம்யக் அபிகம்ய நிஜம் ப்ரபும் |
ஸ்ரீநிதாநம் ஸநைஸ் தஸ்ய ஸோதயித்வா பதத்வயம் || (17)

பதவுரை:- அத: – காலை அநுஷ்டாநங்களை நிறைவேற்றிவிட்டுக் காவேரியிலிருந்து மடத்துக்கு எழுந்தருளிய பிறகு, நிஜம் – தம்முடைய ஆராதனைக்கு உரியவராய், ப்ரபும் – ஸ்வாமியான, ரங்கநிதிம் – (தமது மடத்தில் எழுந்தருளியுள்ள) ஸ்ரீரங்கத்துக்கு நிதி போன்ற அரங்கநகரப்பனை, ஸம்யக் அபிகம்ய – முறைப்படி பக்தியோடு கிட்டித் தண்டன் ஸமர்ப்பித்து, ஸ்ரீநிதாநம் – கைங்கர்யமான செல்வத்துக்கு இருப்பிடமான, தஸ்ய பதத்வயம் – அப்பெருமானுடைய திருவடியிணையை, சநை: – பரபரப்பில்லாமல் (ஊக்கத்தோடு) சோதயித்வா – தீர்த்தத்தினால் திருமஞ்சனம் செய்து (திருவாராதனம் செய்து).

கருத்துரை:- சாண்டிலஸ்ம்ருதியில், ஸ்நாநத்துக்குப் பின்பு பகவானை அபிகமனம் செய்வது (கிட்டுவது) பற்றிக் கூறப்பட்டுள்ளது. ‘பகவானை அபிகமனம் செய்யவேண்டும். (எப்படியெனில்) நன்றாக நீராடித் திருமண்காப்புகளையணிந்து, கால்களை அலம்பி, ஆசமநம் செய்து, பொறிகளையும் மனத்தையும் அடக்கி, இரண்டந்திப்பொழுதுகளிலும், தினந்தோறும் முறையே காலையில் சூரியன் தோன்றும் வரையிலும், இரவில் நக்ஷத்திரங்கள் தோன்றும் வரையிலும் மந்த்ரங்களை ஜபித்துக்கொண்டேயிருந்து அதன் பிறகு பகவானை அபிகமனம் (திருவாராதனத்திற்காகக் கிட்டுதல்) செய்யவேண்டும்’ என்பது சாண்டில்ய ஸ்ம்ருதிவசநம். இங்கு ரங்கநிதியின் திருவடி ஸோதனம் கூறியது திருவாராதனம் முழுவதற்கும் உபலக்ஷணமென்று கொள்ளல்தகும். இங்கும் முன்புகூறிய யதீந்த்ரசரண பக்தி தொடருவதனால், தம்முடைய அரங்கநகரப்பனுக்குத் திருவாராதனம் செய்வதும், தம்முடைய ஆசார்யராகிய எம்பெருமானார்க்கு, அவ்வப்பன் உகந்தபெருமானாகையாலே என்று கொள்ளல் பொருந்தும். பரதனுடைய பக்தரான ஸத்ருக்னாழ்வான், பரதனுக்கு ஸ்வாமியாகிய ஸ்ரீராமபிரானை, பரதாழ்வானுடைய உகப்புக்காகவே நினைத்துக் கொண்டிருந்தது போல் இது தன்னைக் கொள்க… (17)

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

Leave a Comment