உபதேச ரத்தின மாலை – பாசுரம் 7

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 6

மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து
நற்றமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த – பெற்றிமையோர்
என்று முதல் ஆழ்வார்கள் என்னும் பெயர் இவர்க்கு
நின்றதுலகத்தே நிகழ்ந்து

ஏழாம் பாசுரம். இவர்கள் செய்த பேருபகாரத்தால் இவர்களுக்கு முதலாழ்வார்கள் என்ற திருநாமம் நிலைத்து நின்றதை விளக்குகிறார்.

இவர்கள் ஏனைய ஆழ்வார்களுக்கு முன்பாக அவதாரம் செய்து, நல்ல தமிழ் மொழியில் ப்ரபந்தங்களை இட்டு உலகத்தை நல்வழிப்படுத்தியதால் முதலாழ்வார்கள் என்ற திருநாமம் இவர்களுக்கு நிலைத்து நின்றது.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment