ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

e-book – https://1drv.ms/b/s!AhgMF0lZb6nnhFcOTEiIQWgbKD7b?e=rh8twv

vishnu-lakshmijalavandhar-nathamunigalஆளவந்தாரும் நாதமுனிகளும் – காட்டு மன்னார் கோயில்

எல்லோராலும் கொண்டாடப்படும் ஸ்ரீமந்நாதமுனிகளின் திருப்பேரனாரும், விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்திலும் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்திலும் சிறந்த வித்வானுமான ஆளவந்தார், ப்ராப்யம் (குறிக்கோள்) மற்றும் ப்ராபகம் (வழி) ஆகிய முக்கியக் கொள்கைகளை, த்வய மஹா மந்த்ரத்தின் விரிவுரையாக இந்த ஸ்தோத்ர ரத்னத்தில் வெளியிட்டருளினார். நம் பூர்வாசார்யர்கள் அருளிய ஸ்தோத்ர க்ரந்தங்களில் நமக்குக் கிடைக்கக்கூடிய பழமையான க்ரந்தம் இதுவே.

பெரிய நம்பி இளையாழ்வாரை (ஸ்ரீ ராமானுஜர்) ஆளவந்தாரின் சிஷ்யராக ஆக்க வேண்டும் என்ற ஆசையுடன் காஞ்சீபுரம் சென்றார். இளையாழ்வார் திருக்கச்சி நம்பிகளின் வழிகாட்டுதலின்படி சாலைக் கிணற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து தேவப்பெருமாளுக்குக் கைங்கர்யம் செய்து வந்தார். அக்காலத்தில் பெரிய நம்பி, ஸ்தோத்ர ரத்னத்தில் இருந்து சில ச்லோகங்களைச் சொல்லி, இளையாழ்வாரை ஈர்த்து, நம் ஸம்ப்ரதாயத்துக்குள் அழைத்து வந்தார். பிற்காலத்தில் இளையாழ்வார், எம்பெருமானார் என்ற திருநாமத்துடன் சிறந்து விளங்கினார். எம்பெருமானார் ஸ்தோத்ர ரத்னத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டு தன்னுடைய ஸ்ரீவைகுண்ட கத்யத்தில் இதிலிருந்து பல பகுதிகளை அப்படியே உபயோகப்படுத்தினார்.

இந்த அற்புத ப்ரபந்தத்துக்குப் பெரியவாச்சான் பிள்ளை ஒரு விரிவான வ்யாக்யானம் அருளியுள்ளார். இந்த ஸ்தோத்ரத்தின் அற்புதமான பல அர்த்தங்கள் பெரியவாச்சான் பிள்ளையால் சிறந்த முறையில் இந்த வ்யாக்யானத்தில் விளக்கப்பட்டுள்ளன. இந்த வ்யாக்யானத்தைக் கொண்டே நாம் இந்த ச்லோகங்களுக்கு எளிய விளக்கவுரையை அனுபவிக்க இருக்கிறோம்.

ஆதாரம் – http://divyaprabandham.koyil.org/index.php/2020/10/sthothra-rathnam-simple/

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment