உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 34

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 33

ஆழ்வார்கள் ஏற்றம் அருளிச் செயல் ஏற்றம்

தாழ்வாதும் இன்றி அவை தாம் வளர்த்தோர் ஏழ் பாரும்

உய்ய அவர்கள் செய்த வியாக்கியைகள் உள்ளதெல்லாம்

வையம் அறியப் பகர்வோம் வாய்ந்து 

முப்பத்துநான்காம் பாசுரம். இதுவரை ஆழ்வார்களின் திருநக்ஷத்ரங்களையும் திருவவதார ஸ்தலங்களையும் அருளிச்செய்தவர், மூன்றவது பாசுரத்தில் காட்டிய “தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி, ஏழ்பாரும் உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி” என்ற ஆசார்யர்களின் வ்யாக்யான வைபவத்தை, மேல்வரும் பாசுரங்களில் அருளிச்செய்வதாக ஸங்கல்பம் செய்கிறார்.

ஆழ்வார்களுடைய தனிப்பெருமையும் அவர்களின் அருளிச்செயல்களுடைய தனிப்பெருமையும் குறையாமல் வளர்த்த ஒரு தாழ்ச்சியும் இல்லாத ஆசார்யர்கள் செய்த வ்யாக்யானங்கள் எவை எல்லாம் உள்ளனவோ அவை எல்லாவற்றையும் நன்றாகப் பொருந்தும்படி இந்த உலகத்தில் உள்ளோர் அறியும்படிச் சொல்லுவேன் இங்கே.

ஆழ்வார்களுடைய தனிப்பெருமை எம்பெருமானாலே நிர்ஹேதுகமாக மயர்வற மதிநலம் அருளப்பெற்றது. அருளிச்செயல்களின் தனிப்பெருமை வேத தாத்பர்யத்தை எளிமையாக வெளியிட்டது மற்றும் எம்பெருமானைத் தவிர வேறு விஷயங்களைப் பேசாமல் இருந்தது. நம் பூர்வாசார்யர்கள் இவ்வுலக இன்பத்தில் கண் வைப்பது, தங்களுக்கு புகழ், தனம், பெருமை ஆகியவற்றைத் தேடுவது ஆகிய தாழ்ச்சிகள் இல்லாமல்  எப்போதும் பகவத் சிந்தனையிலும், கைங்கர்யத்திலும் அடியார்கள் உஜ்ஜீவனத்திற்கு வழிசெய்வதிலுமே தங்களை அர்ப்பணித்து இருந்தனர்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment