உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 33

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 32

சீராரும் வில்லிபுத்தூர் செல்வத் திருக்கோளூர்

ஏரார் பெரும்பூதூர் என்னும் இவை பாரில்

மதியாரும் ஆண்டாள் மதுரகவி ஆழ்வார்

எதிராசர் தோன்றிய ஊர் இங்கு

முப்பத்துமூன்றாம் பாசுரம். ஆண்டாள், மதுரகவி ஆழ்வார் மற்றும் எதிராசராம் ஸ்ரீ ராமானுஜரின் அவதார ஸ்தலங்களை அருளிச்செய்கிறார்.

சீர்மை நிறைந்திருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர், கைங்கர்யஸ்ரீ நிறைந்திருக்கும் திருக்கோளூர், ஆதிகேசவப் பெருமாளின் நித்யவாஸ ஸ்தலம் என்கிற பெருமை பொருந்திய ஸ்ரீபெரும்பூதூர் ஆகிய ஸ்தலங்கள் முறையே இவ்வுலகில் ஞானம் நிரம்பப் பெற்றவர்களான ஸ்ரீபூமிப்பிராட்டியின் அவதாரமான ஆண்டாள் நாச்சியார், நம்மாழ்வாரையே தெய்வமாகக் கருதிய மதுரகவி ஆழ்வார் மற்றும் எதிராசராம் ஸ்ரீ ராமானுஜரின் அவதார ஸ்தலங்கள். 

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment