ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
எண்ணரும் சீர்ப் பொய்கை முன்னோர் இவ்வுலகில் தோன்றிய ஊர்
வண்மை மிகு கச்சி மல்லை மாமயிலை – மண்ணியில் நீர்
தேங்கும் குறையலூர் சீர்க் கலியன் தோன்றிய ஊர்
ஓங்கும் உறையூர் பாணன் ஊர்
முப்பதாம் பாசுரம். இதுவரை ஆழ்வார்களின் அவதார தினங்களைப் பெரிதும் கொண்டாடினார். இனி, நான்கு பாசுரங்களில் இவர்களின் அவதார ஸ்தலங்களைக் கொண்டாடுகிறார். இப்பாசுரத்தில் முதலாழ்வார்கள், திருமங்கை ஆழ்வார் மற்றும் திருப்பாணாழ்வாரின் அவதார ஸ்தலங்களை அருளிச்செய்கிறார். ஸ்ரீ அயோத்யா, ஸ்ரீ மதுரா ஆகியவை எம்பெருமான் அவதரித்த திவ்ய க்ஷேத்ரங்கள். இவற்றுக்கு எவ்வளவு பெருமை உண்டோ அதை விடப் பெருமை பெற்றது ஆழ்வார்களின் அவதார ஸ்தலங்கள். ஏனெனில், ஆழ்வார்கள் அவதாரத்தாலேயே நாம் எம்பெருமானைத் தெரிந்து கொண்டோம்.
எண்ணுவதற்கரிய கல்யாண குணங்களை உடைய முதலாழ்வார்கள், அதாவது, பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வார் இவ்வுலகத்திலே வந்து அவதரித்த ஊர்களானவை முறையே வளப்பம் பொருந்திய காஞ்சீபுரம் (திருவெஃகா), திருக்கடல்மல்லை மற்றும் திருமயிலை ஆகிய ஸ்தலங்கள். மண்ணி ஆற்றில் நிர் மிகுந்து இருக்ககூடிய திருக்குரையலூர் சீர்மை பொருந்திய திருமங்கை ஆழ்வாரின் அவதார ஸ்தலம். உயர்த்தியை உடைய திருக்கோழி என்று சொல்லப்படும் திருவுறையூர், திருப்பாணாழ்வாரின் அவதார ஸ்தலம்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org