உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 31

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 30

தொண்டரடிப்பொடியார் தோன்றிய ஊர் தொல் புகழ் சேர்

மண்டங்குடி என்பர் மண்ணுலகில் எண்டிசையும்

ஏத்தும் குலசேகரன் ஊர் என உரைப்பர்

வாய்த்த திருவஞ்சிக்களம் 

முப்பத்தொன்றாம் பாசுரம். தொண்டரடிப்பொடி ஆழ்வார் மற்றும் குலசேகராழ்வாரின் அவதார ஸ்தலங்களை அருளிச்செய்கிறார்.

இந்த பூமியிலே, தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் அவதார ஸ்தலம் திருப்புள்ளம் பூதங்குடி என்னும் திவ்ய தேசத்துக்கு அருகில் உள்ள தொன்மையான புகழைப் பெற்ற திருமண்டங்குடி என்னும் ஸ்தலம் என்று பெரியோர்கள் சொல்லுவர். எட்டுத் திக்குகளிலும் இருப்பவர்கள் கொண்டாடும் முடிவேந்தர் சிகாமணியான குலசேகராழ்வாரின் அவதார ஸ்தலம் அவர் பெருமைக்கு ஏற்ற திருவஞ்சிக்களம் என்னும் ஸ்தலம் என்று பெரியோர்கள் சொல்லுவர்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment