உபதேச ரத்தின மாலை – பாசுரம் 8

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 7

பேதை நெஞ்சே இன்றைப் பெருமை அறிந்திலையோ

ஏது பெருமை இன்றைக்கு என்னென்னில் ஓதுகின்றேன்

வாய்த்த புகழ் மங்கையர்கோன் மாநிலத்தில் வந்துதித்த

கார்த்திகையில் கார்த்திகை நாள் காண் 

 

எட்டாம் பாசுரம். அவதார க்ரமத்தில் சொல்வதாக அறிவித்திருந்ததால், ஐப்பசி மாதத்துக்குப் பிறகு கார்த்திகையில் அவதரித்த திருமங்கை ஆழ்வாரைப் பற்றி அருளிச்செய்கிறார் அடுத்து. இரண்டு பாசுரங்களில் திருமங்கை ஆழ்வாரின் பெருமைகளை விளக்குகிறார். முதலில், திருமங்கை ஆழ்வாரின் அவதார தினப் பெருமையைத் தன் நெஞ்சுக்கு விளக்குகிறார்.

 

அறிவற்ற நெஞ்சமே! இந்த தினத்தின் பெருமையை நீ அறிவாயோ? உனக்கு நான் சொல்லுகிறேன் கேள். இன்று தான் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நக்ஷத்ரம். இந்த நன்னாளிலேயே பொருந்திய புகழைப் பெற்ற திருமங்கை தேசத் தலைவரான ஆழ்வார் இந்தப் பெரிய நிலவுலகில் அவதரித்தார்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment