பூர்வ திநசர்யை – 30 – தத: சேதஸ்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ வரவரமுநி திநசர்யை

<<முன் பாசுரம்                                                                                                          அடுத்த பாசுரம்>>

30-ஆம் பாசுரம்

ततश्चेतस्समाधाय पुरुषे पुष्करेक्षणे
उत्तंसित्करद्वन्द्वम् उपविष्टमुपह्वरे 30

தத: சேதஸ் ஸமாதாய புருஷே புஷ்கரேக்ஷணே |
உத்தம்ஸித கரத்வந்த்வம் உபவிஷ்டமுபஹ்வரே || 30

பதவுரை:- தத: – அமுதுசெய்த பிறகு, புஷ்கர ஈக்ஷணே – தாமரைக் கண்ணனாகிய, புருஷே – பரம புருஷணான எம்பெருமானிடத்தில், சேத: – தமது மநஸ்ஸை, ஸமாதாய – நன்றாக ஊன்றவைத்து, உத்தம் ஸிதகரத்வந்த்வம் – ஸிரஸ்ஸின்மேல் வைக்கப்பட்ட இரண்டு கைகளை (கைகூப்புதலை) உடையதாக இருக்கும்படி, உபஹ்வரே – தனியடத்தில், உபவிஷ்டம் – (பத்மாஸநமாக யோகாப்யாஸத்தில்) எழுந்தருளியிருக்கிற – மணவாளமாமுனிகளை ஸேவிக்கிறேன் என்று 31ஆம் ஸ்லோகத்துடன் அந்வயம்.

கருத்துரை:- அநுயாகத்திற்குப் (போஜனத்திற்குப்) பின்பு யோகம் – பரமாத்ம்த்யாநம் செய்ய வேண்டுமென்று ஸாஸ்த்ரம் விதித்துள்ளதனால் அதைச் சொல்லுகிறார். யோகமானது ஆராதநம் போல் மூன்று வேளைகளிலும் செய்ய வேண்டுமென்று மேல் சொல்லப்போவது காண்க. யோகமாவது யோகிகள் தமது ஹ்ருதயகமலத்தில் திருமேனியோடு கூடி எழுந்தருளியுள்ள எம்பெருமானை, அசையாத மனதுடன் நன்றாக த்யாநித்தலாகும். ‘எம்பெருமான் தேவர், மனிதர், விலங்கு, தாவரம் ஆகிய ஜீவாத்மாக்களில் வ்யாபித்திருக்கிறான். எல்லாவிடத்திலும் வ்யாபித்துள்ளமையால் அந்நிலையே விஷ்ணுவின் அந்தர்யாமி நிலையாகும். அவ்வெம்பெருமானே யோகம் செய்பவர்களின் ஹ்ருதய கமலத்திலோ என்றால் திருமேனியோடு எழுந்தருளியிருக்கிறான்’ என்று பராஸரர் பணித்தமை காண்க. ‘யோகிகளின் ஹ்ருதயத்தில் உள்ள பரமாத்மாவும் ஸூர்யமண்டலத்திலுள்ள பரமாத்மாவும் ஒருவனே’ என்று தைத்திரீயோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளதனாலும், ஸூர்யமண்டலத்திலுள்ள பரமாத்மாவுக்குப் புண்டரீகாக்ஷத்வம் (தாமரைக் கண்ணனாந் தன்மை) சாந்தோக்யத்தில் கூறப்பட்டுள்ளதனாலும் ‘புருஷே புஷ்கரேக்ஷணே’ என்று இங்கு மாமுனிகளாகிய யோகியின் ஹ்ருதயத்திலுள்ள பரமபுருஷனுக்குப் புண்டரீகாக்ஷத்வம் கூறப்பட்டதென்க. புரி ஸேதே – யோகி ஸரீரத்தில் வஸிக்கிறான் என்ற வ்யுத்பத்தியினால் புருஷஸப்தம் பரமபுருஷனாகிய விஷ்ணுவைக் குறிக்குமதாகும். யுஜி – ஸமாதௌ என்ற தாதுவினடியாகப் பிறந்த யோக ஸப்தம் ஸமாதியாகிற பரமாத்மத்யாநத்தைத் தெரிவிக்கிறது. (30)

archived in https://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – https://koyil.org
pramANam (scriptures) – http://granthams.koyil.org/
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

Leave a Comment