பூர்வ திநசர்யை – 23 – மஹதி ஸ்ரீமதி

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ வரவரமுநி திநசர்யை

<<முன் பாசுரம்                                                                                                          அடுத்த பாசுரம்>>

23-ஆம் பாசுரம்

महति श्रीमति द्वारे गोपुरं चतुराननम्
प्रणिपत्य शनैरन्तः प्रविशन्तं भजामि तम् 23

மஹதி ஸ்ரீமதி த்வாரே கோபுரம் சதுராநநம் |
ப்ரணிபத்ய ஸநைரந்த: ப்ரவிஸந்தம் பஜாமி தம் || 23

பதவுரை:- ஸ்ரீமதி – ஐஸ்வர்யம் நிறைந்ததும், மஹதி – மிகப்பரந்ததுமான, த்வாரே – கோவிலுக்குச் செல்லும் வழியில், சதுராநநம் – நான்முகனென்று சொல்லப்படுகிற, கோபுரம் – கோபுரத்தை, ப்ரணிபத்ய – மனமொழிமெய்களால் வணங்கி, ஸநை: – மெல்ல (கோபுரத்தின் அழகை அநுபவித்து மகிழ்ந்திருக்கும் தம் கண்களை வருத்தப்பட்டு மெல்லத் திருப்பி) அந்த: – கோவிலுக்குள்ளே, ப்ரவிஸந்தம் – எழுந்தருள்கின்ற, தம் – அந்த மணவாள மாமுனிகளை, பஜாமி – ஸேவிக்கிறேன்.

கருத்துரை:- ஸ்ரீமதி, மஹதி என்பன நான்முகன் கோட்டைவாசலென்று ப்ரஸித்தமான கோவில் வாசலுக்கு அடைமொழிகள். ப்ரஹ்மாதிகளும் இவ்வாசலில் புகுந்தமாத்திரத்தால் ஸகலைஸ்வர்யங்களையும் பெறும்படிக்கீடான ஐஸ்வர்யம் மலிந்திருக்கப் பெற்றுள்ளமையும், ஸ்ரீரங்கநாதன் தன்னடியாரெல்லாரோடும் கூடி இவ்வாசலில் ப்ரவேஸித்தாலும் நிரப்ப முடியாதபடி இருக்கும். இதன் விஸாலத்தன்மையும் முறையே இவற்றால் குறிக்கப்படுகின்றன. சதுராநநம் கோபுரம் – இக்கோபுரம் நான்முகன் கோபுரமென்று வழங்கப்படுகிறது. தெண்டன்ஸமர்ப்பிப்பதை மனத்தினால் நினைத்தும், ‘அடியேன் தெண்டம் ஸமர்ப்பிக்கிறேன்’ என்று வாயால் சொல்லியும், ஸாஷ்டாங்கமாகத் தரையில் படுத்தும் தெண்டனிடுவதை ‘ப்ரணிபத்ய’ என்ற சொல் தெரிவிக்கிறது. (23)

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

Leave a Comment