பூர்வ திநசர்யை – 24 – தேவீ கோதா

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ வரவரமுநி திநசர்யை

<<முன் பாசுரம்                                                                                                          அடுத்த பாசுரம்>>

24-ஆம் பாசுரம்

देविगोदा यतिपतिशठद्वेषिणौ रङ्गश्ऱुङ्गं सेनानाथो विहगव्रुषभः श्रीनिधिस्सिन्धुकन्या
भूमानीलागुरुजनव्रुतः पुरुषश्चेत्यमीषाम् अग्रे नित्यं वरवरमुने अङ्घ्रियुग्मं प्रपध्ये 24

தேவீ கோதா யதிபதிஸடத்வேஷிணௌரங்கஸ்ருங்கம்
ஸேநாநாதோ விஹக வ்ருஷப: ஸ்ரீநிதிஸ் ஸிந்துகந்யா |
பூமாநீளா குருஜநவ்ருத: புருஷச்சேத்யமீஷாம் அக்ரே நித்யம் வரவர முநேரங்க்ரியுக்மம் ப்ரபத்யே || 24

பதவுரை:- தேவீ கோதா – தெய்வத்தன்மை வாய்ந்த ஆண்டாள், யதிபதி சடத்வேஷிணௌ – யதிராஜாரான எம்பெருமானார் சடகோபராகிய நம்மாழ்வார், ரங்கஸ்ருங்கம் – ஸ்ரீரங்கமென்னும் பெயர்பெற்ற கர்ப்பக்ருஹத்தினுடைய மேற்பகுதியான விமாநம், ஸேநாநாத: – ஸேனைமுதலியார், விஹகவ்ருஷப: – பக்ஷிராஜரான கருடாழ்வார், ஸ்ரீநிதி – ஸ்ரீமஹாலக்ஷ்மீக்கு நிதிபோன்ற ஸ்ரீரங்கநாதன், ஸிந்துகந்யா – திருபாற்கடலின் பெண்ணான ஸ்ரீரங்கநாச்சியார், பூமா நீளா குருஜந வ்ருத: – பூமிபிராட்டியாரென்ன, பெரியபிராட்டியாரென்ன, நீளாதேவியென்ன, நம்மாழ்வார் முதலிய பெரியோர்களென்ன என்றிவர்களால் சூழப்பட்ட, புருஷ: – பரமபதநாதன், இதிஅமீஷாம் அக்ரே – என்னும் இவர்கள் அனைவருடையவும் முன்னிலையில், வரவரமுநே: – மணவாளமாமுனிகளுடைய, அங்க்ரியுக்மம் – திருவடியிணையை, நித்யம் – தினந்தோறும், ப்ரபத்யே – தெண்டம் ஸமர்ப்பிக்கிறேன்.

கருத்துரை:- மணவாளமாமுனிகள் நான்முகன் கோட்டைவாயில் வழியாக உள்ளே ப்ரதக்ஷிணமாக எழுந்தருளும் க்ரமத்தில் ஆண்டாள், எம்பெருமானார், நம்மாழ்வார், ஸ்ரீரங்கவிமாநம், ஸேனைமுதலியார், கருடாழ்வார், ஸ்ரீரங்கநாதன், ஸ்ரீரங்கநாச்சியார் இவர்களையும், பின்பு பரமபதநாதன் ஸந்நிதியில் எழுந்தருளியுள்ள் ஸ்ரீபூமிநீளைகளோடும் நம்மாழ்வார் தொடக்கமான ஆழ்வார்களனைவரோடும் கூடிய பரமபதநாதனையும் ஸேவித்துவிட்டு எழுந்தருளும்போது, ஒவ்வொரு ஸந்நிதி வாசலிலும் தாம் அவர்களை ஸேவியாமல் மணவாளமாமுனிகளை ஸேவிப்பதாக எறும்பியப்பா இதனால் அருளிச் செய்கிறார். ஏன்? அவர்களை இவர் ஸேவிப்பதில்லையோ என்றால் அவர்களை இவர் தமக்கு ருசித்தவர்களென்று ஸேவியாமல், தம்முடைய ஆச்சார்யராகிய மணவாள மாமுனிகளுக்கு இஷ்டமானவர்களென்ற நினைவோடே ஸேவிக்கிறாராகையால், அப்படி இவர் அவர்களை ஸேவிப்பதைப்பற்றி இங்குக் குறிப்பிடவில்லை. எறும்பியப்பா தமக்கு ருசித்தவரென்ற காரணத்தினால் ஸேவிப்பது மாமுனிகளொருவரையேயாகும்; இவர் ஆசார்யபரதந்த்ரராகையால் என்க. ‘எம்பெருமானை ஸேவிக்கும்போது அர்ச்சாரூபிகளாக எழுந்தருளியுள்ள அவனுடைய பரிவாரங்களையும் பக்தர்களையும் ஆசார்யர்களையும் பரமபக்தியோடு நன்றாக ஸேவிக்கவேண்டும்’ என்கிற பரத்வாஜவசனத்தையொட்டி, மாமுனிகள் ஸ்ரீரங்கநாதனை ஸேவிக்கும்போது ஆண்டாள் தொடக்கமான பக்தஜநங்களையும் ஸேனைமுதலியார் தொடக்கமான பரிவாரங்களையும் நன்றாக ஸேவித்தது இதனால் கூறப்பட்டது. ஆண்டாள் ‘அஹம் ஸிஷ்யா ச தாஸீ ச பக்தா ச புருஷோத்தம!’ (புருஷ ஸ்ரேஷ்டரே! நான் உமக்கு ஸிஷ்யையாகவும், அடியவளாகவும், பக்தையாகவும் இருக்கிறேன்) என்று வராஹப் பெருமாளிடம் விண்ணப்பித்த பூமிதேவியின் அவதாரமாகையால் பக்தையாகவும், ஆழ்வார்கள் கோஷ்டியில் சேர்ந்தவளாகையால் குர்வீயாகவும் ஆவது காணத்தகும். ஸ்ரீபூமிநீளாதேவிகள், பெரிய பிராட்டியாராகிய ஸ்ரீரங்கநாச்சியார் இவர்கள் பத்நி வர்க்கத்தில் சேர்ந்தவர்கள். ஆக மணவாளமாமுனிகள் பத்நீ பரிஜந குருஜநஸஹிதரான ஸ்ரீரங்கநாதனை மங்களாசாசனம் செய்து வருவதையும் தாம் அம்மாமுனிகளை அவர்களெதிரில் தினந்தோறும் ஸேவிப்பதையும் இதனால் கூறினாராயிற்று. (24)

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

Leave a Comment