ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
पश्यन्नेवं प्रभवति जनो नेर्ष्यितुं त्वत्प्रभावं |
प्राज्ञैरुक्तं पुनरपि हसन्दर्शयत्यभ्यसूयाम् ||
नश्यत्यस्मिन् वरवरमुने ! नाथ ! युक्तं तदस्मिन् |
प्रत्यक्षं तत्परिकलयितुं तत्वमप्राकृतं ते || ७१||
பஶ்யந்நேவம் ப்ரபவதி ஜநோ நேக்ஷிதும் த்வத் ப்ரபாவம் |
ப்ராஞைருக்தம் புநரபி ஹஸந் தர்சயத்யப்யஸூயாம் ||
நஸ்யத்(யஸ்மின்) யேவம் வரவரமுநே நாதயுக்தம் ததஸ்மிந் ||
ப்ரத்யக்ஷம் யத் பரிகலயிதும் தத்வ மப்ராக்ருதம் தே. || 71
பார்த்துக்கொண்டிருக்கும்போதே உமது பெருமையை அறிய முடியவில்லை. பெரியோர்கள் சொல்லக்கேட்டுச் சிரித்துக்கொண்டு பொறாமையைக் காட்டுகிறான். நாதா வரவரமுநியே இப்படி இவன் அழிகிறான். அது இவனிடத்தில் யுக்தமே. ஏனென்றால் உமது அப்ராக்ருதமான உண்மையை இந்த்ரியங்களால் அறியப்போகாதல்லவா?
ஸத்வோன்மேஷ ப்ரமுஷித மந:கல்மஷைஸ் ஸத்வ நிஷ்டை: |
ஸங்கம் த்யக்த்வா ஸகலமபிய: ஸேவ்யஸே வீத ராகை: ||
தஸ்மை துப்யம் வரவரமுநே தர்சயந் நப்யஸூயாம் |
கஸ்மை க்ருத்வா கிமிவ குமதி கல்பதாமிஷ்ட ஸித்யை: || 72
ஸத்வ குண வளர்ச்சியால் அபஹரிக்கப்பட்ட மன மலங்களையுடைய ஸத்வ நிஷ்டர்களால், எல்லாப் பற்றையும்விட்டு ஆசையற்றவர்களால் ஸேவிக்கப்படுகிற உமது விஷயத்தில் பொறாமையைக் காட்டிக்கொண்டு கெட்டபுத்தியுள்ள நான் யாருக்கு இஷ்டமானதைச் செய்ய வல்லவன்?
திவ்யம் தத்தே யதிஹ க்ருபயா தேவதேவோபதிஷ்டம் |
தத்வம் பூயாத் வரவரமுநே ஸர்வ லோகோபலப்யம் ||
வ்யக்தே தஸ்மிந் விதததி பவத் த்வேஷினோயே |
த்வேஷம் த்யக்த்வா ஸபதி துரித த்வம்ஸிநீம் த்வத் ஸபர்யாம் || 73
ஹே வரவரமுநியே! எல்லா ஜனங்களாலும் அறியக்கூடிய எம்பெருமானால் க்ருபையுடன் உபதேசிக்கப்பட்ட உமக்குத் தத்வமுண்டாக வேணும். வ்யக்தமான அந்தத் தத்வத்தில் உமது பெருமையை த்வேஷிக்கிறவர்கள் உடனே பாபத்தைப் போக்குகின்ற உமது பூஜையை த்வேஷத்தை விட்டுச் செய்கிறார்கள்.
கேசித் ஸ்வைரம்வரவரமுநே கேசவம் ஸம்ச்ரயந்தே |
தாநப்யந்யே தமபி ஸுதிய: தோஷயந்த்யாத்ம வ்ருத்யா ||
த்வத்தோ நான்யத் கிமபி ஸரணம் யஸ்ய ஸோயம் த்வதீய: |
ப்ருத்யோ நித்யம் பவதி பவத: ப்ரேயஸாம் ப்ரேம பாத்ரம் || 74
ஹே வரவரமுநியே சிலர் தாமாகவே எம்பெருமானை ஆச்ரயிக்கிறார்கள். அவர்களையும் எம்பெருமானையும் பிற புத்திமான்கள் தமது கர்மத்தால் மகிழ்ச்சி அடையச் செய்கிறார்கள். உம்மைத் தவிர வேறு ரக்ஷகர் இல்லாத எனக்கு மிக்க அன்புக்குரியவராயிருக்கிறீர்.
தீனே பூர்ணாம் பவதநுசரே தேஹி த்ருஷ்டிம் தயார்த்ராம் |
பக்த்யுத்கர்ஷம் வரவரமுநே தாத்ருசம் பாவயந்தீம் ||
யேந ஸ்ரீமந் த்ருத மஹமித: ப்ராப்ய யுஷ்மத் பதாப்ஜம் |
த்வத் விஶ்லேஷே தநு விரஹித: தத்ர லீனோ பவேயம் || 75
ஹே வரவரமுநியே உமது கருணை தோய்ந்த கடாக்ஷத்தைப் பூர்ணமாக எளியவனான உமது பணியாளனான அடியேனிடத்தில் வைப்பீராக. அந்தக் கடாக்ஷமே உம்மிடத்தில் மேலான பக்தியைத் தரவல்லது. அந்தக் கடாக்ஷத்தாலேயே இங்கிருந்து உமது திருவடித் தாமரையை அடைந்து உமது பிரிவு ஏற்படும்போது சரீரமற்றவனாக அங்கேயே மறைந்தவனாவேன்.
த்வத் பாதாப்ஜம் பவது பகவந் துர்லபம் துஷ்க்ருதோ மே |
வாஸோபிஸ்யாத் வரவரமுநே! தூரதஸ்த்வத் ப்ரியாணாம் ||
த்வத் வைமுக்யாத் விபல ஜநுஷோ யே புநஸ் தூர்ண மேஷாம் |
தூரீ பூத: க்வசந கஹநே பூர்ண காமோ பவேயம் || 76
மஹா பாபியான அடியேனுக்கு தேவரீர் திருவடித் தாமரை துர்லபமாகவே இருக்கட்டும். அடியேனுக்கு வாஸமோ உமது பக்தர்களுக்கு வெகு தூரத்திலேயே அமையட்டும். எவர்கள் உம்மிடத்தில் பராங் முகமாயிருந்து பிறந்த பயனை வீணாக்குகிறார்களோ அவர்களுக்கு வெகு தூரத்தில் எங்காவது காட்டில் இருந்துகொண்டு என் விருப்பம் நிறைந்தவனாக வேணும்.
ஸிம்ஹ வ்யாக்ரௌ ஸபதி விபிநே பந்நக: பாவகோவா |
குர்யு: ப்ராணாந்தகமபி பயம் கோ விரோதஸ்ததோ மே ||
நை தே தோஷ க்ரஹண ருசயஸ் த்வத் ப்ரியைர் நிர்நிமித்தை: |
நாநா ஜல்பைர் வரவரமுநே நாசயந்த்யந்திகஸ்தாந் || 77
புலி சிங்கம் ஸர்ப்பம் நெருப்பு இவைகள் காட்டில் உடனே எனக்கு உயிருக்கு ஆபத்தைக் கொடுத்தாலும் அவைகளிடத்தில் எனக்கு பயம் ஏது? வரவரமுநியே! குற்றங்களைக் காணும் இவர்கள் உமக்குப் ப்ரியமில்லாத, காரணமற்ற பல வாதங்களால் அருகிலுள்ளவர்களை அழிப்பதில்லை.
த்வத் ப்ருத்யாநா மநு பஜதி ய:ஸர்வதோ ப்ருத்ய க்ருத்யம் |
தத் ப்ருத்யாநாமபிலஷதி ய: தாத்ருசம் ப்ரேஷ்ய பாவம் ||
மத்ப்ருத்யோ ஸா விதிமயி ஸ சேத் ஸாநுகம்பை ரபாங்கை: |
க்ஷேமம் குர்யாத் வரவரமுநே| கிம் புன: ஶிஷ்யதே மே ||78
எல்லா விதத்திலும் எவர்கள் தேவரீரிடத்தில் அடிமைத்தொழில் புரிகிறார்களோ அவ்வடியவர்களிடத்தில் அடிமையை எவர் விரும்புகிறார்களோ அவர் அடியேனை இவன் நமது அடியவன் என்று தயையுடன் கடாக்ஷிப்பாரானால் அதுவே க்ஷேமகரம். அடியேனுக்கு வேறு என்ன தேவை?
க்வாஹம் க்ஷுத்ர: குலிஸ ஹ்ருதய: துர்மதிக்வாத்ம சிந்தா |
த்ரய்யந்தானாமஸுலபதாம் தத்பரம் க்வாத்ம தத்வம் ||
இத்தம் பூ தே வரவரமுநே யத் புநஸ்வாத்ம ரூபம் |
த்ரஷ்டும் தத்தத் ஸமய ஸத்ருசம் தேஹிமே புத்தி யோகம் || 79
மிகவும் அல்பனான நான் எங்கே! உறுதியான நெஞ்சும் கெட்ட புத்தியும் உள்ளவன் ஆத்ம சிந்தை எங்கே! உபநிஷத்துகளுக்கே துர்லபமான ஆத்ம தத்வம் எங்கே! ஹே வரவரமுநியே! நிலைமை இவ்வாறிருக்கும்போது ஸ்வாத்ம ரூபத்தை அறிவதற்கு அந்தந்த சமயத்துக்கு ஏற்றவாறு புத்தியை அளிப்பீராக.
ஸோடும் தாவத் ரகு பரிவ்ருடோ ந க்ஷமஸ்த்வத் வியோகம் |
ஸத்ய காங்க்ஷந் வரவரமுநே ஸந்நிகர்ஷம் தவைஷ: ||
ஸாயம் ப்ராதஸ் தவபத யுகம் ஸச்வ துத்திச்ச திவ்யம் |
முஞ்சந் பாஷ்பம் முகுளித கரோ வந்ததே ஹந்த மூர்த்நா || 80
ச்ரேஷ்டரான ஹே வரவரமுநியே! உமது பிரிவை ஸஹியாதவராக உடனே உமது ஸேவையை விரும்பி ஸாயங்கால வேளையிலும் காலை வேளையிலும் உமது இரண்டு திருவடிகளையும் உத்தேசித்து அடிக்கடி கண்ணீர் பெருக்கிக்கொண்டு கைகூப்பிய வண்ணம் சிரஸ்ஸால் வணங்குகிறார். ஆச்சர்யம்!
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org