ஸ்ரீவிஷ்ணு புராணம் – பூ ஸ்துதி

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

பூமி ஸ்துதி – அம்சம் 1, அத்யாயம் 4

எம்பெருமான் ஸ்ருஷ்டிக்கு ப்ரம்மனை ஸ்ருஷ்டித்தபின், பாத்ம கல்பம் முடியும் தறுவாயில் ப்ரம்மன் உறக்கம் நீங்கிக் கண் விழித்தபோது  பெரும் நீர்ப்பரப்பில் தான் தாமரையில் இருப்பதைக் கண்டார்.

ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோ வை நர ஸூனவ:
அயனம் தஸ்ய தா:பூர்வம் தேன நாராயண: ஸ்ம்ருத:

அப்போது நீர்க்கடலில் எம்பெருமான் ஸயனத் திருக்கோலம் கண்டார். இவ்வாறு நீரில் இருந்த பிரபுவுக்கு நாராயணன் என்ற பெயர் வந்தது. அந்த நாரத்திலிருந்து ஸ்ருஷ்டிக்கப்பட்டவை நாரங்கள். அவற்றை உள்ளும் புறமும் இருந்து அவனே தாங்குகிறான்.  ஒரு மீன் அல்லது ஆமை அல்லது வராஹ வடிவெடுக்கிறான். இப்போது ப்ரம்மன் வேத கீதம் பாட, ஸநகாதிகள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவன் அந்நீரில் பாய்ந்து இறங்குவதை நோக்கிய பூமிப்  பிராட்டி சொன்னாள்:

 

பூமி ஸ்துதி

நமஸ்தே ஸர்வபூதாய துப்யம் சங்க கதாதர
மாம் உத்தாராஸ்மாதத்ய த்வம் த்வத்தோஹம் பூர்வமுத்திதா

த்வத்தோஹம் உத்திதா பூர்வம் த்வன் மாயாஹம் ஜனார்த்தன
ததான் யானி ச  பூதாநி ககநாதீன் யஸேஷத:

நமஸ்தே பரமாத்மாத்மன் புருஷாத்மன் நமோஸ்துதே
ப்ரதான வ்யக்த பூதாய கால பூதாய தே நம:

த்வம் கர்த்தா ஸர்வ பூதானாம் த்வம் பாதா த்வம் விநாச க்ருத்
ஸர்காதிஷு ப்ரபோ ப்ரஹ்ம விஷ்ணு ருத்ராத்ம ரூபத்ரூக்

சம்பக்ஷயித்வா சகலம் ஜகத் ஏகார்ணவீ க்ருதே
சேஷே த்வமேவ கோவிந்த! சிந்த்யமானோ மநீஷிபி:

பாவதோ யத்பாரம் தத்வம் தத்ர ஜானாதி கஸ்சன
அவதாரேஷு யத் ரூபம் ததர்ச்சந்தி திவௌகச:

த்வமாராத்ய பரம் ப்ரஹ்ம யாதா முக்திம் முமூக்ஷவ:
வாசுதேவமனாராத்ய கோ மோக்ஷம் ஸமவாப்ஸ்யதி

யத் கிஞ்சித் மனஸாக்ராஹ்யம் யத்க்ராஹ்யம் சக்ஷுராதிபி:
புத்தயா ச யத் பரிச்சேத்யம் தத்ரூபமகிலம் தவ

த்வன் மயாஹம் த்வதாதாரா த்வத் ஸ்ருஷ்டா த்வாமுபாச்ரிதா
மாதவீம் இதி  லோகோயம் அபிதத்தே ததோஹி மாம்

ஜயாகில ஞான மய ஜய ஸ்தூல மயாவ்யய
ஜயானந்த ஜயாவ்யக்த ஜய வ்யக்தமய ப்ரபோ

பராபராத்மன் விச்வாத்மன் ஜய யஞ பதேனக
த்வம் யஜ்ஞஸ்த்வம் வஷட்காரஸ்த்வ மோங்காரஸ் த்வம் அக்நய:

தவம் வேதாஸ்த்வம் ததங்கானித்வம் யஜ்ஞ புருஷோ  ஹரே!
ஸூர்யாதயோ க்ரஹாஸ்தாரா நக்ஷத்ராணி அகிலம் ஜகத்

மூர்த்ராமூர்த்தம் அத்ருஸ்யஞ்ச கடினம் புருஷோத்தம யதோக்தம் யஸ்ச நைவோக்தம் மயாத்ர பரமேச்வர!
தத் ஸர்வம் த்வம் நமஸ் துப்யம் பூயோ பூயோ நமோ நம:

அருளிச்செயலில் ஆழ்வார்கள் பூமியை எம்பெருமான் இடந்தும்  கிடந்தும் நடந்தும் கடந்தும் தோள்களால் ஆரத் தழுவியும் தன்னுடையதே  உலகென நின்றான் என்று பாடுவது இங்கு காணக் கிடைக்கிறது. இதன் திரண்ட பொருள்:  

“எல்லாப் பொருள்களாகவும், கதை, சக்ரம் ஏந்தியவனுமான ப்ரபுவே வணக்கம்! எப்போதும்போல் என்னை இவ்விடத்திலிருந்து தூக்கி நிறுத்துவீராக. ஆகாசமும், மற்றெல்லாப் பொருள்களும் போலே நானும் உம்மிடமிருந்தே தோன்றினேன், உம்மையே தொடர்கிறேன், உம்மிலேயே உள்ளேன். பரமாத்மனே! தெரிந்தும், தெரியாமலும் எல்லா பூதங்களுமாய் உள்ளீர், அவற்றின் ஆத்மாவாய் உள்ளீர்.(அவற்றுக்கு சத்தை/இருப்பு கொடுக்கிறீர்)

எல்லாவற்றையும் ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்ர ஸ்வரூபங்களில் ஸ்ருஷ்டி, ஸம்ரக்ஷண, ஸம்ஹார காலங்களில் ஸ்ருஷ்டிப்பவர் , ரக்ஷிப்பவர், ஸம்ஹரிப்பவர் நீரே. கோவிந்தா! எல்லாவற்றையும் விழுங்கியபின், உலகம்  முழுவதையும் வ்யாபித்துள்ள மஹா ஸமுத்ரத்தில், யோகிகளால் த்யானிக்கப்பட்டு தேவரீர் ஸயனித்துள்ளீர். எவரும் உமது உண்மை ஸ்வரூபம் அறிகிலர்; தேவர்கள் நீர் விரும்பிக் காட்டும் திவ்ய ஸ்வரூபத்தை விரும்பி தரிசிக்கிறார்கள். இறுதியில் மோக்ஷம் பெறவேண்டும் என விரும்புவோர், வாசுதேவனே! உம்மையே த்யானிக்கிறார்கள், உம்மை அன்றி வேறு எவரை த்யானிப்பர்? மனதால் அஞ்சப்படுபவையோ, புலன்களால் காணப்படுபவையோ, அரிவால் உணரப்படுபவையோ யாவும் உமது வடிவமே.

நான் உம்  உடைமை, நீரே என் ஸ்ருஷ்டி கர்த்தா, நான் உம்மையே சரணாகப் புகல் அடைகிறேன். ஆகவே இப்ரபஞ்சத்தில் எனக்கு மாதவி (மாதவன் எனும் விஷ்ணுவின் மஹிஷி) எனும் ஸ்தானம் கிடைக்கிறது. ஞான ஸாரத்திற்கு மங்களம், மாறாமல் அழியாமல் இருப்பதற்கு மங்களம், நித்யமானதற்கு மங்களம், தானே காரணமாயும் கார்யமாயும் இருப்பவருக்கு மங்களம்; வ்யக்தமாயும் அவ்யக்தமாயும் இருப்பவருக்கு, பிரபஞ்ச ஸ்வரூபிக்கு, அப்பழுக்கற்ற யஜ்ஞ ஸ்வாமிக்கு மங்களம்! தேவரீர் யஜ்யம், தேவரீரே அர்க்யம், தேவரீரே ஓங்காரம், தேவரீரே யாக அக்னி, தேவரீரே வேதங்கள், அவற்றைச் சார்ந்த விஞ்ஞானங்கள், தேவரீரே அனைவரும் தொழும் ஹரி. ஸூர்யன், க்ரஹங்கள், நக்ஷத்திரங்கள், முழு உலகம், வடிவுள்ளன, வடிவற்றன, காணப்படுவன, கண்ணுக்குப் புலனாகாதன, நான் சொன்னவை/சொல்லாமல் விட்டவை யாவுமே புருஷோத்தமனே! தேவரீர் ஆவீர். உமக்கு வணக்கம், வணக்கம், மீண்டும் மீண்டும் வணக்கம்.”

இவ்வாறு பூமி துதித்தவுடன், நீரிலிருந்து நீல மேகம் போல் ஒரு பெருங்கேழல் (வராஹ) வடிவில் மெலிதான ஸாம கானம்போல் முனகலோடு நீர் சொரிய எழுந்த எம்பெருமான் ஸநக ஸநந்தனாதிகள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மாறாத அன்பு நோக்கோடு பூமியை நேராக ஏந்திக்கொண்டு, ரிஷிகள், தேவர்கள் ஸ்துதி செய்துகொண்டிருக்க அந்த பூகோளத்தை நீரில் மேற்பரப்பில் உறுதியாக வைத்தார்.

இந்தப் ப்ரபஞ்ச ஸ்ருஷ்டியில் ப்ரஹ்மா ஒரு கருவியாக மட்டுமே உள்ளார். “நிமித்த மாத்ரமேவாஸீத் ஸ்ருஜ்யதாம் ஸர்க கர்மணி” என்கிறார் பராசரர்.      

அடியேன் வங்கிபுரம் சடகோப ராமானுஜ தாசன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment