ஞான ஸாரம் 40 – அல்லிமலர்ப் பாவைக்கு

ஞான ஸாரம்

முந்தைய பாசுரம்

முன்னுரை:

ஆசார்ய பக்தியும் அடியார்க்கு அடியராய் இருக்கும் அடியார் பக்தியும் கீழே பல பாடல்களால் விளக்கமாக எடுத்துரைக்கபட்டது. இப்படி விளக்கமாகக் கூறினாலும் அவ்வடியார்களின் பெருமை உலகோர்க்கு உணர்த்த வேண்டியதாயுள்ளது. அவர்க்ள் சொற்கள் ஆசார்யனைப் பற்றியும் அடியார்களைப் பற்றியும் உள்ளன. அவர்கள் செயலும் ஆசார்ய கைங்கர்யமாகவும் அடியார் தொன்டாகவும் உள்ளன. இவர்களுடய குறிக்கோள் அப்படியே உள்லன. உலகியலுக்கு வேறாக உள்ளது.

இதற்கு உதாரணமாக வடுக நம்பி வரலாற்றைக் காணலாம். வடுக நம்பி உடயவருக்கு பால் காய்ச்சிக் கொண்டிருக்கும்பொழுது பெருமாள் பெரிஅ திரு நாளில் அலங்காரஙளுடன் வீதியில் புறப்பட்டருள உடயவரும் பெருமாளை சேவிக்கப் புறப்பய்ட்டு “வடுகா பெருமாளை சேவிக்க வா” என்ரு கூப்பிட, அப்பொழுது வடுகா நம்பியும் “உம்முடயபெருமாளை சேவிக்க வந்தால் என்னுடய பெருமாளுக்குக் காய்ச்சுகின்ற பால் பொங்க்ப் போகும். ஆதலால் வர இயலாது” என்று வராமலே இருந்துவிட்டர். இவ்வாறான உதாரண்ங்கள் பலவும் காணலாம்.

இத்தகயவர்களுடய ஒழுக்கத்தையும் நாட்டர் பார்க்கையில் உலகியலுக்கு மாறாகத் தோன்றுவதால் அவர்களுடய ஒழுக்கத்தைப் பழிக்கக் கூடுமல்லவா? மேலும் நாட்டார் என்னும் இவ்வெண்ணம் போலவே இறைவனடியார்களும் அடியார்கடியாரை நோக்கி இது என்ன இவர்களுடய ஒழுக்கம்?  பகவானை அணுகாமல் ஆசர்யனயும் அடியார்களையும் பின் தொடர்கிறார்களே? அருள் செய்பவன்பகவானாயிருக்க இவர்களைத் தொடர்வது எதற்காக?என்ரு இவர்கள் மீது பழி சொன்னால் என்ன செய்வது? என்ற வினா எழுகிறது. நாட்டார்க்கும் பகவத் பக்தருக்கும் தோன்றும் இவ்வெண்ணெங்களுக்குப் பதில் சொல்லப்படுகிறது. இப்பாடலில் மேலும் இவ்வாறு பதில் சொல்கிற முகத்தால் அப்பெரியார்களுடய பேச்சுக்களும் செயல்களும் பார்வைகளும் உலகத்தாருடய நடத்தைகளும் வேறு பட்டிருக்கும் என்றும் இதுவே அவர்களுடய சிறப்பு என்றும் சொல்லி இந்நூல் முடிக்கப்படுகிறது.

Arjuna_meets_Krishna_at_Prabhasakshetra

“அல்லிமலர்ப் பாவைக்கு அன்பரடிக்கன்பர்
சொல்லும் அவிடு சுருதியாம்  – நல்ல
படியாம் மனுநூற்கவர் சரிதை பார்வை
செடியார் வினைத்தொகைக்குத் தீ”

 பதவுரை:  

அல்லிமலர்ப் பாவைக்கு  பெரிய பிராட்டியாரிடத்தில்
அன்பர்  காதலனாயிருக்கும் பகவானுடய
அடிக்கு அன்பர்  திருவடிகளில் பக்தராயிருக்குமவர்க்ள்
அவிடு சொல்லும்  வேடிக்கையாகச் சொல்லும் வார்த்தையும்
சுருதியால்  வேதத்துக்கு ஒப்பாகும்
அவர் சரிதை  அவர்களுடய செயல்கள்
மனுநூற்கு நல்லபடியாம்  மனுதர்ம ஸாஸ்திரத்திற்குநல்ல உதாரணமாகும்.
பார்வை  அவர்களுடய நோக்கு
செடியார்  தூறு மண்டிக்கிடக்கிற
வினைத் தொகைக்கு  பாவ கூட்டத்தை அழிப்பதற்கு
தீ  நெருப்புப் போன்றதாகும்.

விளக்கவுரை:

அல்லிமலர்ப் பாவைக்கு – தாமரையில் தோன்றிய இலக்குமிக்கு (அன்பர்) அவளிடம் அன்பாகவே இருக்கும் பகவான். பகவானை இப்பிராட்டியை முன்னிட்டு “அவளுக்கு அன்பனே” என்று அழைத்து பகவானி அறிவதற்குப் பிராட்டி அடயாளமாய் இருப்பாள்” என்னும் குறிப்புத் தெரிகிறது.  மேலும் பிராட்டியிடம் அவன் ஆராத காதலாகயிருப்பான் என்னும் கருத்தும் புலனாகிறது.இத்தகய பிராட்டியிடத்தில் அன்பனாய் இருக்கும் பகவானுடய திருவடிகலில் அன்புடயவர்கள் “அல்லிமலர்ப் பாவைக்கு அன்பரடிக்கு அன்பர்” என்று சொல்லப்பட்டனர். அதாவது இறைவன் திருவடிகலில் செய்யும் அன்பையே தங்களுக்கு அடையாளமாகக் கொண்டிருக்கும் பாகவதர்கள்.
சொல்லும் அவிடு சுருதியாம்: அத்தகைய பாகவதர்கள் வேடிக்கை வினோதமாகச் சொல்ல்ம் வார்தைகள் வேதக் கருத்துக்க்களய் இருப்பதால் வேதம் போன்று நம்பிக்கை உடையதாய் ஏற்கலாயிருக்கும் என்பதாம். குருபரம்பரையில் இத்தகைய வார்த்தைகளைக் காணலாம். உடையவைர் வார்த்தை, பட்டர் வார்த்தை, ஆழ்வான் வார்த்தை, நம்பிள்ளை வார்த்தை, திருக்கோளூர் பெண்பிள்ளை வார்தை என்ரு இப்படிப் பெரியோர்கள் சொல்லும் வார்த்தைக்ள் எல்லாம் வேத வேதாந்தங்களை எளிமையாகச் சொன்ன வார்த்தைகளாகும்.”வாய் தந்தன கூறுதியோ மறை தந்த வாயால்” என்று கம்ப நாட்டாழ்வாரும் இராமபிரான் இலக்குவனை நோக்கிக் கூறும் கவியில் குறிப்பிட்டார். “பேடையைப் பிடித்துத் தன்னைப் பிடிக்க வந்தடைந்த பேதை வேடனுக்கு உதவி செய்து விறகிடை வெந்தீ மூட்டி பாடுறு பஸியை நோக்கித் தன் உடல் கொடுத்த பைம்புள் வீடு பெற்று உயர்ந்த வார்தை வேதத்தின் விழுமிது அன்றோ” என்ற கம்பராமாயணப்பாடலில் சொல்லப்பட்ட புறாக் கதையில் புறாவின் வாயினால் சொல்லப்பட்ட சரணாகதி தர்மம் வேதத்தைக் காட்டினாலும் சிறப்பானதாகச் சொல்லப்பட்டுள்ளது அறியலாம்.
நல்லபடியாம் மனுநூற்கு அவர் சரிதை: அவர்களுடய சரிதையாவது அவர்களுடய நடத்தையாகும்.அதாவது மனுநூலில் சொல்லப்பட்ட ஒழுக்க நெறிகளுக்கு அடியார்களுடைய அன்றாட னடத்தைகல் மாதிரியாக விளஙும். தர்ம ஸாஸ்திரஙள் வர்ணாஸ்ரமஙளுக்கு ஏற்ப அவரவர்க்குரிய ஒழுக்கஙளைக் கட்டளையிட்டுள்ளன. அவற்றைக் கற்றுணர்ந்தவர்கள் அதன்படி ஒழுகுவார்கள். சாதாரண மக்கள் அதைக் கற்கவோ கற்றபடி நடக்கவோ இயலாது. ஆனாலும் தர்மஸாஸ்திரங்களைக் கற்றுணர்ந்த மேலோர்கள் னடப்பதைப் பார்த்து சாதரண மக்களும் அவற்றைக் கடைப் பிடிப்பார்கள். ஆகவெ அத்தகைய பெரியோர்களுடைய னடத்தை மற்றவர்கள் பின் பற்றுவதற்குரியதாக இருக்கிறது. அவர்களுடைய நடத்தயைக் கொண்டு தர்ம ஸாஸ்திரம் உண்டாயிற்று. என்று சொல்லும்படியாகவும் இருக்கும். அப்பொழுது இவர்களுடய நடத்தை அசல் போலவும் ஸாஸ்திரங்களிலே சொல்லப்பட்டவை னகல் போலவும் இருக்கிறது. அவ்வாறு இவர்களுடைய ஒழுக்கதிற்கு நம்பிக்கைக் கூறப்பப்டுகிறது. இதற்கு உதாரணமாக கம்ப ராமாயணத்தில் ஓரிடம் காணலாம்.
“எனைத்து உளமறை அவை இயம்பற் பாலன
பனைத்திறன் கரக்கரிப் பரதன் செய்கையே
அனைத்டிறம் அல்லன அல்ல: அன்னது
நினைத்திலை என்வயின் நேய நெஞ்ஜினால்”

(கம்பராமாயணம் -அயோத்தியா காண்டம் -திருவடி சூட்டு படலம்)

இது இராமபிரான் இலக்குவனை நோக்கிக் கூறுவதாகும்.

உலகத்துக்கெல்லம் ஒழுக்கங்களை வரையருத்துக் கூறுகிறது.வேதம். பரதனுடய ஒழுக்கம் எவையோ அவை வேதத்தில் கூறப்பட்டவையே. அவனிடத்தில் காணப்படாத ஒழுக்கந்கள்வேத்டத்தில் கூறிருந்தாலும் அவை ஏற்கத் தக்கதல்ல. பரதனது னடயில் உள்ளன எவையோ அவையெ ஏற்கத் தக்கனவாம் என்ற உண்மையை இராமன் இலக்குவனுக்கு எடுத்துரைப்பதாகக் கம்பன் கூறியுள்ளான். இன்குச் சொல்லப்பட்ட பரதன் சரிதை: மனு நூற்கு நல்லபடியாம்” என்று கூறப்படும் கருத்துக்கு ஒப்பு நோக்கலாம்.

பார்வை செடியார் வினைத் தொகைக்குத் தீ பாகவதப் பெருமக்களான அப் பெரியோர்களுடய பார்வையானது தூறு மண்டிக்கிடக்கிற வினைக் குவியலை அழிக்க வல்லதாக இருக்கும். அதாவது பெரியோர்களுடைய பார்வை வல்வினை இருந்த சுவடு தெரியாமல் போக்கும் ஆற்றலுடயதாகும் என்பதால் ஆன்ம   ந்ஜானத்தைக் விரிவு படுத்தும் என்பது உட்கருத்து.

கருத்து:

பெரிய பிராட்டியாருக்கு அன்பான பகவானுடைய திருவடிகளில் அன்பு செய்வார் வினோதமாகச் சொல்லும் வார்தைகளும் வேதமாகவே ஏற்றுக்கொள்ளப்படும். அவர்களுடைய னடத்தைகள் ஒழுக்க னெறியைக் கற்பிக்கும் நூலான மனு நூலாகும். சரியான அசலாய் விளந்கும் அதாவது இவர்கள் ஒழுக்கம் அசலாகவும் நூலில் சொல்லப்படுவது நகலாகவும் கொள்ளப்படும். இவர்களுடைய பார்வை தூரு மண்டிக்கிடக்கிற பாவக் குவியலுக்கு தீ பொன்று அழிக்கும் கருவியாய் இருக்கும். இவர்களுடைய பார்வை பட்டவர்கள் வினையிலிருந்து விடுபட்டு தூயவராய் னல் ஜ்நாநத்தை ப் பெறு வாழ்வார்கள் என்பதாம்.

Leave a Comment