ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
மங்களாசாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள்
தங்கள் ஆர்வத்தளவு தான் அன்றி – பொங்கும்
பரிவாலே வில்லிபுத்தூர் பட்டர் பிரான் பெற்றான்
பெரியாழ்வார் என்னும் பெயர்
பதினெட்டாம் பாசுரம். எம்பெருமானை மங்களாசாஸனம் செய்வதில் இவருக்கும் மற்றைய ஆழ்வார்களுக்கும் உள்ள பெரிய வித்யாசத்தாலே இவருக்குப் பெரியாழ்வார் என்ற திருநாமம் ஏற்பட்டது என்பதை அருளிச்செய்கிறார்.
எம்பெருமானை மங்களாசாஸனம் செய்வதில் மற்றைய ஆழ்வார்களைக் காட்டிலும் மிகவும் ஆர்வம் கொண்டிருந்ததாலும், எம்பெருமானிடத்திலே பொங்கும் பரிவை உடையவராக இருந்ததாலும் ஸ்ரீவில்லிபுத்தூரிலே அவதரித்த ஸ்ரீவிஷ்ணுசித்தர் பெரியாழ்வார் என்னும் திருநாமத்தைப் பெற்று அத்தாலேயே ப்ரஸித்தமாக அழைக்கப்பட்டார்.
மங்களாசாஸனம் என்பது மற்றவர்களை வாழ்த்துவது. பெரியோர்கள் சிறியோர்களுக்கு மங்களாசாஸனம் செய்வது வழக்கம். சிறியோர்கள் பெரியோர்களைச் செய்யலாமா என்பது இங்கு ஏற்படும் ஒரு கேள்வி. பிள்ளை லோகாசார்யர் இந்த விஷயத்தை ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்திலே அழகாக விளக்கியுள்ளார். எம்பெருமானோ எல்லோரையும் விட மிகப் பெரியவன். ஆத்மாவோ மிகச் சிறியது. இந்த நிலையிலே “ஆத்மாக்களான நாம் எம்பெருமானுக்கு மங்களாசாஸனம் செய்யலாமா?” என்று கேட்டுக் கொண்டு, “மங்களாசாஸனம் செய்வதே நம் இயற்கைக்குச் சேர்ந்தது” என்று விளக்குகிறார். ஞானத்தின் பார்வையில் எம்பெருமான் பெரியவனே ஆகிலும், ப்ரேமத்தின் பார்வையில் அந்த எம்பெருமானுக்கு இந்த ஸம்ஸாரத்தில் என்ன ஆபத்து வந்து விடுமோ என்று பயப்படுவதே, உண்மையான அன்பு கொண்ட ஒரு பக்தனின் அடையாளம். இதை நன்றாக நமக்குப் புரிய வைத்தவர் பெரியாழ்வார். இதனாலேயே இவர் ஆழ்வார்களில் தனித்துவம் வாய்ந்தவராக விளங்கி, பெரியாழ்வார் என்ற திருநாமத்தையும் பெற்றார்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org
Namaskaram Swamy,
Devareer has given a very lucid explanation for the Upadesha Rathinamaalai prabhandham. Adiyen is having a doubt. Request devareer to clarify this.
மங்களாசாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள்
தங்கள் ஆர்வத்தளவு தான் அன்றி – பொங்கும்
பரிவாலே “வில்லிபுத்தூர் பட்டர் பிரான் பெற்றான்”
பெரியாழ்வார் என்னும் பெயர்.
In this “பெற்றான்” is written. Please let adiyen know the meaning of this usage. Shouldn’t it be “பெற்றார்”?
Request devareer to let know the explanation of this usage.
Usually we can see proximity (closeness) to a person, make us speak with/about him in Ekavachanam. This can be taken as that.
adiyen ramanuja dasan