வரவரமுனி சதகம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வரவரமுனி சதகம் ஸ்ரீ எறும்பியப்பா மாமுனிகள் விஷயமாக அருளிச்செய்த அத்புத க்ரந்தம், இதன் சொற்சுவை பொருட்சுவை சந்தச்சுவை யாவும் எறும்பியப்பாவின் ஆசார்ய பக்திக்கு முப்பரிமாணம் சேர்த்தாப்போல உள்ளன. விஷயமோ மாமுனிகள் ஆகையால் நூற்பொருள் ஏற்றம் தன்னிகரற்றது. மாற்றற்ற செழும்பொன் மணவாள மாமுநி வந்திலனேல் ஆற்றில் கரைத்த புளி அல்லவோ தமிழ் ஆரணமே எனும் ஒரு வாக்கே போதும்.

கர்த்தாவோ எறும்பியப்பா. தம் காலத்து ஆசார்ய ச்ரேஷ்டர்களால் ஞாநம் அநுஷ்டானங்களுக்கு மிகவும் போற்றப் பட்டவர். இவர் முதலில் மாமுனிகளிடத்து விமுகராய் இருந்து பின் தமது திருவாராதனத்துச் சக்கரவர்த்தி திருமகனால் அவரையே ஆசார்யராக ஏற்கப் பண்ணப்பட்டவர். இந்நூலிலும் ஸ்ரீராமனையே தொடர்புபடுத்தி எறும்பியப்பா சாதித்துள்ளார்.

பொழிப்புரை எழுதியவர் அடியேனுடைய தகப்பனார் ஸ்ரீ உ வே நியாய வேதாந்த வித்வான் தாமல் வங்கீபுரம் பார்த்தசாரதி ஐயங்கார் ஸ்வாமி. கச்சித் திருப்பாடகத்தில் பிறந்து, ஸ்ரீபெரும்புதூர் கலாசாலையில் ஸம்ஸ்க்ருதமும் , திருப்பதி வேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரியில் ந்யாயமும் வேதாந்தமும் வாசித்து, ஆஸூரி பெரிய ஸ்வாமியிடமும், பின்னர் திருநாராயணபுரத்திலும் ஸ்ரீரங்கத்திலும் ஜீயராக எழுந்தருளியிருந்த ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி ஸ்ரீ உ வே காரப்பங்காடு தேசிக வரதாசார்ய ஸ்வாமியிடமும் ஸ்ரீரங்கம் திருப்பணிகள் நடந்தபோது அந்தேவாசியாய் இருந்து ஸ்ரீபாஷ்யம், ஸ்ரீராமாயணம், பகவத் விஷயம், ஸ்ரீவசன பூஷணாதிகள் அதிகரித்தவர்.

அவருடைய இந்தப் பொழிப்புரை கையெழுத்துப் பிரதி உதவிய தேவப்பெருமாள் அருளிச்செயல் கோஷ்டி ஸ்ரீ உ வே அத்தங்கி திருமலை ஸ்வாமிக்கும், இந்தக் கணிப்பொறி தட்டச்சு முழுமையும் சரிபார்த்து உதவிய ஸ்ரீ உ வே ஸாரதி தோதாத்ரி ஸ்வாமிக்கும், ஸௌ. ப்ரீதி மதுஸூதனனுக்கும்; ச்லோகங்களை தேவநாகரியில் தட்டச்சு செய்த ஸ்ரீ உ வே ஸ்ரீநிவாஸன் ஸ்வாமிக்கும் அடியேனின் தகப்பனாரின் மங்களாசாஸனங்களையும் மாமுநிகள் எறும்பியப்பாவின் இணையற்ற கிருபா விசேஷத்தையும் வேண்டிநிற்கிறேன்.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

எறும்பியப்பா விஷயமான தனியன்

श्री देवराजगुरुवर्यविषयोsयम् श्लोक: |

सौम्यजामातृयोगीन्द्रचरणाम्बुजषट्पदम् |
देवराजगुरुं वन्दे दिव्यज्ञानप्रदं शुभम्  ||

ஸௌம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர  சரணாம்புஜ ஷட்பதம் |
தேவராஜ குரும் வந்தே திவ்ய ஞான ப்ரதம்  ஷுபம்  ||

ஸ்ரீமணவாளமாமுனிகளின் திருவடித் தாமரைகளுக்கு வண்டு போன்றவரும், நல்ல ஞாநத்தை அளிப்பவரும், சுபரும் ஆன தேவராஜ குருவை வணங்குகிறேன்.

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

One thought on “வரவரமுனி சதகம்

  1. M v NARASIMHAN

    “Varavaramuni Sathagam I am not able to find out the site. I am not able to see the meaning of the sathagam in the given by you. Pl.leet me know the correct name of the site.

    Reply

Leave a Reply to M v NARASIMHAN Cancel reply

Your email address will not be published. Required fields are marked *