வரவரமுனி சதகம் – பகுதி 4

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வரவரமுனி சதகம்

<< பகுதி 3

सर्वावस्थासदृशविविधाSशेषगस्त्वत्प्रियाणां |
त्यक्त्वा भर्तुस्तदपि परमं धाम तत्प्रीतिहेतो: ||
मग्नानग्नौ वरवरमुने मादृशानुन्निनीषन् |
मर्त्याSवासो भवसि भगवन् ! मङ्गलं रङ्गधाम्नः || ३१॥

ஸர்வாவஸ்தா ஸத்ருச விவிதா சேஷகஸ்த்வத் ப்ரியாணாம் |
த்யக்த்வா பர்த்துஸ் ததபி பரமம் தாம தத் ப்ரீதி ஹேதோ: ||
மக்நாநக்நௌ வரவரமுநே மாத்ருசாநுந்நீநீஷன் |
மர்த்யாவாஸோ பவஸி பகவந் மங்கலம் ரங்கதாம்ந:  || 31

எல்லா தசைகளிலும் தகுந்த பலவகையான கைங்கர்யத்தைச் செய்கிற வரவரமுநியே! பகவானே! அவருக்குப் ப்ரீதி உண்டாவதற்காக அவருடைய அந்தப் பரமபதத்தையும் விட்டு (ஸம்ஸார) அக்னியில் மூழ்குகிற என்னைப் போன்றவர்களை மீட்பதற்கு விரும்பி மனிதர்களுடன் வசிப்பவராக ஸ்ரீரங்கத்திற்கு மங்களாவஹமாக வந்திருக்கிறீர்.

प्रत्यूषार्कद्युतिपरिचयस्मेरपद्माभिताम्रं |
पश्येयं तद्वरवरमुने पदयुग्मं त्वदीयम् ||
पाथो बिन्दुः परमणुरपि स्पर्शवेधी यदीयो |
भावेभावे विशयमुशितान्पावयत्येव लोकान् || ३२॥

ப்ரத்யூஷார்க்க த்யுதி பரிசய ஸ்மேர பத்மாபி தாம்ரம் |
பச்யேயம் தத் வரவரமுநே பாதயுக்மம் த்வதீயம்  ||
பாதோ பிந்து: பரமணுரபி ஸ்பர்ச வேதீ யதீயோ |
பாவே பாவே விஷயமுஷிதாந் பாவயத்வேவ லோகாந் || 32

விடிந்த ஸூர்யன் கிரணத்தின் ஸம்பந்தத்தால் அழகிய தாமரைபோல் சிவந்த உமது இரண்டு திருவடிகளையும் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கக் கடவேன். அந்தத் திருவடி ஸம்பந்தம் பெற்ற நீர்த்துளியும் தனது ஸம்பந்தம் பெற்ற உலகங்களை (மனிதர்களை) சுத்தப் படுத்துகிறது. உலகங்களால் அபஹரிக்கப்பட்ட மனிதர்களை அடிக்கடி சுத்தப் படுத்துகிறது.

नित्ये लोके निवसति पुनः श्रीमति क्ष्मागतानां
दूरिभावः प्रभवति पुरा दुष्कृतदुर्विपाकैः ||
संप्रतयेवं सकलसुलभो यद्यपि त्वं दयाब्धे
मामेवैकं वरवरमुने मन्यसे वर्जनीयम् || ३३॥

நித்யேலோகே நிவஸதி புந: ஸ்ரீமதி க்ஷ்மாகதாநாம்
தூரீ பாவம் ப்ரபவதி புரா துஷ்க்ருதை: துர்விபாகை: ||
ஸம்ப்ரத்யேவம் ஸகல ஸுலபோ யத்யபித்வம் தயாப்தே
மாமேவைகம் வரவர முநே மன்யஸே வர்ஜநீயம் || 33

நித்ய லோகமான பரமபதத்தில் நீர் வஸிக்கும்போது பூமியில் உள்ளவர்களுடைய பாபங்களால் அணுக முடியாதவராயிருந்தும் இப்போது எல்லாருக்கும் ஸுலபராக இருக்கிறீர். கருணைக் கடலே! வரவர முநியே! என் ஒருவனையே விடாத் தகுந்தவனாக நினைக்கிறீர்.

त्वत्पादाब्जप्रणयविधुरो दूरगस्त्वत्प्रियाणां |
त्वत्सम्बन्धस्मरणविमुखो वीतरागस्त्वदुक्तौ ||
त्वत्कैङ्कर्यत्वदुपसदनत्वत्प्रणामाSनभिज्ञो |
दूये दूरं  वरवरमुने ! दोषलक्षैकलक्ष्यम् || ३४॥

த்வத் பாதாப்ஜ ப்ரணய விதுரோ தூரகஸ்த்வத் ப்ரியாணாம் |
த்வத் ஸம்பந்தஸ்மரண விமுகோ வீத ராகஸ் த்வதுக்தௌ  ||
த்வத் கைங்கர்ய த்வத் உபஸதந த்வத் ப்ரணாமா நபிஞ்ஜோ |
தூயே தூரம் வரவரமுநே தோஷ லக்ஷைக லக்ஷ்யம் || 34

உமது திருவடித் தாமரைகளில் அன்பில்லாதவன், உமது ஸம்பந்தத்தை நினைக்காதவன், உமது பக்தர்களுக்கு வெகு தூரத்தில் இருப்பவன், உமது வார்த்தைகளில் ஆசையற்றவன், உமது கைங்கர்யம் உம்மை அநுஸரிப்பது உம்மை வணங்குவது முதலியன அறியாதவன் ஆன நான் லக்ஷக் கணக்கான குற்றங்களுக்கிருப்பிடமாக வெகு தூரத்திலேயே வருந்துகிறேன்.

प्रादुर्भूतप्रचुरमतयो ये परब्रह्मसाम्यात् |
पश्यन्तस्तत्पदमनुपं ये पुनश्शुध्दसत्वाः ||
सर्वैरेतैर्वरवरमुने ! शश्वदुद्दिश्य सेव्यम् |
कांक्षत्येतत्कथमयमहो कामकामः पदाब्जं || ३५॥

ப்ராதுர்பூத ப்ரசுர மதயோ யே பர ப்ரம்ஹஸாம்யாத் |
பச்யந்தஸ்தத் பதமநுபவம் யே புந: சுத்த ஸத்வா: ||
ஸர்வைரேதைர் வரவரமுநே சச்வதுத்திச்ய ஸேவ்யம் |
காங்க்ஷத்யேதத் கதமயமஹோ காம காம: பதாப்ஜம் || 35

மலர்ந்த புத்தியுடைய எவர்கள் பரமபதத்தைப் பரப்ரஹ்மத்துக்கு ஒப்பாகக் காண்கிறார்களோ சுத்த ஸத்வ குணமுள்ளவர்கள் எவர்களோ அவர்கள் உமது திருவடியை வரவரமுநியே! அடிக்கடி பூசித்து விரும்புகிறார்கள். இதென்ன ஆச்சர்யம் !

प्राप्तः क्षेमं प्रकृतिमधुरैः प्रागपि त्वत्कटाक्षैः |
सोऽयञ्जन्तुस्त्वदनुभजनं त्वत्त एवाप्तुमिच्छन् ||
क्रन्दत्युच्चै: कलुषमतिभिः संवसन् कामकामैः |
कालक्षेपो वरवरमुने ! तत्कथं युज्यते ते || ३६॥

ப்ராப்த: க்ஷேமம் ப்ரக்ருதி மதுரை: ப்ராகபி த்வத் கடாக்ஷை: |
ஸோயம் ஜந்து: ஸ்த்வதநுபஜநத்வத்த ஏவாப்துமிச்சந்  ||
க்ரந்தத்யுச்சை: கலுஷமதிபி: ஸம்வஸந் காம காமை: |
காலக்ஷேபோ வரவரமுநே தத்கதம் யுஜ்யதே தே || 36

இயற்கையில் இனிமையான உமது கடாக்ஷங்களால் முந்தியே க்ஷேமத்தை அடைந்த இந்த பிராணி  உம்மைத் துதிப்பதை உம்மிடமிருந்தே அடைய விரும்பி உலக விஷயங்களில் பற்றுள்ள கலக்கமுள்ள புத்தியுள்ளவர்களுடன் வசித்துக்கொண்டு கதறுகிறது. வரவரமுநியே! உமக்குக் காலக்ஷேபம் எப்படி நடைபெறுகிறது?

कोणैरक्ष्णः कुमनसमिमं निर्मलं कल्पयित्वा |
हातुं  दूरे वरवरमुने ! हा !!! कथं युज्यते ते ||
पाथः पातुं प्रयतनपरःपंकिलं शोधयित्वा |
पंके मुञ्चन् पुनरिदमतः प्राप्नुयादेव किंवा || ३७॥

கோணைரக்ஷ்ண: குமநஸ  மிமம் நிர்மலம் கல்பயித்வா |
ஹாதும் தூரே வரவரமுநே ஹா கதம் யுஜ்யதே தே  ||
பாத: பாதும் ப்ரயதநபர: பங்கிலம் சோதயித்வா |
பங்கேமுஞ்சந் புநரிதமத: ப்ராப்நுயாதேவ  கிம்வா ||
37

வரவரமுநியே! தேவரீர் திருக்கண்களின் மூலையால் கெட்ட மனமுள்ள என்னைப் பரிசுத்தப்படுத்தி விட்டுவிடுவதற்கு எப்படித் தகும்? தண்ணீர் குடிக்க முயற்சியுள்ள ஒருவன் கலங்கிய நீரை சுத்தப் படுத்தி மறுபடி சேற்றில் விட்டு அதையே மறுபடி ஏற்றுக் கொள்வானா?

कालः किंस्विन्न भवति समं कांक्षितः कांक्षितानां |
यस्मिन्नस्मादनलजलधेरुत्प्लुतस्त्वांनमस्यन् ||
सिक्तः श्रीमन् ! वरवरमुने ! शीतलैस्त्वत्कटाक्षैः –
मुक्तस्तापैरमृतमतुलं गाहते मोदमानः || ३८॥

கால: கிம்ஸ்விந்ந பவதி ஸமம் காங்க்ஷித: காங்க்ஷிதாநாம் |
யஸ்மிந் அஸ்மாத் அநல ஜலதேருப்லுதஸ்த்வாம் நமஸ்யந் ||
ஸிக்த: ஸ்ரீமந் வரவரமுநே சீதலை: த்வத் கடாக்ஷை:
முக்தஸ்தாபைரம்ருதமதுலம் காஹதே மோதமாந: || 38

விரும்பத் தகுந்தவைகளுக்குள் விரும்பாத தகுந்த காலம் நமக்குக் கிட்டாதா? இந்த நெருப்புக்குக் கடலிலிருந்து மேலே கிளம்பி உம்மை வணங்கிக்கொண்டு வரவமுநியே குளிர்ந்த உமது பார்வைகளால் நனைக்கப்பட்டு தாபங்களால் விடுபட்டவனாகி நிகரற்ற அமுதக் கடலை சந்தோஷத்துடன் ப்ரவேசிப்பேன்.

कामक्रोधक्षुभितत्दृदयाः कारणं वर्जयित्वा
मर्त्यौपम्यं वरवरमुने! ये पुनर्मन्वते ते ||
दुष्टं तेषामभिमततया  दुर्वसं देशमृच्छन्  –
अन्तःस्वान्तं कथमपि मिथो भावयेयं भवन्तम् || ३९॥

காமக்ரோத க்ஷுபித ஹ்ருதயா: காரணம் வர்ஜயித்வா
மர்த்யௌபம்யம்வரவரமுநே யே புநர் மந்வதே தே  ||
துஷ்டம் தேஷாமபிமததயா துர்வஸந் தேசம்ருச்சந்
அந்த: ஸ்வாந்தம் கதமபி மிதோ பாவயேவம் பவந்தம் || 39

காமக்ரோதங்களால் கலங்கிய மனதையு டையவர்கள் காரணமின்றியே வரவரமுநியே! உம்மை மனிதர்களுக்கு ஸமமாக நினைக்கிறார்கள். அவர்கள் விருப்பத்திற்காகக் கெட்ட என் மனத்தில் உம்மை ச்ரமப்பட்டு நினைக்கக் கடவேன்.

नामैतत्ते नवनवरसं नाथ ! सङ्कीर्त्यनृत्यन् –
अन्तःकर्तुं वरवरमुने! नित्यमिच्छत्ययं त्वाम् ||
अर्ध्दंनिद्रा हरति दिवसस्यार्द्धमन्यन्नृशंसो |
वासो मूढैर्मलिनमतिभिर्वाक्प्रवृत्तिं निरुन्धे || ४० ॥

நாவை தத்தே நவநவ ரஸம் நாத ஸங்கீர்த்ய ந்ருத்யந் |
அந்த: கர்த்தும் வரவரமுநே நித்யமிச்சத்யயம் த்வாம் ||
அர்த்தம் நித்ரா ஹரதி திவஸஸ்யார்த்த மந்யந்ந்ருசம்ஸ
வாஸோ மூடைர் மலிநமதிபி: வாக் ப்ரவ்ருத்திம் நிருந்தே: || 40

வரவரமுநியே! நாதனே! புதிய ரஸமுள்ள இந்தத் திருநாமத்தைச் சொல்லி ஆடிக்கொண்டு மனதிலேயே வைத்துக்கொள்ள இவன் எண்ணுகிறான். இதில் பாதி காலம் தூக்கத்தால் போகிறது. பகலில் பாதி பாகம் வேறு வாஸத்தில் மூடமானவர்களால் வாக் ப்ரவ்ருத்தியையும் தடுக்கிறது.                                       

வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

 

Leave a Comment