பூர்வ திநசர்யை – 26 – அத ஸ்ரீஸைலநாதார்ய

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ வரவரமுநி திநசர்யை

<<முன் பாசுரம்                                                                                                          அடுத்த பாசுரம்>>

26-ஆம் பாசுரம்

अथ श्रीशैलनाथार्यनाम्नि श्रीमति मण्डपे
तदङ्घ्रि पङ्कजद्वन्द्वच्छायामध्यनिवासिनम् 26

அத ஸ்ரீஸைலநாதார்யநாம்நி ஸ்ரீமதி மண்டபே |
ததங்க்ரி பங்கஜத்வந்த்வச்சாயா மத்யநிவாஸிநம் || 26

பதவுரை:- அத – மடத்துக்கு எழுந்தருளியபின்பு, ஸ்ரீஸைலநாதார்ய நாம்நி – ஸ்ரீஸைலநாதர் (திருமலையாழ்வார்) என்னும் தம்மாசார்யராகிய திருவாய்மொழிப்பிள்ளையின் திருநாமமுடையதாய், ஸ்ரீமதி – மிக்க ஒளியுடையதான, மண்டபே – மண்டபத்தில், தத் அங்க்ரி பங்கஜ த்வந்த்வச்சாயா மத்ய நிவாஸிநாம் – சித்ரரூபமாக எழுந்தருளியிருக்கும் அந்தத் திருவாய்மொழிப்பிள்ளையுடைய திருவடித்தாமரையிணையின் நிழல் நடுவே எழுந்தருளியிருக்கிற, (மாமுனிகளைத் தொழுகிறேனென்று மேல் ஸ்லோகத்தில் இதற்கு அந்வயம்)

கருத்துரை:- தமது மடத்திலுள்ள காலக்ஷேப மண்டபத்திற்குத் ‘திருவாய்மொழிப் பிள்ளை’ என்ற தமது குருவின் திருநாமம் சாத்தி அதில் சித்ரவுருவாக அவரை எழுந்தருளப் பண்ணினார் மாமுனிகள். அந்தச் சித்திரத்தின் திருவடி நிழலில் தாம் வீற்றிருக்கிறார் என்க. ‘ஸ்ரீமதி மண்டபே’ மிக்க ஒளியுடைய மண்டபத்தில். இங்கு மண்டபத்திற்குக்கூறிய ஒளியாவது – பிள்ளைலோகாசார்யர் முதலிய பூர்வாசார்யர்களுடைய திருமாளிகையிலுள்ள ஸுத்தமான மண்ணைக் கொண்டு வந்து சுவர் முதலியவற்றில் பூசியதனாலுண்டான ஸுத்தியேயாகும். மஹான்கள் எழுந்தருளியிருந்த ஸ்தாநங்களில், அவர்களின் திருவடிகள் பட்ட மண் பரிஸுத்தமன்றோ ? அதனாலன்றோ இம்மண்டபத்திற்கு ஸுத்தியேற்படுவது. இங்கு ‘ததங்க்ரி பங்கஜத்வந்த்வச்சாயா மத்ய நிவாஸிநாம்’ என்று ஷஷ்டி பஹுவசநாந்தமான பாடமும் காண்கிறது. அப்பாடத்திற்கு – அத்திருவாய்மொழிப்பிள்ளையின் திருவடிச்சாயையின் நடுவில் (தம்மைப்போல்) எழுந்தருளியிருக்கிற தமது ஸிஷ்யர்களுக்கு என்பது பொருள். இதற்கு மேல் ஸ்லோகத்தில் உள்ள ‘திவ்யப்ரபந்தாநாம் ஸாரம் வ்யாசக்ஷாணம் நமாமி தம்’ (திவ்யப்ரபந்தங்களின் ஸாரார்த்தங்களை உபதேஸித்துக் கொண்டிருக்கும் அம்மாமுனிகளை வணங்குகிறேன்) என்றதனோடு அந்வயம் கொள்ளவேண்டும். (26)

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

Leave a Comment