பூர்வ திநசர்யை – 25 – மங்களாசாசனம்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ வரவரமுநி திநசர்யை

<<முன் பாசுரம்                                                                                                          அடுத்த பாசுரம்>>

25-ஆம் பாசுரம்

मङ्गलाशासनं क्रुत्वा तत्र तत्र यथोचितम्
धाम्नस्तस्माद्विनिष्क्रम्य प्रविश्य स्वं निकेतनम् 25

மங்களாசாசனம் க்ருத்வா தத்ர தத்ர யதோசிதம் |
தாம்நஸ் தஸ்மாத்விநிஷ்க்ரம்ய ப்ரவிஸ்ய ஸ்வம் நிகேதநம் || 25

பதவுரை:- தத்ர தத்ர – ஆண்டாள் தொடங்கி பரம்பதநாதன் முடிவான அந்தந்த அர்ச்சாவதார விஷயங்களில், மங்கள் ஆஸாஸநம் – (உள்ள குறைகளனைத்தும் நீங்கப்பெற்று) மேன்மேலும் எல்லையில்லாத மங்களங்கள் (நன்மைகள்) உண்டாக வேணுமென்னும் ப்ரார்த்தனையை, யதோசிதம் – அவ்வவ்விஷயங்களில் தமக்கு உண்டான ப்ரீதிக்குத் தக்கபடி, க்ருத்வா – செய்துவிட்டு , தஸ்மாத் தாம்ந – அந்த ஸந்நிதியிலிருந்து, விநிஷ்க்ரம்ய – வருந்திப்புறப்பட்டருளி, ஸ்வம்நிகேதநம் – தம்முடையதான மடத்திற்குள், ப்ரவிஸ்ய – ப்ரவேஸித்து (உட்புகுந்து)

கருத்துரை:- மாமுனிகள் ஆண்டாள் முதலியவர்களின் ஸந்நிதிக்குச் செல்வது, அவர்களைச் சேவித்துத் தாம் ஒருபலனைப் பெறுவதற்காக அல்லாமல், அவர்கள்தமக்கு மங்களாஸாஸநம் செய்வதற்காகவேயாகையால், ‘அவர்களைச் சேவித்து’ என்னாமல், அவர்களுக்கு மங்களாஸாஸனம் செய்து என்றார். மங்களாஸாஸநம் செய்வதும் முக்யமாக எம்பெருமானார்க்கேயாகையாலும், அவருடைய உகப்புக்காகவே மற்றுள்ளவர்களுக்கு மங்களாஸாஸநம் செய்வதனாலும் மங்களாஸாஸநங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நெஞ்சில் கொண்டு, ‘யதோசிதம்’ (அவரவர்களுக்குத் தக்கபடி) என்றருளிச்செய்தாரானார். ‘அநக்நி: அநிகேத: ஸ்யாத்’ (ஸந்யாஸி அக்நியில் ஹோமம் செய்வதும், ஸ்திரமான வீடும் இல்லாதிருக்கக்கடவன்) என்று ஸாஸ்த்ர விதியிருக்கச் செய்தேயும் ‘ஸ்வம் நிகேதநம் ப்ரவிஸ்ய’ (தமது மடத்திற்கு எழுந்தருளி) என்று அவர் தமதாக ஒரு இருப்பிடத்தை இங்கே குறிப்பிட்டது ஸ்ரீரங்கநாதன் மாமுனிகளுக்கென்னவே ஓரிடத்தை நியமித்து அதில் ஸ்திரமாக அவரை எழுந்தருளியிருக்கும்படி ஆணையிட்டருளியதனால் குற்றத்தின் பாற்படாதென்று கருதவேண்டும். ‘விநிஷ்க்ரம்ய’ = (ஸ்ரீரங்கநாதன் ஸந்நிதியிலிருந்து வருந்தி மிகமுயன்று புறப்பட்டு) என்றது, அவ்வவர்களை விட்டுப் பிரிய மனமில்லாமையால், மடத்தில் செய்யவேண்டிய திருவாராதநம், க்ரந்த காலக்ஷேபம் முதலிய கார்யங்களுக்காகத் திரும்பி எழுந்தருளவேண்டிய நிர்பந்தத்தைக் குறிப்பதாகக் கொள்க. (25)

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

Leave a Comment