பூர்வ திநசர்யை – 27 – தத்த்வம்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ வரவரமுநி திநசர்யை

<<முன் பாசுரம்                                                                                                          அடுத்த பாசுரம்>>

27-ஆம் பாசுரம்

तत्त्वम् दिव्यप्रबन्धानां सारं संसारवैरिणाम्
सरसं सरहस्यानां व्याचक्षाणं नमामि तम् 27

தத்த்வம் திவ்யப்ரபந்தாநாம் ஸாரம் ஸம்ஸாரவைரிணாம் |
ஸரஸம் ஸரஹஸ்யாநாம் வ்யாசக்ஷாணம் நமாமி தம் || 27

பதவுரை:- ஸம்ஸார வைரிணாம் – ஸரீரஸம்பந்த ரூபமான ஸம்ஸாரத்தைப் பகைக்குமவையாய் (போக்கடிக்குமவையாய்) ஸரஹஸ்யாநாம் – திருமந்த்ரம், த்வயம், சரமஸ்லோகம் ஆகிய மூன்று ரஹஸ்யங்களின் பொருள்களோடு கூடியவைகளுமான, திவ்யப்ரபந்தாநாம் – ஆழ்வார்கள் அருளிச்செய்த திவ்யப்ரபந்தங்களினுடைய, ஸாரம் – ஸம்ஸாரத்தைப் போக்கத்தக்க மிக்க பலமுடைய, தத்த்வம் – ஜீவாத்மஸ்வரூபத்தின் உண்மைநிலையான ‘ஆசார்யனே ஸேஷியும், உபாயமும், ப்ராப்யமும்’ என்னும் பொருளை, ஸரஸம் – மிக்க இனிமையோடு கூடியதாக, வ்யாசக்ஷாணம் – ஐயந்திரிபற விவரித்தருளிச்செய்கிற, தம் – அம்மணவாளமாமுனிகளை, நமாமி – தெண்டம் ஸமர்ப்பிக்கிறேன்.

கருத்துரை:- திவ்யப்ரபந்தங்கள் ஸரீரஸம்பந்தரூபமான ஸம்ஸாரத்தைப் போக்கடிப்பன என்ற விஷயம் ‘மாறன் விண்ணப்பம் செய்த சொல்லார் தொடையல் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம் பொல்லாவருவினை மாய வன்சேற்றள்ளல் பொய்ந்நிலத்தே’ (திருவிருத்தம்-100) ‘செயரில் சொல்லிசைமாலை ஆயிரத்துளிப்பத்தால் வயிரம் சேர் பிறப்பறுத்து வைகுந்தம் நண்ணுவரே’ (திருவாய் 4-8-11) முதலிய பலஸ்ருதிப் பாசுரங்களில் காணலாகும். முற்கூறிய ரஹஸ்யங்களுக்கும் – எம்பெருமான் ஸேஷியும், உபாயமும், ப்ராப்யமும் ஆவான் என்பது மேலெழுந்தவாறு தோன்றும் பொருளாகும். சிறிது ஆராய்ந்தவாறே, பாகவதர்களே ஸேஷியும், உபாயமும், ப்ராப்யமும் ஆவர்கள் என்பது தோன்றும். மேலும் சற்று விமர்ஸித்தால் ஆசார்யனே ஸேஷியும், உபாயமும், ப்ராப்யமும் ஆவார் என்பது புலப்படும். ஆக, ரஹஸ்யத்ரயத்துக்கும் முக்கிய நோக்கம் மூன்றாம் பொருளாகிய ஆசார்யனிடத்திலேயே ஆகுமென்பது ஆசார்ய நிஷ்டையில் ஊன்றிய ஸ்ரீமதுரகவிகள் முதலிய மஹான்களின் துணிபாகும். இங்கு மணவாளமாமுனிகள் யதீந்த்ரப்ரவணர் – எம்பெருமானாரிடத்தில் ஊன்றியவராகையால், அவரையே ஸேஷியாகவும், உபாயமாகவும், ப்ராப்யமாகவும், ஸிஷ்யர்களுக்கு திவ்யப்ரபந்தங்களின் ஸாரார்த்தமாக உபதேஸித்தாரென்பது அறியத்தக்கது. ஆசார்யர்களில் எம்பெருமானாரே உயர்ந்தவரென்று முன்பே கூறப்பட்டது இங்கு நினைக்கத்தகும். ஸேஷி – தலைவன்; ப்ராப்யன் – அடையத்தகுந்தவன்; உபாயம் – நாம் தலைவனை அடைவதற்குத்தக்க கருவி. நாம் கைங்கர்யம் செய்யத்தக்க தலைவர் ஆசார்யரேயாகையால், அதற்காக அடையத்தக்க (ப்ராப்யரான) வேறொரு உபாயத்தைத் தேடாமல் அவ்வாச்சார்யரையே உபாயமாக பற்றவேணுமென்பது ரஹஸ்யத்ரயத்தின் ஸாரமான பொருளாகும். இதையே மாமுனிகள் ஸிஷ்யர்களுக்கு உபதேஸித்ததாக இந்த ஸ்லோகத்தில் கூறினாராயினார். இப்படி உயர்ந்ததோர் அர்த்தத்தை உபதேஸித்த மணவாளமாமுனிகளுக்குத் தலையல்லால் கைம்மாறில்லாமையாலே, தலையால் வணங்குதலை ‘தம் நமாமி’ – அவரை வணங்குகிறேனென்றதாகக் கொள்க. (27)

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

Leave a Comment