ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
மன்னு திருமழிசை மாடத் திருகுருகூர்
மின்னு புகழ் வில்லிபுத்தூர் மேதினியில் – நன்னெறியோர்
ஏய்ந்த பத்திசாரர் எழில் மாறன் பட்டர் பிரான்
வாய்ந்துதித்த ஊர்கள் வகை
முப்பத்திரண்டாம் பாசுரம். திருமழிசை ஆழ்வார் நம்மாழ்வார் மற்றும் பெரியாழ்வாரின் அவதார ஸ்தலங்களை அருளிச்செய்கிறார்.
இந்த உலகத்தில் ஆசார்யனின் கருணையையே நோக்கி இருப்பது என்கிற நல்ல நெறியில் இருப்பவர்கள் தொழும் ஸ்ரீபக்திஸாரர் எனப்படும் திருமழிசை ஆழ்வார், அழகு பொருந்திய மாறன் எனப்படும் நம்மாழ்வார், பட்டர்பிரான் எனப்படும் பெரியாழ்வார் ஆகியோர் அவதரித்த ஸ்தலங்கள் முறையே ஸ்ரீ ஜகந்நாதன் எம்பெருமான் பொருந்தி இருக்கும் மஹீஸார க்ஷேத்ரம் எனப்படும் திருமழிசை, மாட மாளிகைகள் சூழ்ந்த ஆழ்வார்திருநகரி எனப்படும் திருக்குருகூர் மற்றும் ப்ரகாசமான புகழை உடைய ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகியவை.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org