ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – தனியன்கள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை

தேன் பயிலும் தாரான் எதிராசன் சேவடி மேல்*
தான் பரமபத்தி தலை எடுத்து* – மாந்தர்க்கு
உணவாக ஆர்த்தியுடன் ஒண் தமிழ்கள் செய்தான்*
மணவாள மாமுனிவன் வந்து

மணவாள மாமுனிகள் யதிராஜரான எம்பெருமானாரின் தேன் பெருகும் திருவடி மேலே பரமபக்தி என்று சொல்லப்படும் அளவிறந்த அன்பால், அந்த எம்பெருமானாரைப் பிரிந்து வாடும் வாட்டத்தை வெளியிட்டுக்கொண்டு, அறிவில் குறைந்தவர்களின் ஆத்மாவுக்கு அந்த எம்பெருமானாரிடத்தில் பக்தியை வளர்க்கும் உணவாக, அழகிய தமிழ் ப்ரபந்தமாக இந்த ஆர்த்தி ப்ரபந்தத்தை அருளிச் செய்துள்ளார்.

வம்பவிழ்தார் வண்மை மணவாள மாமுனிகள்*
அம்புவியில் கால் பொருந்தா ஆர்த்தியினால்* – உம்பர் தொழும்
விண்ணுலகில் செல்ல விரைந்து எதிராசன் பதங்கள் *
நண்ணி உரைத்தார் நமக்கு

தேன் பெருகும் மாலையை அணிந்து, வள்ளல் தன்மையுடன் இருக்கும் மணவாள மாமுனிகள் யதிராஜரான எம்பெருமானாரைப் பிரிந்து இந்த நிலவுலகில் வாழ முடியாத ஆற்றாமையினால், நித்யஸூரிகள் நித்யமாக எம்பெருமானைத் தொழும் பரமபதத்தில் உள்ள எம்பெருமானாரின் திருவடிகளை விரைந்து சென்றடைய வேண்டும் என்று ஆசைப்பட்டதை நம்மைப் பார்த்து உபதேசிக்கிறார்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment