உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 41

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 40

தெள்ளாரும் ஞானத் திருக்குருகைப் பிரான் 

பிள்ளான் எதிராசர் பேரருளால் உள்ளாரும்

அன்புடனே மாறன் மறைப் பொருளை அன்றுரைத்தது

இன்ப மிகு ஆறாயிரம் 

நாற்பத்தொன்றாம் பாசுரம். திருக்குருகைப் பிரான் திருவாய்மொழிக்கு அருளிச்செய்த ஆறாயிரப்படி வ்யாக்யானத்தின் வைபவத்தை அருளிச்செய்கிறார்.

எம்பெருமானாராலே ஞான புத்ரராக அபிமானிக்கப் பட்டதால் பெற்றிருந்த ஞானத் தெளிவை உடையவரான திருக்குருகைப் பிரான் பிள்ளான், அந்த எதிராசராம் ஸ்ரீபாஷ்யகாரரின் நிர்ஹேதுக க்ருபையினாலே, திருவாய்மொழியின் மீதிருந்த பக்தியாலும் சேதனர்கள் மீதிருந்த க்ருபையினாலும், நம்மாழ்வாராம் மாறன் அருளிச்செய்த திருவாய்மொழிக்கு எம்பெருமானார் காலத்திலேயே அருளிய வ்யாக்யானம், அடியார்களுக்கு இன்பத்தைக் கொடுக்கக்கூடியதான ஆறாயிரப்படி வ்யாக்யானம். இது விஷ்ணு புராணத்தின் அளவிலே இருக்கும்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment