உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 40

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 39

முந்துறவே பிள்ளான் முதலானோர் செய்தருளும்
அந்த வியாக்கியைகள் அன்றாகில் – அந்தோ
திருவாய்மொழிப் பொருளைத் தேர்ந்துரைக்க வல்ல
குருவார் இக்காலம் நெஞ்சே கூறு 

நாற்பதாம் பாசுரம். திருவாய்மொழிக்கு ஆசார்யர்கள் அருளிய வ்யாக்யானங்களின் பெருமையை மேலும் கொண்டாடும்படி தன் நெஞ்சுக்கு அருளிச்செய்கிறார்.

நெஞ்சே! முற்காலத்திலே பிள்ளான் தொடக்கமான ஆசார்யர்கள் திருவாய்மொழிக்கு நம்மாழ்வாரின் திருவுள்ளக் கருத்தைத் தங்கள் ஆசார்யர்களிடம் கேட்டு உணர்ந்து, பொருத்தமான வ்யாக்யானங்களை அருளாமல் போயிருந்தார்கள் ஆகில், அந்தோ! இக்காலத்திலே திருவாய்மொழியின் சீரிய அர்த்தங்களை நன்றாகத் தெரிந்து கொண்ட சொல்லக்கூடிய ஆசார்யர்கள் யார் இருப்பார்கள்! நீயே கூறு.

திருவாய்மொழி த்வய மஹா மந்த்ரத்தை விளக்கும்படி அமைந்துள்ளது. த்வயத்தில் முதல் வரியிலே சொன்ன “பிராட்டியுடன் கூடி இருக்கும் எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணின் திருவடிகளை உபாயமாகப் பற்றுவது”, மற்றும் இரண்டாவது வரியில் சொன்ன “இவ்வாறு பிராட்டியுடன் கூடியிருக்கும் எம்பெருமானுக்குத் தன்னலமில்லாத தொண்டு புரிவதற்கு ப்ரார்த்திப்பது” ஆகிய விஷயங்களையே திருவாய்மொழியில் விளக்கமாக அருளியுள்ளார் நம்மாழ்வார்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment